*இடுபொருட்களின் சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைக்க உதவி செய்கிறது.

*தண்ணீரைச் சேமித்து வைத்து பயிர்களுக்குக் கொடுப்பதால் நீர்த் தேவை குறைகிறது.

*மண்ணில், காற்றோட்டம் ஏற்படுத்தி, பயிர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கிறது.

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானதுதான் இயற்கை விவசாயம். கால்நடைக் கழிவுகள் உரமாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகின்றன. மண்புழுக் கழிவு, மண்புழு உரமாகிறது. இப்படி, பல கழிவுகள் மிகச் சிறந்த உரமாகவும், பயிர்களுக்கான வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றன. அந்த வகையில், இயற்கையில் சில கனிமங்கள் சிதைவுறும்போது உருவாகும் வெர்மிகுலைட் என்ற கனிமம், இயற்கை வேளாண்மையில் சிறந்த ஊடகமாக செயல்பட்டு தண்ணீரைச் சேமித்து வைத்து பயிர்களுக்குக் கொடுக்க உதவியாக இருக்கிறது. உரங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை பயிர்கள் முழுமையாக எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து, அதை இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் சந்தைப்படுத்தி வருகிறது, தமிழ்நாடு கனிம நிறுவனம்.

மாடியில் தோட்டம் போட்டால், செடிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் வழிந்து மாடியெங்கும் பரவும், வெயிலில் இருந்து செடிகளைப் பாதுகாப்பது கடினமானது என்ற அச்சம் காரணமாக பெரும்பாலானவர்கள் ‘மாடித் தோட்டம் அமைக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தும், அதைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது வெர்மிகுலைட். இதை செடிகள் உள்ள பைகளில் இடும்போது, தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. எனவே, தொட்டியை விட்டோ, பையை விட்டோ தண்ணீர் வீணாக வெளியே வராது... அடுத்து தட்பவெப்ப நிலைகளினால் செடிகள் பாதிக்கப்படுவதில் இருந்து காக்கிறது.

இதைப்பற்றி கடந்த 10.05.16 தேதியிட்ட இதழில், ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்கங்களுடன் இங்கே வெர்மிகுலைட் பற்றிப் பேசுகிறார் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வள்ளலார். ‘‘வெர்மிகுலைட் பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊடகமாகச் செயல்படுகிறது. இதைப் பயிர்களுக்கு இடுவதற்கு வசதியாக துகள்களாகக் கொடுக்கிறோம். இந்தத் துகள்களை மண்ணில் இடும்போது, மண்ணில் காற்றோட்டம் கிடைக்க உதவிசெய்து, செடிகளின் வேர்கள் எளிதில் ஊடுருவதற்கும் உதவுகிறது. வெர்மிகுலைட்டில் உள்ள சிறுதுளைகள், தண்ணீரை நிலைநிறுத்திடவும் உதவுகிறது. இது, மண்ணின் கார அமில (பி.ஹெச்-7) நிலையை நிறுத்துவது, கேட்டயான் பரிமாற்றத்தன்மை போன்ற வேதியியல் பண்புகளைக் கொண்டது.

இந்தத் துகள்களில் கனிமசத்துக்கள் நிறைந்து உள்ளன. இந்தத் துகள்களின் மேலுள்ள தன்மை கனிமசத்துக்களை உரச்சத்தாக மாற்றக்கூடியது. பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துக்களை மண்ணில் இடும்போது, அதன் முழுமையான பலன் செடிகளுக்குச் சென்று சேரும் எனச் சொல்ல முடியாது. ஆனால், நுண்ணூட்டச் சத்துக்களுடன் வெர்மிகுலைட் கலந்து இடும்போது, நாம் மண்ணில் இடும் சத்துக்கள் முழுவதும் வீணாகாமல் செடிகளுக்குச் சென்று சேர்கின்றன. எனவே, இது மிகச் சிறந்த ஊடகமாகச் செயல்படுகிறது என்பது, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கோள்ளப்பட்ட ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரைஸோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கலந்த கலவையில் நடப்பட்ட செடியின் வளர்ச்சியை விட, வெர்மிகுலைட் கலந்த கலவையில் வளர்க்கப்பட்ட செடியின் வளர்ச்சியை விட சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெர்மிகுலைட் கனிமத்துடன், கரி, ஹியூமிக் அமிலம் பழுப்பு நிலக்கரி ஆகியவைக் கலந்து செரிவூட்டி விற்பனை செய்கிறோம்.

வெர்மிகுலைட்டின் நீர் மேலாண்மைத் தன்மை!

குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவும்போது, தோட்டம் எப்படி அமைப்பது என்று கவலைப்படுபவர்களுக்கு வெர்மிகுலைட் நல்ல தீர்வாக இருக்கும். வெர்மிகுலைட்டை மண்ணுடன் கலந்து செடிகளை நடவு செய்தால், குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி மாடித்தோட்டம் அமைக்கலாம். மண் மற்றும் பிற இயற்கை உரங்களுடன், வெர்மிகுலைட் கலந்து, அந்தக் கலவையில் செடிகளை நடவுசெய்தால், ஒருமுறை ஊற்றும் தண்ணீரை அடுத்த சில நாட்கள் வரை, வெர்மிகுலைட் தன்னுள் பிடித்துவைத்து, செடிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கும். அத்துடன், இதில் உள்ள சில கனிமச்சத்துக்கள் பயிர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதுடன், பயிர்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்துகின்றன.

செறிவூட்டப்பட்ட வெர்மிகுலைட், தண்ணீரில் கலந்துள்ள கடின உலோகங்களை அகற்றி சுத்தப்படுத்தும் தன்மைகொண்டது. இதனால், வெர்மிகுலைட் கலந்த கலவையைப் பயன்படுத்தி, தொழிற்கூடங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில்கூட பயிர்களை வளர்க்கலாம்.
வெர்மிகுலைட் பயன்படுத்தி,

தோட்டத்தில் செடி வளர்க்கும் முறை!

செடிகளின் வேர் நீளத்தைவிட 6 அங்குலம் ஆழமாக குழி எடுக்க வேண்டும். குழி ஆறிய பின்னர், குழியிலிருந்து எடுத்த மண்ணுடன் மூன்றில் ஒருபங்கு வெர்மிகுலைட்டை கலக்கவேண்டும்.

செடியை குழிக்குள் வைத்து, வேரைச் சுற்றிலும் மேற்படி வெர்மிகுலைட் கலந்த மண்ணைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும். வெர்மிகுலைட் கலந்த மண்ணுடன் தொழுவுரம், மண்புழு உரங்கள் ஆகியவற்றையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். மண்ணில் கலந்துள்ள வெர்மிகுலைட், வேர்கள் எளிதில் ஊடுருவிச் செல்வதற்கும், சல்லிவேர்கள் நன்கு படர்ந்து வளரவும் வழிவகைச் செய்கிறது. வேர்களுக்கு காற்றோட்டத்தைத் தருகிறது. வேர்கள் சூரியவெப்பத்தினாலும், காற்றினாலும் வறட்சியடைவதிலிருந்து வெர்மிகுலைட் பாதுகாக்கிறது.

செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான மண்ணிலுள்ள அமோனியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை மிக எளிதில் வேர்கள் உறிஞ்சிட வழிவகைச்செய்யும் தன்மைகொண்டது வெர்மிகுலைட். இதன் கார அமிலத்தன்மை நிலை 7 ஆக இருப்பதால், செடிகள் செழித்து வளரும். வளர்ச்சிக்கு உதவும் அதே நேரம் செடிகளில் நோய் பரவுவதையும் கட்டுப்படுத்துகிறது,’’ என்று சொன்ன வள்ளலார், வெர்மிகுலைட் மிகவும் எடை குறைவானதும், எளிதில் பிறபொருட்களுடன் கலந்திடும் தன்மையும் உடையது. எனவே, விவசாயிகளும், மாடித் தோட்டம் அமைப்பவர்களும், மற்ற இடுபொருட்களுடன் வெர்மிகுலைட்டை கலந்து இட்டால், நாம் கொடுக்கும் இடுபொருட்களின் முழுமையான பலனை அடையலாம்” என்றார் உறுதியான குரலில்.

தொடர்புக்கு,
தமிழ்நாடு கனிம நிறுவனம், 31,
காமராசர் சாலை, சேப்பாக்கம்,
சென்னை- 600 005.,
தொலைபேசி: 044-28410382, 28522497.

வெர்மிகுலைட் என்றால் என்ன?

இது, இயற்கையாகவே மண்ணில் உள்ள ஒருவகை கனிமம். தெளிவாகச் சொன்னால், வெர்மிகுலைட் மைக்கா பைலோசிலிகேட் வகைப்பாட்டில் உருவான, ‘மெக்னீசியம் இரும்பு அலுமினிய சிலிக்கேட் ஹைட்ரேட்’ கனிமமாகும்.

பையோடைட் மற்றும் பிளகோபைட் வகை மைக்காக்கள் சிதைவுறுவதால், வெர்மிகுலைட் மைக்கா உருவாகிறது. இந்த கனிமம் மிகவும் எடை குறைவானது. இது, நீண்டு வளைந்து முறுக்குத் தன்மையுடன் இருப்பதால், வெர்மிகுலாரிஸ் (புழுக்கள் போன்ற) என்று அழைக்கப்படுகிறது. லத்தீன் வார்த்தையிலிருந்து வெர்மிகுலைட் என்ற பெயரிட்டு இருக்கிறார்கள்.

ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா மற்றும் பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வெர்மிகுலைட் மைக்கா காணப்படுகிறது. தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் வட்டத்தில் செவ்வாத்தூர் என்ற இடத்தில் மட்டுமே ‘வெர்மிகுலைட்’ பொருளாதார அளவில் பலன் தரும் வகையில் வெட்டியெடுக்கும் அளவுக்குக் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் வெர்மிகுலைட் கிடைத்தாலும், வெட்டியெடுத்து உபயோகப்படுத்தக்கூடிய அளவுக்கு இல்லை. செவ்வாத்தூர் கிராமத்தில் கிடைக்கும் வெர்மிகுலைட், ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் தரம் வாய்ந்த வெர்மிகுலைட்டுக்கு சமமானதாகும். இந்த வெர்மிகுலைட் அதிகவெப்பத்துக்கு உட்படுத்தும்போது (7,000 முதல் 10,000) அதன் அளவில் 8 முதல் 14 மடங்கு விரிவடையும். இக்கனிமம் மிக மெல்லிய 0.1 மி.மீ அளவுடைய ஏடுகளாகப் பிரித்தெடுக்கக்கூடிய தன்மையுடையது. இந்த ஏடுகள் வளையும் தன்மையுடையவை.

வெர்மிடைல் விளக்கம்!

10.05.2016 தேதியிட்ட இதழில் மாடித் தோட்டத்துக்கு ஏற்ற வெர்மிகுலேட் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கடினப்பாறைகளில் இருந்து கிரானைட் வெட்டி எடுக்கும் போது கிடைக்கும் வெர்மிகுலேட் எனும் கனிமத்தைப் பயன்படுத்தி வெர்மிடைல் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அது தவறான தகவல். மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட மைக்கா வகை கனிமத்தை அதிகம் சூடுபடுத்தும் போது வெர்மிகுலைட் பிரிந்து வருகிறது. வெர்மிகுலைட் கனிமம், 5 வகைகளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. அதில் சரிவர சந்தைப்படுத்த முடியாத ஒருவகை வெர்மிகுலைட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் வெர்மிடைல்ஸ் என்னும் கூரை ஓடு என்பதுதான் சரியானது. தவறான தகவலுக்கு வருந்துகிறோம்.

-ஆசிரியர்