Published:Updated:

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...
பிரீமியம் ஸ்டோரி
வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

ஜீரோ பட்ஜெட் மலைத்தோட்ட சாகுபடி!ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

ஜீரோ பட்ஜெட் மலைத்தோட்ட சாகுபடி!ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...
பிரீமியம் ஸ்டோரி
வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...
வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள்... என விவசாயத்தை விட்டு வெகுதூரம் ஒதுங்கி நின்றவர்கள் பலரையும் இயற்கை விவசாயத்துக்கு அழைத்து வந்ததில் பெரும்பங்கு ‘பசுமை விகட’னுக்கு உண்டு. அப்படி விவசாயத்துக்கு வந்த முதல் தலைமுறை விவசாயிகள் பலரையும் அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, பசுமை விகடன். அவர்களில் ஒருவர் திண்டுக்கல் நகரைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டி மலையான சிறுமலையில் முதன்முறையாக இயற்கை முறையில் மலைவாழை சாகுபடியில் இறங்கியிருக்கிறார், ராஜேஷ்கண்ணா. அதோடு, காய்கறிகளையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

சிறுமலை, அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ளது ராஜேஷ்கண்ணாவின் தோட்டம். அகஸ்தியர்புரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பத்து நிமிட நடையில் ராஜேஷ்கண்ணாவின் தோட்டத்தை அடையலாம்.  ஒரு காலைப் பொழுதில், பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்த ராஜேஷ்கண்ணாவைச் சந்தித்தோம்.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று தொழிலதிபர்...

இன்று இயற்கை விவசாயி!


“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திண்டுக்கல்தான். எங்களுக்கு பூர்வீக தொழில், வறுகடலை மில் தொழில். வறுகடலை மில் நடத்திக்கிட்டே அப்பா, ஒரு ஜின்னிங் ஃபேக்டரி ஆரம்பிச்சார். நான் காலேஜ் முடிச்சதும் ஜின்னிங் ஃபேக்டரியைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். அந்தத் தொழிலுக்கு இங்க மூணு மாசம்தான் சீசன். அதனால, நான் வட இந்தியாவில் ஜின்னிங் தொழில் செய்யப் போயிட்டேன். தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தலாம்னு திண்டுக்கல்ல ஒரு ஸ்பின்னிங் மில் ஆரம்பிச்சேன். 2009-ம் வருஷம், ஸ்பின்னிங் தொழில்ல நஷ்டம் ஏற்பட ஆரம்பிக்கவும் அதைத் தொடர முடியலை. அதுக்கப்பறம், ஃபேவர் பிளாக் கல் தயாரிப்பு, சிமென்ட், பெயின்ட் டீலர்ஷிப்னு இறங்கிட்டேன். இந்தத் தொழில் எல்லாம் நல்லா நடந்துகிட்டு இருக்கு.

நான், ‘நாணயம் விகடன்’ புத்தகத்தை விரும்பிப் படிப்பேன். ஒருமுறை கடையில் நாணயம் விகடன் வாங்கினப்போ, மீதி சில்லரை இல்லாததால, ‘பசுமை விகடன்’ புத்தகத்தைக் கொடுத்துட்டார், கடைக்காரர்.

அதைப்படிக்க ஆரம்பிச்சதும், எனக்கு இயற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, விவசாய ஆசை வந்துடுச்சு. நாலு வருஷமா தொடர்ந்து பசுமை விகடனைப் படிச்சுட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப நாளாவே சிறுமலையில் இடம் வாங்கி ‘கெஸ்ட் ஹவுஸ்’ கட்டணும்னு ஆசை இருந்துச்சு. அதுக்காக நண்பர்கள்கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். திடீர்னு ஒரு நாள் மலையில ஒரு காடு விலைக்கு இருக்குதுனு நண்பர் மூலமா  கேள்விப்படவும், உடனே அதை வாங்கிட்டேன். என் கெஸ்ட் ஹவுஸ் ஆசையைத் தற்காலிகமா தள்ளி வெச்சுட்டு இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன்” முன்கதை சொன்ன ராஜேஷ்கண்ணா தொடர்ந்தார்.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

“இந்த இடத்தை வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சு. மொத்தம் 11 ஏக்கர்.  தோட்டத்துக்குள்ளேயே ஒரு சின்ன ஓடை இருக்கு. அதுல எப்பவும் தண்ணீர் வந்துகிட்டே இருக்கும். வெயில் காலத்துல கூட கொஞ்சமா கசிவு இருந்துகிட்டே இருக்கும். அதனால தோட்டத்துல இருக்கிற ரெண்டு கிணத்துலயும் எப்பவும் தண்ணி இருக்கும். அதை டீசல் மோட்டார் மூலமா எடுத்து, சொட்டுநீர்ப் பாசனம்தான் பண்றேன். வருஷம் முழுசும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை. எனக்கு விற்பனை செய்தவங்க அதுல ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் முன்னாடி குத்தகைக்கு விட்டிருந்திருக்காங்க. அதுல சௌசௌ விவசாயம் நடந்திருக்கு. அவங்க ரசாயனம் போட்டுதான் விவசாயம் செய்திருக்காங்க. மீதிஇடம் முழுக்க, புதர் மண்டித்தான் கிடந்துச்சு. கொஞ்சம் மிளகுக் கொடிகள் இருந்துச்சு. ஆனா, அதுவும் பராமரிப்பில்லாம கிடந்துச்சு. புதர் மண்டியிருந்ததால, சூரிய ஒளி கிடைக்காம மிளகுக் கொடிகள் எல்லாம் பட்டுப்போற நிலைமையில் இருந்தது. புதர்களையெல்லாம் சுத்தப்படுத்தி, முதல்ல 3 ஆயிரம் மலைவாழைக் கன்னுகளை நடவு செஞ்சேன்.

மலைவாழை ரகங்கள்ல சிறுமலை ரகம் தனிச்சுவையா இருக்கும். நான் இயற்கை விவசாயம்னு முடிவு பண்ணிட்டதால, விதைக்கிழங்கு வாங்குறதுக்காக, இயற்கை விவசாயத்துல வாழை சாகுபடி பண்றவங்களைத் தேடினேன். சிறுமலை ரகத்தை எடுத்துகிட்டுப் போய் ஒருத்தர் கொடைக்கானல்ல இயற்கை முறையில் சாகுபடி பண்றார்ங்கிற தகவல் கிடைச்சது. அவர்கிட்ட இருந்துதான் மறுதாம்பு கன்னுகளை வாங்கிட்டு வந்து நட்டேன். அதனால ‘முழு இயற்கை வாழை’னு இதை சொல்ல முடியும்.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

‘பசுமை விகடன்’ல படிச்சதை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயாரிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல இருந்தே ஜீரோ பட்ஜெட் முறைதான் என்னை அதிகமா ஈர்த்தது. இடையில் பல்லடத்துல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல திண்டுக்கல்ல இருந்து நண்பர் ஒருத்தரோட தோட்டத்துல இருந்துதான் சாணம், மாட்டுச்சிறுநீர் எடுத்துகிட்டு வந்து பயன்படுத்தினேன். அங்க கலப்பின மாடுகள்தான் இருந்தது. ஆனா, ஜீரோ பட்ஜெட்டுக்கு நாட்டு மாடுகள்தான் சரிப்பட்டு வரும்ங்கிறதால நாலு காங்கேயம் மாடுகளை வாங்கினேன். இங்க அதுகளை மேய்க்கிறதுக்கு கஷ்டமா இருந்ததால, ஒரு மாட்டை மட்டும் வெச்சுக்கிட்டு மீதியை விற்பனை செய்துட்டேன். அந்த மாடு மூலமா கிடைக்கிற சாணம், மூத்திரத்தைத்தான் இடுபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துறேன்” என்ற ராஜேஷ்கண்ணா தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

ஜீரோ பட்ஜெட்டில் செழிக்கும் பயிர்கள்!

“ஒவ்வொரு வாழை மரத்தைச் சுத்திலும் மொச்சையையும், தட்டைப்பயறையும் ஊடுபயிரா விதைச்சேன். ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்ததுலேயே எல்லா பயிரும் நல்லா வந்துச்சு. இப்போ அதையெல்லாம் அறுவடை செய்தாச்சு. ரெண்டையும் காயவெச்சு எடுத்து வெச்சிருக்கேன். கேக்குறவங்களுக்கு விற்பனை செய்துகிட்டு இருக்கேன். அடுத்தடுத்து, ரெண்டாயிரத்து ஐநூறு மிளகுக் கொடிகள், ஆயிரம் கிராம்புச் செடிகள், ஆயிரத்து ஐநூறு எலுமிச்சைச் செடிகள், ஐநூறு நாரத்தைச் செடிகள், இருநூறு பாக்குச் செடிகள்னு நட்டு வெச்சேன். ஏற்கெனவே சௌசௌ இருந்த இடத்துல அவ்வளவு செடிகளையும் அழிச்சுட்டு, கிருஷ்ணகிரி பக்கம் இருந்து இயற்கையில் விளைஞ்ச சௌசௌ விதைகளை வாங்கிட்டு வந்து நடவு செஞ்சிருக்கேன். எல்லாத்தையுமே ஜீரோ பட்ஜெட் முறையில்தான் பராமரிக்கிறேன்.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

சமவெளி காய்கறிகள், மலையில்...

மொச்சையையும், தட்டைப்பயறையும் அறுவடை செய்துட்டு... ஒவ்வொரு வாழையைச் சுத்திலும் கத்திரி, மிளகாய், சுரைக்காய்னு நடவு செய்திருக்கேன். தோட்டம் முழுக்க தானாவே மிளகுத் தக்காளிக் கீரை (மணத்தக்காளி) செடிகளும், காட்டுச் சுண்டைக்காய்ச் செடிகளும் நிறைய இருந்தது. அதை எல்லாத்தையும் முறைப்படுத்தி நடவு செய்திருக்கேன். அதோட, அரைக்கீரை, முளைக் கீரையையும் நடவு பண்ணியிருக்கேன். சோதனை முயற்சியில ஆயிரம் அடி நீளத்துல பாத்தி எடுத்து இஞ்சியையும் நடவு செஞ்சிருக்கேன். பொதுவா, மலைகள்ல ஆரஞ்சு, காபி, வாழைனுதான் நடவு செய்வாங்க. ஆனா, காய்கறிகளை சோதனைமுறையில நடவு செய்ததுல நல்லாவே வருது. அதனால, இன்னும் பதிமூணு வகை காய்கறிகளை நடவு செய்யலாம்னு இருக்கேன்.

பூச்சி இல்லை... நோய் இல்லை!

வாழை நடவு செஞ்சு இப்போ பன்னெண்டு மாசம் ஆச்சு. இப்போதான் ஒவ்வொரு மரமா குலை தள்ள ஆரம்பிச்சிருக்கு. ரெண்டு மூணு மாசத்துல கொஞ்சம் கொஞ்சமா அறுவடைக்கு வரும். இந்தப் பகுதியில வாழையில தண்டுத் துளைப்பானைத் தடுக்க ரசாயன மருந்தை ஊசி மூலமா செலுத்துவாங்க. வேர் அழுகலைத் தடுக்கிறதுக்காக தூர்ல குருணை மருந்து வைப்பாங்க. இலைக்கருகல் நோயைத் தடுக்க பூச்சிக்கொல்லி அடிப்பாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல ஆறு தடவை பூச்சிக்கொல்லி நஞ்சைப் பயன்படுத்துவாங்க. என் தோட்டத்து வாழையை இதுவரை எந்த நோயும் தாக்கலை. பூச்சிகளும் வரவே இல்லை. இருந்தாலும் நான், வருமுன் தடுக்குறதுக்காக மூலிகைப் பூச்சிவிரட்டியை அப்பப்போ அடிச்சு விட்டுடுவேன். அதுக்கான எல்லா மூலிகையும் தோட்டத்துலேயே இருக்கு. வேப்பிலையை மட்டும்தான் கீழ இருந்து கொண்டு வரணும். அதில்லாம வாழை இலையைக்கூட இதுவரை கழிக்கலை. தானா காய்ஞ்சு விழட்டும்னு விட்டாச்சு.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

இனிமேல்தான் இ.எம்!

மூணு நாளைக்கு ஒரு தடவை செழிம்பா ஜீவாமிர்தத்தைக் கொடுத்துடுவோம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. இயற்கை முறைங்கிறதால, வாழை மரங்கள் எல்லாம் நல்லா தடிமனா வளர்ந்து நிக்குது. இனிமேதான், இ.எம், மீன் அமினோ அமிலம், தேமோர்க்கரைசல் மூணையும் பயன்படுத்தலாம்னு இருக்கேன்.

களை எடுக்கும் செலவு மிச்சம்!

மலைக்காடுங்கிறதால நிலத்துல ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கும். அதனால, களைகள் அதிகமா மண்டும். ஆரம்பத்துல களைகள் எடுக்கிறதுக்கே நிறைய செலவு செய்துகிட்டு இருந்தேன். அப்பறம்தான் ஜீரோ பட்ஜெட் முறையில அதெல்லாம் உயிர்மூடாக்குனு தெரிஞ்சுகிட்டு அப்படியே விட ஆரம்பிச்சிட்டேன். ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல களைகள் வளர்ந்துட்டா ‘ப்ரஷ் கட்டர்’ மூலமா வெட்டி அப்படியே மூடாக்கா பரப்பிடுவேன். அதனால இப்போ, களையெடுக்கிற செலவும் இல்லாமப் போயிடுச்சு.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

ரசாயன மண்ணை வளமாக்கிய கனஜீவாமிர்தம்!

சௌசௌ வயல்லயும் இதேமாதிரிதான் பராமரிப்பு. ஏற்கெனவே ரசாயனம் போட்ட இடம் அது. அங்க ஏற்கெனவே பந்தல் இருந்ததால அதே இடத்துல நான், நடவு செஞ்சேன். அதுக்கும் ஜீவாமிர்தம் மட்டும்தான் கொடுக்கிறேன். நிலத்துல இருக்கிற ரசாயனத்தைப் போக்குறதுக்காக கனஜீவாமிர்தத்தை அதிகளவுல கொட்டி நிலத்தை வளப்படுத்தியிருக்கேன். அதுலயும் பூச்சித்தாக்குதலோ, நோய்த்தாக்குதலோ இதுவரை வரலை. வழக்கமா சௌசௌ கொடியில தினமும் ஆட்களை வெச்சு இலைகளைக் கிள்ளி விடுவாங்க. ஆனா, இங்க இலை கிள்ளுற வேலையே இல்லை. தானாவே காய்ஞ்சு விழட்டும்னு அப்படியே விட்டாச்சு. நடவுக்கப்பறம் அறுவடை மட்டும்தான் வேலை.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

11 ஏக்கருக்கு 3 வேலையாட்கள் மட்டுமே!

ஜீரோ பட்ஜெட் விவசாயங்கிறதால 11 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து ஒருத்தரை மட்டும்தான் வேலைக்கு வெச்சிருக்கேன். எல்லா வேலையையும் அவரே பார்த்துக்குவார். அப்பப்போ தேவைக்கு மட்டும் ரெண்டு பெண்களை வேலைக்குக் கூப்பிட்டுக்குவார்” என்ற ராஜேஷ்கண்ணா, வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தால் லாபம்!

“இப்போ, கத்திரி, கீரை, சௌசௌ, மிளகாய் எல்லாம் அறுவடையில இருக்கு. தேவையைப் பொறுத்து தினமும் அறுவடை செஞ்சு விற்பனை செய்துகிட்டிருக்கேன். வாரம் 450 கிலோ அளவுக்கு சௌசௌ கிடைச்சுக்கிட்டிருக்கு. தினமும் 25 கட்டு அளவுல கீரைகள் கிடைச்சுக்கிட்டிருக்கு. கத்திரி, மிளகாய் எல்லாம் ஒரு நாளைக்கு 4 கிலோ, 5 கிலோனு கிடைச்சுக்கிட்டிருக்கு. நண்பர்கள், சொந்தக்காரங்க, இயற்கை விவசாய நட்புகள் எல்லாத்துக்கும்தான் இப்போதைக்கு விற்பனை செய்துகிட்டு இருக்கேன். இதுவரைக்கும் தனித்தனியா கணக்கு எழுதி வைக்கலை.

வாரம் 25 ஆயிரம் ரூபாய்.... மலைவாழை, கத்திரி, மிளகாய், கீரைகள்...

கத்திரி, கீரை, சௌசௌ, மிளகாய் எல்லாம் சேர்த்து, வாரத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விற்பனையாகுது. அதுல 5 ஆயிரம் ரூபாய் செலவு போக வாரம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்றதாலதான் லாபம் நிக்குது. இல்லாட்டி இந்தப் பணம், 11 ஏக்கர்ல களை எடுக்கவே பத்தாது. வாழை அறுவடைக்கு வர ஆரம்பிச்சுட்டா, வாரம் 8 ஆயிரம் பழம் வரை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அது மூலமா வாராவாரம் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும்“ என்றார், கண்களில் நம்பிக்கை மின்ன!

தொடர்புக்கு,
ராஜேஷ்கண்ணா
செல்போன்: 90950-22022.

பாலம் அமைத்த பசுமைச் சந்தை!

“என்னோட நெருங்கின உறவுக்காரர் ஒருத்தர் திண்டுக்கல் நாகல்நகர் சந்தைப் பேட்டையில மலைவாழை, பலாப்பழ கமிஷன் மண்டி வெச்சிருக்கார். நான் சிறுமலையில இயற்கை விவசாயம் செய்றதைக் கேள்விப்பட்டுட்டு அவர் வந்து பார்த்தார். ‘இயற்கைனு சொல்லி மலைவாழைப்பழத்தைத் தனியா விற்பனை செய்துட முடியாது. யாரும் வாங்கமாட்டாங்க. எப்படியும் எங்க மண்டிக்குத்தான் கொண்டு வரணும். நாங்கதான் வித்து தரணும் பாத்துக்கங்க’ என்று நக்கலாகச் சொன்னார். அவர்கிட்ட ‘ரோட்டுல கடை போட்டு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்குக் கூட நானே இயற்கை வாழைப்பழத்தை வித்தாலும் விப்பேனே தவிர... ஒரு நாள் கூட உங்க மண்டிக்கு என் பழத்தை விற்பனை செய்ய கொண்டுவரமாட்டேன்’னு உறுதியா சொல்லிட்டேன்.

உடனே இயற்கை வாழைப்பழத்தை எப்படி விற்பனை செய்யணும்னு திட்டம் போட ஆரம்பிச்சேன். அப்போதான் எனக்கு ‘பசுமை சந்தை’ பகுதி ஞாபகத்துக்கு வந்தது. அறுவடைக்கு வராதப்பவே, இயற்கை மலை வாழைப்பழங்களை ‘விற்க விரும்புகிறேன்’னு பசுமை விகடனுக்கு எழுதிப்போட்டேன். அது வெளியானதுக்கு அப்பறம் 30 பேருக்கு மேல என்கிட்ட போன் மூலமா பேசி, வாராவாரம் பழத்துக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட 15 இயற்கை அங்காடிக்காரங்க நேரடியா தோட்டத்துக்கே வந்து பார்த்துட்டு ஆர்டர் கொடுத்திருக்காங்க. இந்த அளவுக்கு விற்பனை வாய்ப்பு கிடைக்கவும், நான் பிரமிச்சுப் போயிட்டேன். ‘பசுமை விகடன்’ மேல இன்னமும் எனக்கு மதிப்பு கூடிடுச்சு. எப்படி விற்பனை செய்றதுனு தெரியாம யோசிச்ச நான் இப்போ, இயற்கை மலைவாழைப்பழத்தை ஏற்றுமதி செய்றது குறித்து திட்டம் போட ஆரம்பிச்சுட்டேன்” என்று சிலாகிக்கிறார், ராஜேஷ்கண்ணா.

ஆன்ம வேளாண்மை கொடுக்கும் ஆத்ம திருப்தி!

தனது இயற்கை விவசாய அனுபவம் குறித்து பேசிய ராஜேஷ்கண்ணா, “நஞ்சில்லா உணவு மேல அதிக ஈர்ப்பு வந்ததால இனிமே இயற்கையில் விளைவிக்கப்பட்ட பொருட்களைத்தான் சாப்பிடணும்னு தேடி அலைய ஆரம்பிச்சேன். ஆனா, நான் எதிர்பார்த்த மாதிரி பொருட்கள் கிடைக்கலை. நிறைய பேர் வியாபாரநோக்கில் தான் இருந்தாங்களே தவிர, உண்மையில் இயற்கை மேல் ஆர்வமா இல்லை. அதனால நானே, பசுமைச் சந்தை பகுதிகள்ல வர்ற விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயம் மூலமா எனக்கு சுற்றுவட்டாரத்துல விவசாயிகள், இயற்கை அங்காடிகள் வெச்சிருக்கவங்கனு நிறைய தொடர்புகள் கிடைச்சது. இதைக் கேள்விப்பட்டு நண்பர்கள், சொந்தக்காரங்கனு கேக்க ஆரம்பிக்கவும் இப்ப நானே, விவசாயிகள்கிட்ட இருந்து இயற்கை விளைபொருட்களை வாங்கி குறைஞ்ச லாபத்துல விற்பனை செய்துகிட்டு இருக்கேன். என்னோட காய்கறிகளை விற்பனை செய்யவும் இந்தத் தொடர்புகள் பயன்படுது.

இப்போ கிடைக்கிற காய்கள், கீரைகளை... தேனி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்னு கூட அனுப்பிகிட்டு இருக்கேன். சீக்கிரமே இயற்கை அங்காடி தொடங்கலாம்னு இருக்கேன். ஆனா, கண்டிப்பா கொள்ளை லாபம் இருக்கக் கூடாதுங்கிறது என்னோட நோக்கம். ஏன்னா எனக்கு சம்பாதிக்கிறதுக்கு நிறைய தொழில்கள் இருக்கு. இது ஆத்ம திருப்திக்காக பண்ற சேவை மாதிரி இருக்கணுங்கிறது என்னோட ஆசை. இந்த ஆசையை எனக்குள்ள விதைச்சதும் பசுமை விகடன்தான். என் டிரைவர் கூட ஒரு நாள், ‘இதுல என்ன வருமானம் வருதுனு மத்த வேலையை எல்லாம் விட்டுட்டு விவசாயத்துக்காக இவ்வளவு நேரத்தைச் செலவிடுறீங்க’னு கேட்டார். இயற்கை விவசாயத்துல கிடைக்கிற ஆத்ம திருப்தி அதை அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.  

நியாயமான விலையில் இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்யணும்னு நினைக்கிற விவசாயிகளுக்கு வழிகாட்ட நான் தயாரா இருக்கேன். எப்போ வேணும்னாலும் இயற்கை விவசாயிகள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்கிறார், ராஜேஷ்கண்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism