Published:Updated:

கேரளாவைக் கலக்கும் நீரா...

கேரளாவைக் கலக்கும் நீரா...
பிரீமியம் ஸ்டோரி
கேரளாவைக் கலக்கும் நீரா...

புத்துணர்ச்சி கொடுக்கும் புதிய பானம்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

கேரளாவைக் கலக்கும் நீரா...

புத்துணர்ச்சி கொடுக்கும் புதிய பானம்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
கேரளாவைக் கலக்கும் நீரா...
பிரீமியம் ஸ்டோரி
கேரளாவைக் கலக்கும் நீரா...
கேரளாவைக் கலக்கும் நீரா...

மிழ்நாட்டில் கள் இறக்க தடை உள்ள சூழ்நிலையில், நமது அண்டை மாநிலமான கேரளாவில் பனையிலும், தென்னையிலும் கள் இறக்குவதற்குத் தடையில்லை. பனங்கள், தென்னங்கள் மற்றும் பனையில் இருந்து  கிடைக்கும் பதநீரும் கேரளாவில் ரொம்பவே பிரபலம். இந்நிலையில், கேரள மாநிலத்தில்... புதிய தொழில்நுட்பம் மூலம் தென்னங்கள் சேகரிக்கப்பட்டு, ‘நீரா’ என்ற பெயரில் போதை தராத பானமாக விற்பனை செய்யப்படுகிறது. மிகுந்த சுவையுடைய அந்த பானம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

இதுகுறித்துப் பேசிய பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜானு, ‘‘கேரளாவில் இதை ‘சர்க்கரைக் கள்’ என்கிறார்கள். இதைக் குடித்தால் போதை வராது. இது, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம், தபால் நிலையம் என மக்கள் கூடும் இடங்களில், ஸ்டால் அமைத்து இதை விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மட்டுமல்ல கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்கள் இதை விரும்பிக் குடிக்கிறார்கள்” என்றவர் நமக்கு ஒரு நீராவைக் குடிக்க கொடுத்தார். வித்தியாசமான சுவையில் மிகவும் அருமையாக இருந்தது, அந்த பானம்.

இதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் இருப்பவர்களில் ஒருவரான வினோத்குமார், “இது தென்னையில் இருந்து இறக்கப்படும் பானம். பாளையில் இருந்து வடியும் பாலை அப்படியே பானைக்குள் பிடித்து வைத்திருந்தால், அது கள். கள்ளைப் பருகினால், போதை கிடைக்கும். ஆனால், பாளையில் இருந்து வடியும் பாலை ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட கலனில் பிடித்து அதை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதப்படுத்தி வைத்திருப்பதற்குப் பெயர் தான் நீரா. இது போதை தராது. குளிர் பதனப்பெட்டியில் மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால், இதன் வெப்பநிலை அதிகரித்து விட்டால், அது போதை தரும் கள்ளாக மாறி விடும். இதை குளிர் பதன வசதி செய்யப்பட்ட வாகனங்களில்தான் கொண்டு செல்ல முடியும். தற்போது, 100 மில்லி 12 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்கிறோம். தற்போது
50 ஆயிரம் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி வருகிறோம்.

கேரளாவைக் கலக்கும் நீரா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகளைப் பங்குதாரர்களாக கொண்டு, ‘பாலக்காடு தேங்காய் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்’ என மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பெனி மூலம்தான், நீரா பானம் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், முதலமடை  கிராமத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீரா குளிரூட்டும் மையம் கட்டப்படவுள்ளது. தற்போது, கேரளாவில் உள்ள ‘குடும்பஸ்ரீ’ மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். கேரள மாநில கலாசார உடையில் அவர்கள் விற்பனை செய்வதால், எளிதில் மக்களிடையே பிரபலமாகி விட்டது. விரைவில் தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களிலும் நீரா பானத்தை விற்பனை செய்ய இருக்கிறோம். இது, பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக அமையும்” என்றார்.

கொச்சியில் இயங்கி வரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், விவசாயிகளுக்கு நீரா இறக்க பயிற்சி அளிப்பதுடன் அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிலும் நீரா இறக்க அனுமதி வழங்கப்பட்டால், தென்னை விவசாயிகளுக்கு மிகுந்த பயனாக இருக்கும்.

ஒரு மரம், ஒரு மாதம், ரூ 1,500 வருமானம்!

கேரளாவைக் கலக்கும் நீரா...

மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் கே.பாலசுதாகரி, ‘நீரா’ குறித்து பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

“கேரள மாநிலத்தில் நீரா இறக்கி விற்க அனுமதி இருப்பதால், அங்குள்ள தென்னை விவசாயிகள் சராசரி வருமானத்தை விட மூன்று மடங்கு வருமானம் பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அனுமதி கொடுத்தால், கண்டிப்பாக தென்னை விவசாயம் செழிக்கும்.

தென்னை உற்பத்தியாளர் சங்கம், தென்னை உற்பத்தியாளர் இணையம், தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய கூட்டமைப்புகளைத் தொடங்கி... மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் முறைப்படி பதிவுசெய்யும் தென்னை விவசாயிகளுக்கு மட்டும்தான் நீரா இறக்கவும், பதப்படுத்தவும், விற்பனை செய்யவும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. தென்னை உற்பத்தியாளர் சங்கம் அமைக்க 40 முதல் 100 விவசாயிகள் உறுப்பினராக இருத்தல் அவசியம். அதோடு ஒவ்வொரு உறுப்பினருக்கும், காய்க்கும் தென்னை மரங்கள் 10 இருக்க வேண்டும்.

10 தென்னை உற்பத்தியாளர் சங்கம் அல்லது 500 தென்னை விவசாயிகள் ஒன்று சேர்ந்து தென்னை உற்பத்தியாளர் இணையம் துவக்க முடியும். இப்படித் துவக்கும் இணையத்தின் வசம், காய்க்கும் தென்னை மரங்கள் ஒரு லட்சம் இருக்க வேண்டும்.10 இணையங்கள் ஒன்றிணைந்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க முடியும். தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தில், காய்க்கும் தென்னைகள் 10 லட்சம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். நீரா இறக்கவும், பதப்படுத்தவும், புட்டியில் அடைக்கவும், விற்பனை செய்வதற்கு செய்யப்படும் தொழில் முதலீட்டில் 25 சதவிகிதம் அல்லது 50 லட்சம் ரூபாய் வரை தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம் கிடைக்கும்.

கேரள மாநிலத்தில் உள்ள தென்னை மரங்களை விட தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களுக்கு காய்ப்புத்திறன் அதிகம். கேரள தென்னையில் இருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 3 லிட்டர் அளவுதான் நீரா கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டுத் தென்னைகளில் இருந்து 5 லிட்டர் வரை நீரா இறக்க முடியும்.   நீரா பானமும் பதநீரும் ஒன்றுதான் என்பதுபோல சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இரண்டும் வேறு வேறு. நீரா இறக்கிய பிரகு பதப்படுத்தி வைத்தால் கெட்டுப்போகாது. நீரா பானத்துக்கு விற்பனையிலும் பிரச்னை இல்லை. பன்னாட்டு நிறுவன பானங்களுக்கு நிகராக சுதேசி பானமாக நீரா, கேரளாவில் சக்கை போடு போடுகிறது. இதற்கு ஏற்றுமதி வாய்ப்பும் உண்டு.

நீரா குறித்த தொடர் பயிற்சிகளை தென்னை வளர்ச்சி வாரியம் அளித்து வருகிறது. ஒரு தென்னை மரத்தின் ஆண்டு வருமானம் அதிகபட்சம் 1,500 ரூபாய்தான். ஆனால், நீரா இறக்கி விற்பனை செய்யும் போது ஒரு மாதத்திலேயே 1,500 ரூபாய் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-22673685

புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி!

கேரளாவைக் கலக்கும் நீரா...

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்... பருவ காலங்களில் முளைக்கும் காளான் வகைகளை வரிசைப்படுத்தி, புதிய ரக பால் காளான் தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயற்கையாக முளைத்த காளான்களைச் சேகரித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய, பயிர் நோயியல் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ‘‘காளான் வகைகளை ஆராய்ந்து, புதிய ரகம் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலகளவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகை இயற்கைக் காளான்கள் உள்ளன. அவற்றில், 50 ஆயிரம் வகை காளான்கள், உணவுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், பண்ணைகளில் நான்கு வகையான காளான்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது புதிய ரக காளான் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆய்வுக்கூடத்தில், 22 வகையான காளான்கள் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து ஆறரை கிலோ எடையுள்ள ஒரு காளானைக் கொண்டு வந்துள்ளோம். அதையும் பெருக்குவதற்காக, ஆராய்ச்சி செய்து வருகிறோம். தவிர, ஜப்பான் நாட்டில் பிரபலமான ‘ஹிட்டாக்கி’ எனும் காளான் வகை குறித்தும், ஆராய்ச்சிகளைத் துவங்க உள்ளோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism