Published:Updated:

5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...

5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...
பிரீமியம் ஸ்டோரி
5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...

ஏமாற்றத்தில் விவசாயிகள்!கு.ராமகிருஷ்ணன், படம்: க.சதீஸ்குமார்

5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...

ஏமாற்றத்தில் விவசாயிகள்!கு.ராமகிருஷ்ணன், படம்: க.சதீஸ்குமார்

Published:Updated:
5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...
பிரீமியம் ஸ்டோரி
5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...
5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, 5800 கோடி ரூபாயில் அளவுக்கான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும், உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.

5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த விவசாயிகள் குஷியாக இருக்கின்றனர். ஆனால், 5 ஏக்கர் அளவுக்கு மேல் நிலமுள்ள, கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளும், தேசிய வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றிருக்கும் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகளும் இதை ஏக்கத்துடன் பார்க்கின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய சங்கத்தின் இணைச்செயலாளர் வரதராஜன், “கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி, மழை வெள்ளத்தால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை இருப்பதுபோலவே 5 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கும் கடும் கடன் சுமை உள்ளது. கடன் தொகையில் மட்டும்தான் மாறுபாடு. இடர்பாடுகள் அனைத்து விவசாயிகளுக்கும் ஒன்றுதான். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளும் கடன்களை அடைக்க முடியாத இக்கட்டில்தான் உள்ளார்கள். எனவே, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.    

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ‘சுவாமிமலை’ சுந்தரவிமலநாதன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எல்லாம் விவசாயக் கடன்கள், மானியம் போன்றவற்றில் சிறு விவசாயி, பெரு விவசாயி என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. பெரு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு பிரத்யேகமாக கூடுதல் விலை ஒன்றும் கிடைப்பதில்லையே. இடுபொருட்களின் விலையும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒன்றுதான். ஆனால், பெரு விவசாயிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய  அனைத்து விவசாயிகளும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடன் சுமையினால்தான், சிலர் தற்கொலை முடிவுக்குக் கூட செல்கிறார்கள்.

5,800 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 18 சதவிகித அளவு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் கடன்  வழங்கப்படுகிறது. மீதியை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் கந்துவட்டிக்காரர்களும்தான் பூர்த்தி செய்கிறார்கள்.

ஆந்திராவில் 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்போவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். முதல் கட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளார். எனவே விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், அனைத்து விவசாயக் கடன்களையும் முதல்வர் ஜெயலலிதா தள்ளுபடி செய்வதற்கு உதவ வேண்டும் மத்திய அரசிடம் பேசி இதை நிறைவேற்ற வேண்டும். அல்லது இந்தக் கடன்களை தமிழக அரசே அடைக்க முன்வர வேண்டும்” என்றார்.

இந்நிலையில், ‘அனைத்து விவசாயக் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, கடந்த மே 30‍-ம் தேதி... தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism