Published:Updated:

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

பல்கலைக்கழத்தின் அசத்தல் அறிமுகங்கள்...துரை.நாகராஜன்

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

பல்கலைக்கழத்தின் அசத்தல் அறிமுகங்கள்...துரை.நாகராஜன்

Published:Updated:
ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயத்துக்குத் தேவையான கருவிகள் அறிமுகப்படுத்தப்படுவதுபோல... கால்நடை வளர்ப்பாளர்களுக்காக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிப்பண்னை, அவ்வப்போது பண்ணைக் கருவிகளை வெளியிட்டு வருகிறது. அதுகுறித்து கடந்த இதழில், வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது.

பன்றிக் குட்டிகளின் நலன் காக்கும் சாதனம்!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

அதீத குளிர் மற்றும் தாய்ப்பன்றிகள் மிதிப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் குட்டிகளின் இறப்பைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட கருவி. பன்றிக்குட்டிகள் தாயிடம் பால் அருந்திய பிறகு, தாய்ப்பன்றியால் தெரியாமல் மிதிபட்டு இறப்பது, தாய்ப்பன்றிகளின் சாணம் மற்றும் சிறுநீரினால், குட்டிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. முக்கியமாக குளிரினால் குட்டிகளுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்பைத் தவிர்த்து, அவற்றின் உடல் எடையை அதிகரிக்கச் செய்வது போன்ற காரணங்களுக்காவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சாதனத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு, இரவு மற்றும் குளிர் காலங்களில் தேவையான வெப்பநிலையைக் கொடுக்கிறது. குட்டிகள் பிறந்த மூன்று வாரங்கள் இந்த சாதனத்தில் வைப்பது நல்லது. இது 3 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி உயரம் கொண்டது. இந்தக் கருவியின் தரைதளம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பன்றிக் குட்டிகளுக்கு மிருதுவான தன்மையையும், அசதியற்ற நிலையையும் கொடுக்கக்கூடிய தரைதளம். மற்றொன்று சிறுநீர் மற்றும் சாணம் வெளியேறும் வகையில் உள்ள இரும்பு வலையால் ஆக்கப்பட்ட தரைதளம். இந்தக் கருவியை பன்றி ஈனும் கொட்டிலில், தேவைக்கேற்ப எந்த இடத்திலும் பொருத்திக் கொள்ளலாம். இதில் 12 முதல் 15 குட்டிகள் வரை அடைக்கலாம். இதன் விலை 3 ஆயிரம் ரூபாய்.

பன்றிகளை வழி நடத்தும் சாதனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

பன்றிகளை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு எளிதாக மாற்ற உதவும்வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பன்றிகளை எடை பார்ப்பதற்கு கொட்டகையிலிருந்து, ஓட்டிச் செல்லும் போதும், இனச்சேர்க்கையின்போது பெண் பன்றிகளை இடம் மாற்றுவதற்கும் மற்றும் கொட்டகைக்குள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாற்றுவதற்கும் இது உதவுகிறது. 3 அடி நீளம், 2 அடி அகலம், 3 அடி உயரத்தில், குறைந்த எடை கொண்ட தகட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்றிகளை இடம் மாற்றும்போது நிகழும் நேரச் செலவு, அதிக வேலைப் பளு ஆகியவற்றைக் குறைக்கிறது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய பண்ணையாளர்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒற்றைக் கருவியின் விலை 600 ரூபாய். இரட்டைக் கருவியின் விலை ஆயிரத்து 200 ரூபாய்.

பன்றிகளுக்கான உருளை வடிவத் தானியங்கி தண்ணீர்த்தொட்டி!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

120 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரெம்மில் 4 முதல் 6 பைப்புகள் (தண்ணீர்க் குழாய்கள்) பொருத்தப்பட்டுள்ளன. தாகமெடுக்கும் பன்றிகள், குட்டிகள் தண்ணீர்க் குழாய்களை உறிஞ்சும்போது தண்ணீர் தானாக வெளியே வரும். முதலில் நான்கைந்து நாட்களுக்கு தண்ணீர் குடிக்க குட்டிகளுக்குப் பழக்கிவிட்டால் போதும். பிறகு தானாகவே குடித்துக்கொள்ளும். தண்ணீர்க்குழாயின் உட்பகுதியில் சல்லடை பொருத்தப்பட்டுள்ளதால் தேவையற்ற தூசுகள் வடிகட்டப்படும். இதை சுத்தம் செய்வது எளிது. டானிக் மற்றும் மருந்துகளை தண்ணீரில் கலந்து பன்றிகளுக்குக் கொடுக்க ஏதுவானது. பன்றிக்குட்டி, வளரும் பன்றி மற்றும் பெரியபன்றி ஆகியவைகளுக்கு ஏற்றவாறு மூன்றுவிதங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அடிதளத்தில் இரும்புத் தகட்டினால் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளதால் தேவையான இடத்தில் பொருத்திக் கொள்ளலாம். பெரிய பன்றிக்கான தண்ணீர் தொட்டியின் விலை 5 ஆயிரத்து 300 ரூபாய்.

வளரும் பன்றிக்கான தண்ணீர் தொட்டியின் விலை 5 ஆயிரத்து 900 ரூபாய். குட்டிகளுக்கான தண்ணீர்த் தொட்டியின் விலை 6 ஆயிரம் ரூபாய்.

பன்றிக்குட்டிகளுக்கான குறைந்த விலை தீவனத்தொட்டி!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

பன்றிக்குட்டிகளுக்கு தேவையான தீவனங்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீவனத்தொட்டி. இதன்மூலம் குட்டிகளுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தீவனங்கள் கொடுக்கலாம். இதன்மூலம் தீவனங்கள் வீணாவதைத் தடுக்கலாம். ஓவ்வொரு தீவனத்தொட்டியிலும் 6 பிளாஸ்டிக் தொட்டிகள் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்பிவலையால் பின்னப்பட்ட அமைப்பில் தீவனத்தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதால் குட்டிகள் எளிதாக தீவனங்களை எடுத்துக்கொள்ளும் வகையில் தேவையான இடத்தில் தேவையான உயரத்தில் பொருத்திக் கொள்ளலாம். தீவனங்கள், சாணம் மற்றும் சிறுநீர் போன்றவற்றால் மாசுபடாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எளிதாக சுத்தம் செய்யலாம்.

ஒரு தீவனத்தொட்டி 10 பன்றிக்குட்டிகளுக்குப் போதுமானது. இதன் விலை 900 ரூபாய்.

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் புகட்ட உபகரணம்!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு சரியான அளவில் பால் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பால் பற்றாக்குறையோடு உள்ள ஆட்டுக்குட்டி மற்றும் தாயில்லா ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றை வளர்ப்பதற்காக இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி, ஆட்டுக்குட்டிகள் குடிக்கும் பாலின் அளவைத் துல்லியமாக காண்பிக்கக்கூடிய வகையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் மிக மிருதுவான ரப்பராலான காம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தேவைக்கேற்ப கழற்றி சுத்தம் செய்து மறுபடியும் பொருத்திக்கொள்ளலாம். 4 லிட்டர் கொள்ளவு கொண்டது. இதன் விலை 5 ஆயிரத்து 700 ரூபாய்.

ஆட்டுக்குட்டிகளுக்கான பால்புட்டி!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

உடல் மெலிந்த மற்றும் பிறந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பால் புகட்ட வடிவமைக்கப்பட்ட உபகரணமாகும். மிக மிருதுவான ரப்பரால் வடிவமைக்கப்பட்ட காம்பு, பிளாஸ்டிக் குடுவையில் சரியாக பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளது. அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாட்டில் என்ற இரண்டு அளவுகளில், எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாட்டில்களை கம்பியால் செய்யப்பட்ட தாங்கியில், தேவையான இடத்தில் தேவையான உயரத்தில் பொருத்திக்கொள்ளலாம். எளிதாக சுத்தம் செய்யலாம். பெரிய பால் புட்டி விலை 950 ரூபாய். சிறிய பால் புட்டி விலை ஆயிரத்து 500 ரூபாய்.

பன்முக பயன்பாட்டு ஆட்டுக் கிட்டி!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

ஆடுகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் பல பராமரிப்புச் செயல்முறைகளை மேற்கொள்ளவும் பன்முகப் பயன்பாட்டு ஆட்டுக்கிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இரும்பாலானது. இதன், பக்கவாட்டு அமைப்பு நகரும் வகையில், ஆடுகளின் உடலமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடுகளை எளிதாக பரிசோதனை செய்யும் வகையில், பின்புறத்தில் உள்ள இரும்புக் கைப்பிடி மூலம் ஆடுகளின் பின்னங்கால்களை மேலே உயரும்படி செய்யலாம். முன்புறத்திலுள்ள பஞ்சு பொருத்திய தலைபூட்டு அமைப்பின் மூலம் ஆடுகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். இடதுபுறத்திலுள்ள மேசை போன்ற அமைப்பானது சிகிச்சையின் போது தேவைப்படும் மருத்துகள் அல்லது மற்ற உபகரணங்களை வைத்துக் கொள்ள உதவும்.

இது, 4 அடி நீளம், 2 அடி அகலம், 4 அடி உயரம் கொண்டது. ஒரு பகுதியில் எடைமானி பொருத்தப்பட்டுள்ளதால் ஆடுகளின் எடையையும் கண்டறியலாம். இதன் அடிப்பகுதியில் சக்கரம் அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதாக மாற்றலாம். கால்நடை மருத்துவமனைகள், நடுத்தர மற்றும் பெரிய பண்ணையாளர்கள் பயன்படும் வகையில் மிகக்குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 15 ஆயிரம் ரூபாய்.

ஆடுகளைத் தூக்கும் ஹைட்ராலிக் இயந்திரம்!

ஆடு, பன்றிகள் பராமரிப்புக் கருவிகள்...

ஆடுகளின் கால் குழம்புகளை வெட்டுவதற்கும், செம்மறி ஆடுகளில் ரோமங்களை கத்தரிக்கவும், சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது ஆடுகளை தேவையான உயரத்தில் நிற்க வைக்க உதவும் கருவி. இரும்பாலான தரை தளம்.. மேலும், கீழும் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆடுகளை எளிதாக மேலே உயர்த்தலாம். இக்கருவியின் முன்பகுதியில் ஆடுகளின் தலை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைப்பூட்டு வசதி உள்ளது. மூன்றரை அடி நீளம், இரண்டரை அடி அகலம், மூன்றரை அடி உயரம் கொண்டது. ஆடு தரைதளத்துக்கு வந்தவுடனே முன்பகுதியிலுள்ள தலை, பூட்டுப் பகுதியில் கட்டப்பட்டு சுமார் நான்கடி உயரத்துக்்கு ஹைட்ராலிக் தூக்கியின் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது.

இக்கருவி கால்நடை மருத்துவமனை, நடுத்தர மற்றும் பெரிய பண்ணையாளர்களுக்கு உபயோகமாக இருக்கும். இதன் விலை 11 ஆயிரம் ரூபாய்.

தொடர்புக்கு,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை, மாதவரம்,
தொலைபேசி: 044-25551571.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism