Published:Updated:

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில், கொழிக்கும் எள்!

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில், கொழிக்கும் எள்!

உ.சௌமியா, படங்கள்: தே.சிலம்பரசன்

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில், கொழிக்கும் எள்!

உ.சௌமியா, படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:
ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில், கொழிக்கும் எள்!
ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

*வயது 90 நாட்கள்

*மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும்.

*ஏக்கருக்கு 800 கிலோ
*
குறைந்த தண்ணீர்..குறைந்த பராமரிப்பு.

‘இளைச்சவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என ஒரு பழமொழி உண்டு. உடம்பில் தெம்பு இல்லாதவர்கள் தினமும் எள்ளைத் தின்றால் உடம்புத் தேறும் என்று சொல்வார்கள். அதிகபட்ச மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களில் எள்ளும் ஒன்று. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நல்லெண்ணெய்க்கு அடிப்படை ஆதாரமே இந்த எள்தான். எள் உருண்டை, முறுக்கு, அடை, பொரிஉருண்டை என குழந்தைகளின் மனம் கவரும் அனைத்து உணவுகளிலும் எள் முக்கியபங்கு வகிக்கிறது. எனவே, எள்ளுக்கு சந்தையில் எப்போதுமே மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விவரமான விவசாயிகள் எள் சாகுபடியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த வகையில், இயற்கை விவசாய முறையில் எள் பயிரிடலாம், அதிக லாபம் பெறலாம் என்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகிலுள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த எழில் நடராஜன்.

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

பாதையை மாற்றிய பயிற்சி!

சில்லென்ற காற்று வீசிய காலைவேளையில் தன் தோட்டத்தைச் சுற்றி காட்டியபடியே பேசத் தொடங்கினார், எழில் நடராஜன், ‘‘அப்பா விவசாயத்தைப் பார்த்துகிட்டு இருந்தார். சின்னவயசுல அப்பாகூட விவசாயத்துல உதவியா இருப்பேன். ஒரு கட்டத்துல, நாலு நெல் அறுக்கிற மெஷினை வாங்கி வாடகைக்கு விட்டு, வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தேன். என்னோட மைத்துனர் ‘ஜூனியர் விகடனி’ன் தீவிர வாசகர். அவர் மூலமாதான் ‘பசுமை விகடன்’ அறிமுகம் ஆச்சு. தொடர்ந்து படிக்கப் படிக்க இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாச்சு. பிறகு, வானகத்துல மூணு நாள் விவசாயப் பயிற்சியில் கலந்துகிட்டேன். அந்த 3 நாளுக்கு அப்புறம் என்னோட பாதையை நானே தேர்ந்தெடுத்தேன். என்னோட நிலத்துல ரசாயனம் போடவே கூடாதுனு முடிவுசெஞ்சேன்.

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

நம்மாழ்வார் ஐயா சொல்லிக் கொடுத்தபடி ‘இயற்கை’ என்றைக்கும் சிதையக்கூடாது, பொருளாதாரத்திலும் மாற்றம் வரணும்’னு என்னோட நிலத்தைப் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாத்துனேன். அப்போதான் ‘ஜீரோ’ பட்ஜெட் விவசாயமும் என்னை ஈர்த்துச்சு. என் குடும்பத்தோட வழக்கமான உணவுமுறையை மாத்திட்டேன். எல்லா கலப்பின மாடுங்களையும் வித்துட்டு மூணு காங்கேயம் மாடுங்களை வாங்கினேன். எங்க தோட்டத்துல விளையுற பொருட்களை மட்டுமே நாங்க சமையலுக்குப் பயன்படுத்துறோம்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

மதிப்புக் கூட்டினால்தான் மவுசு!

‘‘மொத்தமா எனக்கு அஞ்சு ஏக்கர் நிலமிருக்கு. கிணத்துப் பாசனத்துலதான் விவசாயம் செய்றேன். தோட்டத்துக்கு நடுவுல பண்ணைக்குட்டை அமைச்சிருக்கேன். தோட்டத்துல விழற மழைத்தண்ணி முழுக்க பண்ணைக்குட்டைக்கு வந்துசேர்றமாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கேன். போனமுறை பெருமழை பெய்ஞ்சதுல பண்ணைக்குட்டையில இருந்துதான் பாசனம் செஞ்சேன். இயற்கை விவசாயத்துக்கு வந்ததும் எனக்கு தோணுன முதல் ஆசை பாரம்பர்ய நெல்லைப் பயிரிடணும்ங்கிறதுதான். உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்துல விதைநெல்லை வாங்கிட்டு வந்து நட்டேன். காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, இலுப்பைப் பூ சம்பா, கருப்புக் கவுனினு பாரம்பர்ய ரகங்களை முதல்முதலா நடும்போது லாபம் கிடைக்கலை. ஆனா முதலுக்கு மோசமில்லை. அடுத்தடுத்து நடும்போது லாபம் வர ஆரம்பிச்சுது. அதுக்கு பின்னாடி, சீரக சம்பா, சேலம் சன்ன ரகம், சொர்ணமசூரி ரகங்களைப் பயிரிட்டேன். அதுலயும் நல்ல லாபம் கிடைச்சது. நேரடியா பொருளை விக்கிறதைக் காட்டிலும், அதை உணவுப் பொருளாக மாத்தி விக்கலாம்னு முடிவுபண்ணி கைகுத்தல் அரிசி, அவல் பொரி, பொரி உருண்டைனு பொருட்களை வித்துக்கிட்டு இருக்கேன். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்குது. வீட்டுலயும் சோளஇட்லி, தோசை விதவிதமான உணவுகளை சமைச்சு சாப்பிடுறோம்.

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

முதல்முறையா எள் விதைச்சதுல ஒரு ஏக்கர்ல எட்டு மூட்டை அறுவடையாச்சு. அதைப் பார்த்துத்தான் இந்த முறையும் ஒரு ஏக்கர்ல எள் விதைச்சு இருக்கேன். மீதி இருக்கிற நிலத்துல 20 சென்ட் இடத்துல 10 சென்ட்ல கத்திரி, தக்காளி, பீர்க்கன்காயை தலா 5 சென்ட்ல  விதைச்சிருக்கேன். வயலுக்கு நடுவுல பந்தல்ல பாகல், புடலை, சுரைக்காயும் நட்டிருக்கேன். 50 நாட்டுக் கோழிகளை வளர்க்கிறேன்.

ஒரு ஏக்கர்... 90 நாள்... 64,000 ரூபாய்... குறைந்த செலவில்,  கொழிக்கும் எள்!

இப்போ ரெண்டாவது முறையா எள் விதைச்சிருக்கேன். இந்த முறையும் 8 மூட்டை (100 கிலோ மூட்டை) எள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். போனமுறை கிடைச்ச எள் கிலோ 80 ரூபாய்னு சந்தையில வித்துட்டேன். மொத்தமா எனக்கு 64 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. இதுல செலவு 8 ஆயிரத்து 400 ரூபாய் போக 55 ஆயிரத்து 600 ரூபாய் லாபமா நின்னது. எள்ளுல பராமரிப்புச் செலவு ரொம்ப கம்மி. என்னைப் பொறுத்தவரைக்கும் குறைஞ்ச நாள்ல நல்ல லாபம் கிடைக்கக்கூடிய பயிரா இருக்கு எள்’’ என்று விடைகொடுத்தார்.   

தொடர்புக்கு,
எழில் நடராஜன்,
செல்போன்: 94432-36851.

ரு ஏக்கரில் எள் பயிரிடும் விதம் குறித்து எழில் நடராஜன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

வயது 90 நாட்கள். மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, 15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும்.

நிலம் புழுதியான பிறகு, 10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும். ஏக்கருக்கு அரை கிலோ விதை எள் தேவைப்படும். காற்றடிக்கும்போது எள்ளை விதைக்கக் கூடாது. அப்படி விதைத்தால் மொத்த எள்ளும் ஒரே இடத்தில் போய் விழுந்துவிடும். அரை கிலோ விதை எள்ளுடன், ஒன்றரை கிலோ மிருதுவான மணலைக் கலந்து தூவலாம். தூவிய உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில், எள்ளை எறும்பு தின்ன ஆரம்பித்து விடும். அதற்கு பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. செடி இரண்டு அங்குலம் வளர்ந்த பிறகு, 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை வாய்க்கால் பாசனத்துடன் கலந்து பயிருக்குக் கொடுக்க வேண்டும்.

15-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த 5 நாள் கழித்து ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும்.

அதேபோல 30 முதல் 35-ம் நாளுக்குள் இரண்டாம் களையெடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசனம் செய்யும்போது, அதில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துகொடுக்க வேண்டும்.

40-ம் நாள், 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கவேண்டும்.

40-ம் நாளுக்கு மேல் இலைசுருட்டுப்புழுத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம். மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம். அதற்கு பிறகு அதிக பராமரிப்புத் தேவையில்லை. 40-ம் நாளுக்கு மேல் பூ பூக்கும் தருணத்தில் ஜீவாமிர்தமும், பூச்சிவிரட்டியும் பயன்படுத்துவதால் மகசூல் பாதிக்காது. 70-ம் நாள் பயிர், பழுப்பு நிறத்தை அடையும்... 90-ம் நாள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்த பயிர்களை வயலிலே 2 நாட்கள் பரப்பி வைக்கவேண்டும். பிறகு, தனித்தனியே பிரித்து வெயிலில் காய வைத்தால், எள் மட்டும் தனியே கொட்டிவிடும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்தால், அனைத்து எள்ளும் செடியை விட்டு தனியாக வந்துவிடும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி!

ஊமத்தை, வேப்பிலை, ஆடாதொடை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சி, தும்பை இலைகளை மொத்தம் 5 கிலோ எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் சேர்த்து, பத்து நாட்கள் ஊறவைத்து வடிகட்டி பயன்படுத்தலாம். மூலிகை பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism