Published:Updated:

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?
தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

பசுமைக் குழு, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பிரீமியம் ஸ்டோரி
தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

2016-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்துக்கான (ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் எடுக்கப்பட்ட ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில், சராசரி மற்றும் சராசரிக்குக் குறைவான மழையே இந்தாண்டு பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்:

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

அரியலூர், சென்னை, ஈரோடு, கடலூர், கரூர், மதுரை, தேனி, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள்.

தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்:

கோயம்புத்தூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர்.

சராசரி மழையளவு (நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து +/- 19 சதவிகிதம்)

சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை (நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து - 19 சதவிகிதம் -59 சதவிகிதம் வரை)


இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர். பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, பேசினோம். “இந்தியாவைப் பொறுத்தவரை தென்மேற்குப் பருவமழையே பரவலான மழை கொடுக்கும் பருவமாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மேற்குப் பருவ மழை அளவு 32 சதவிகிதம்தான் கிடைக்கிறது. வடகிழக்குப் பருவமழை அதிகபட்சமாக 45 சதவிகிதம் கிடைக்கிறது. வடகிழக்குப் பருவமழைக்கான முன்னறிவிப்பு செப்டம்பர் மாத இறுதியில் வெளிவரும்.

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

இந்தாண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரிக்கு குறைவான மழை பெய்யும் என கணக்கிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாமை, வரகு, தினை, பனிவரகு, சோளம், கம்பு, காராமணி, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிர் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சாராசரி மழையளவு உள்ள மாவட்ட விவசாயிகள் பாசன வசதிகள் இருப்பின் கரும்பு, நெல், மக்காச்சோளம் போன்ற இறவைப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.

கோயம்புத்தூர் மாவட்டம், மலை மறைவுப் பகுதியாக இருப்பதால், காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் கடந்தாண்டை போலவே சராசரிக்கும் 20 சதவிகிதம் குறைவான மழையே இந்தாண்டும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெப்பநிலை கூடுதலாக உள்ள மாவட்டங்களில் (நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம்) காற்றில் ஈரப்பதம் குறைவதால், மழை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, காற்றில் ஈரப்பதம் இருந்து வரும் 28 மாவட்டங்களில் இந்தாண்டு சராசரி மழைபொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நீலகிரி, சிவகங்கை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மானாவாரி விவசாயத்துக்கு ஓரளவுக்கு மழை பெய்யும். மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மானாவாரி விவசாயத்துக்கு எதிர்பார்ப்பதைவிட குறைவான அளவே, இந்தாண்டு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் தண்ணீர் சேமிப்பு வளத்தைப் பொறுத்து பயிர் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, வருகின்ற மழைக் காலங்களில் மழைநீரை திறம்பட சேமித்து, நிலத்தடி நீர்வளத்தையும், பயிர்களுக்குத் தேவையான நீரை பெருக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு