Published:Updated:

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...
பிரீமியம் ஸ்டோரி
குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

கால்நடைப் பண்ணையாளர்களுக்கு கைகொடுக்கும் கருவிகள்... துரை.நாகராஜன்

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

கால்நடைப் பண்ணையாளர்களுக்கு கைகொடுக்கும் கருவிகள்... துரை.நாகராஜன்

Published:Updated:
குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...
பிரீமியம் ஸ்டோரி
குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில், விவசாயத்துக்குத் தேவையான கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவதுபோல... கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிப்பண்ணை, அவ்வப்போது பண்ணைக் கருவிகளை வெளியிட்டு வருகிறது. அதுகுறித்து கடந்த இதழில், வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இங்கே இடம்பிடிக்கிறது.

ஆடுகளுக்கான உண்ணி நீக்கும் குளியல் தொட்டி!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

9 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி உயரமும் 80 கிலோ எடையும் கொண்டது, இந்தக் குளியல் தொட்டி. 800 லிட்டர் கொள்ளவு கொண்ட இத்தொட்டி நகரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, உண்ணி, தெள்ளுபூச்சி போன்ற புற ஒட்டுண்ணிகளை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் குளியல் தொட்டியாகும். ஆட்டுப் பண்ணையாளர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியது. இதில், தண்ணீரை நிரப்பவும், வெளியேற்றவும் வசதி செய்யப்பட்டுள்ளதால், தொட்டியைச் சுத்தம் செய்வது எளிது. ஓர் ஆடு சுமார் 30 நொடி நேரம் மருந்துத் தொட்டியில் இருந்தால் போதுமானது. இதன் விலை 19 ஆயிரத்து 200 ரூபாய்.

ஆடுகளுக்கான தீவனத்தட்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

மரத்தால் செய்யப்பட்ட ஆடுகளுக்கான இந்த தீவனத்தட்டு, பசுந்தீவனங்கள் விரையமாவதைத் தடுப்பதோடு, தொற்றுநோய் பரவுவதையும் தடுக்கிறது. இதைச் சுலபமாக இடம் மாற்றி வைக்கமுடியும். ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீரால் பசுந்தீவனங்கள் அசுத்தப்படுவது இதன் மூலம் தவிர்க்கப்படும். ஆடுகள் சௌகரியமாக பசுந்தீவனங்களை உட்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8 ஆடுகளுக்கு ஒரு தீவனத்தட்டு போதுமானது. இந்தத் தட்டில், ஆடுகள் ஆர்வமுடன் தீவனம் எடுத்துக்கொள்வதால் விரைவில் அதிக எடை கிடைக்கும். இது, அனைத்து ஆட்டுப் பண்ணையாளர்களுக்கும் ஏற்றது. இதன் விலை 6 ஆயிரம் ரூபாய்.

நடமாடும் மருத்துவ வண்டி!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

ஆடு, மாடு, முயல், பன்றி, கோழி ஆகியவற்றுக்கு எளிதில் மருத்துவச் சிகிக்சை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மருத்துவ வண்டி இது. இதை எளிதாக கொட்டகைக்குள் எடுத்துச் செல்ல முடியும்.  உறுதியாகவும், சுலபமாக நகரும் வகையிலும் இந்த வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊசிகள், மருந்துகள், டானிக்குகள் ஆகிய பொருட்கள் வைக்க தனித்தனி இரும்பு மற்றும் பிளாஸ்டிக்காலான அலமாரிகள் இதில் உள்ளன. தவிர, மருத்துவக் கழிவுகளை வைக்க குப்பைத்தொட்டியும் உள்ளது. நுண் அலைநோக்கி, நுண்ணோக்கி, ஆக்ஸிஜன் சிலிண்டர், திரவ நைட்ரஜன் சிலிண்டர் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல முடியும். இக்கருவிகளை இயக்க மின்சார இணைப்பும் கொடுக்க முடியும்.  இதன் விலை 12 ஆயிரம் ரூபாய்.

நகரும் பன்முனை நீர்த்தெளிப்பான்!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

பசுந்தீவன வயலுக்கு தண்ணீர் தெளிப்பதற்காக நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தெளிப்பான் இது. மிக எளிதான கட்டுமான அமைப்பைக் கொண்டது. ஒரு நிமிடத்துக்கு 50 லிட்டர் நீரைத் தெளிக்கும் திறனுடையது. 20 நிமிடங்களில் 10 பன்முனை நீர்த் தெளிப்பான்கள் மூலம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு பாசனம் செய்யலாம். இரண்டு நீர்த் தெளிப்பான்களுக்கு ஒரு ஹெச்.பி நீர் மூழ்கி மோட்டார் தேவைப்படும். இதன் மூலம் தண்ணீர் செலவை வெகுவாகக் குறைக்கலாம். மிக விரைவில் பாசனம் செய்து விடலாம். பன்முனை நீர்த் தெளிப்பானின் விலை 1,800 ரூபாய். சக்கரத்துடன் கூடிய பன்முனை நீர்த் தெளிப்பானின் விலை 2 ஆயிரத்து 700 ரூபாய்.

வெண்பன்றிகளுக்கான பச்சைக் குத்தும் சாதனம்!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

வெண்பன்றிகளுக்கான அடையாள எண்ணை பச்சைக் குத்தும் சாதனம் இது. இதன் மூலம் எண்களைப் பதிவிட்டால், மூன்று ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும். பொதுவாக வெண்பன்றியை அடையாளம் காண, காதுமடலில் வெட்டுக் குறி மற்றும் அடையாளக் குறி இடுவார்கள். இப்படி குறியிட அதிக வேலையாட்கள் தேவை. நேரமும் அதிகம் தேவை. ஆனால், இந்த பச்சைக் குத்தும் கருவி மூலம் மிக விரைவாக, சுலபமாக அடையாளம் இடலாம். இதில் ரத்தம் விரயமாகாது. பன்றிகளுக்கு பச்சைக் குத்தி குறி இடுவதன் மூலம் பல்வேறு காரணங்களுக்காக அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். இதன் விலை 5 ஆயிரத்து 500 ரூபாய்.

உலர்தீவனம் நறுக்கும் சாதனம்!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

கால்நடைகளுக்கு உலர் தீவனங்களை 3 முதல் 4 அங்குல நீளத்தில் நறுக்கிக் கொடுக்கும்போது, தீவனம் விரயமாவது தடுக்கப்படும். தவிர எளிதில் செரிமானமாகும். இந்தத் தீவனம் நறுக்கும் சாதனம் மூலம் உலர் தீவனங்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்ட முடியும். 5 அடி உயர இரும்புத்தடியுடன் உலர்தீவனம் வெட்டும் கத்தி இணைக்கப்பட்டு, மிக எளிய முறையில் நறுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நறுக்கிய தீவனத்தை ஒரு பிளாஸ்டிக் கூடையிலோ அல்லது அகன்ற மூங்கில் கூடையிலோ போட்டு உண்ண வைத்தால், சுத்தமான தீவனம் கால்நடைகளுக்குக் கிடைக்கும். இந்தக் கருவியின் விலை 6 ஆயிரம் ரூபாய்.

கன்றுக் குட்டிக்களுக்கான கொட்டகை!

குளியல் தொட்டி, தீவனத்தட்டு, மருத்துவ வண்டி...

பிறந்த கன்றுகளை சுத்தமாக, ஆரோக்கியமாக பராமரிப்பதற்காக அமைக்கப்பட்ட கொட்டகை இது. பத்தரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் கொண்டது. இதில் நான்கரை அடி நீள கூரை வேயப்பட்ட உட்பகுதி, ஆறு அடி நீளம் கொண்ட வெளிப்பகுதி என இரண்டு பிரிவுகள் உள்ளன. கொட்டகையின் பின்புற உயரம் 5 அடி, முன்புற உயரம் 6 அடி. கன்றுக்குட்டி எளிதாகச் சென்று வருமாறு கொட்டகையின் பின்புறத்தில், கதவு உள்ளது. தீவனத் தொட்டி, தண்ணீர் தொட்டி மற்றும் பால்புகட்டுவதற்கான பால் ஊட்டி ஆகிய அமைப்புகள் இதில் உள்ளன. கன்று, தீவனம் உண்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் தீவனத்தொட்டியின் முன்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால், சுவாச நோய்கள், தொற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இதை எளிதில் சுத்தம் செய்யலாம். இதன் விலை 15 ஆயிரம் ரூபாய்.

தொடர்புக்கு,
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை, மாதவரம்,
தொலைபேசி: 044-25551571.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism