Published:Updated:

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

‘விலங்குகளைக் கொல்வது சரியான தீர்வல்ல!’வீ.மாணிக்கவாசகம், த.ஜெயகுமார், படம்: ரமேஷ் கந்தசாமி

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

‘விலங்குகளைக் கொல்வது சரியான தீர்வல்ல!’வீ.மாணிக்கவாசகம், த.ஜெயகுமார், படம்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’
‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

பீகார், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் முறையே ‘நீல்கய்’ வகை மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் ஆகிய வனவிலங்குகளை, மனிதர்களுக்குத் தொல்லை தரும் விலங்குகளாக அறிவித்து, அவற்றைக் கொல்வதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் கௌரி மௌலேகி வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த மனு கடந்த ஜூன் 20-ம் தேதி, விசாரணைக்கு வந்தபோது, ‘‘மனிதர்களுக்குத் தொல்லை தரும் ‘நீல்கய்’ வகை மான்கள், குரங்குகள், காட்டுப் பன்றிகள் ஆகிய விலங்குகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது. ஆனால், விலங்குகள் நல ஆர்வலர்களின் மனுக்களைப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். மேலும், விலங்குகள் நல ஆர்வலர்கள், தங்களது கோரிக்கைகளை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளது, நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு.

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, விலங்கு நல ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ‘வனவிலங்குகளை வேட்டையாடக்கூடாது’ என வனவிலங்கு ஆர்வலர்கள் போர்க்கொடி பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஓய்வுப்பெற்ற வன அதிகாரி பத்ரசாமியிடம் பேசினோம். “வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தொல்லைத் தரும் விலங்குகளைக் கொல்ல தலைமை வனப்பாதுகாவலர் அனுமதி வழங்க வேண்டும். அந்தச் சட்டத்தின் விதிமுறைப்படி சில வனவிலங்குகளுக்கு மத்திய அரசின் அனுமதியும், சிலவற்றுக்கு மாநில அரசின் அனுமதியும் வேண்டும். பீகார், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் நீல்கய் மான்கள், காட்டுப்பன்றிகள், மற்றும் குரங்குகள் விவசாயிகளின் நிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து தொல்லை கொடுத்து வருகின்றன.

பீகார் மாநிலத்தில் 5 ஆயிரம் நீல்கய் மான்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை ஒரு ஏக்கர் நிலத்தில்

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

உள்ள விளைபொருட்களை, ஒரு மணி நேரத்தில் காலி செய்துவிடும் என்றும் சொல்கிறார்கள். இந்த நெருக்கடியால் விவசாயிகள் வனத்துறையினரை அணுக, விலங்குகளைக் கொல்வதற்கு வனத்துறை முடிவு எடுக்கும் நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

வனவிலங்குகளைப் பொறுத்தவரை சுட்டுக்கொல்வதைத் தவிர வேறு பெரிய தீர்வுகள் இல்லை. புலி, சிங்கம் போன்றவை எண்ணிக்கையில் குறைவு என்பதால், அவற்றைக் கொல்வதற்கு அரசுகளே தயங்குகின்றன. ஆனால் காட்டுப்பன்றி, நீல்கய் மான், குரங்கு போன்றவை எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால், கொல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த விலங்குகளைக் கொல்வதை, அரசாங்கத்தின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். வெளிநாட்டு விலங்கு சரணாலயங்களுக்கு இந்த விலங்குகளை அனுப்பலாம். நீல்கய் மான்கள் இல்லாத வனங்களில் கொண்டுபோய் விடலாம். காட்டில் உள்ள மான்களுக்கு கருத்தடைச் சிகிச்சை செய்யலாம். இப்படி சில தீர்வுகள் இருந்தாலும், அதை செயல்படுத்துவதிலும் நடைமுறையில் சிரமங்கள் உள்ளன. இதற்கு எளிமையான தீர்வு அவற்றைக்கொல்வதுதான்” என்றார்.

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த விலங்குநல ஆர்வலரான மருத்துவர் ஜீவானந்தம் பேசியதுபோது, “இந்த பூமி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. இதில் காட்டில் வாழும் வன உயிரினங்களுக்கான பாதையை அடைக்கும்போது, அதன் தேவைக்காக மாற்று இடம் தேடிப்போகின்றன.

இன்றும் காட்டில் வசித்து வரும் மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படி அவற்றைப்

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

பாதுகாக்கிறார்கள். காட்டில்  வாழும் விவசாயம் வனவிலங்குகளால் மட்டுமே அழியவில்லை. மழைவெள்ளம், வறட்சி, சூறைக்காற்று, விலை இல்லாமை இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயம் அழிந்து வருகிறது. இப்படி இருக்கையில் வனவிலங்குகளை மட்டும் சுட்டுக் கொல்ல முடிவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? அமெரிக்காவில் விளைநிலங்கள் உழவு செய்யப்படாமல் இருந்தாலே அரசு பணம் கொடுக்கிறது. அதேபோல் விவசாயி உற்பத்தி செய்த பொருளை சந்தை விலைக்கே கொள்முதல் செய்கிறது, அந்நாட்டு அரசு. இதை இங்கே இருக்கும் அரசுகளும் செய்யலாமே?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு காட்டுப் பன்றிகள் வாழ்ந்த இடம் இன்று எங்கே போனது? வனங்களை, தொழில்துறையினரும், ஆன்மிக அமைப்புகளும், அரசுகளும் கூறுபோட்டுக்கொண்டால் விலங்குகள் எங்கே போகும்? பன்றிகளுக்கு கிழங்குதான் முக்கிய உணவு. அவை விளைந்த இடங்களில் இன்று கட்டடங்களும், காபி, தேயிலை எஸ்டேட்டுகளும் இருப்பதால் அவை, உணவைத்தேடி விவசாய நிலங்களுக்கு வருகின்றன.

‘அரசே இழப்பீடு வழங்க வேண்டும்!’

விவசாயம் அழிந்து போகும்போது விவசாயிகளுக்கு அரசு என்ன இழப்பீடு கொடுக்கிறதோ, அதேபோல் வன விலங்கினங்களால் ஏற்படும் இழப்பையும் அரசுதான் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். காடு காடாக இருந்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை. காட்டை நாடாக்கினான் மனிதன். இப்போது நாட்டை காடாக்க முற்படுகின்றன விலங்கினங்கள்அவ்வளவுதான். வனவிலங்குகளைச் சுட்டுக்கொல்வதைத் தவிர்த்து, வன விலங்குகள் பிரச்னைக்கு வேறு வகையில் தீர்வு காண அரசுகள் முன்வர வேண்டும்’’ என்றார் ஆக்ரோஷமாக.

தமிழ்நாட்டில் வனவிலங்குகளின் நிலை?

தமிழ்நாட்டில் யானைகள், காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் குரங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் அதிகமாக வந்து சென்றுகொண்டிருக்கின்றன. விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் செய்தும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வனத்துறையின் மூலம் குரங்குகளைப் பிடிப்பது, யானைகளை விரட்டுவது போன்ற நடவடிக்கைகள் இருந்தாலும், அதன் மூலம் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளைக் கொல்ல விவசாயிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு எந்தெந்த மாநிலங்களில், வனவிலங்குகளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்கிற புள்ளிவிவரத்தை மத்திய அரசு கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் சில மாநிலங்களில் இருந்து வந்த விவரங்களின் அடிப்படையில் ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வனவிலங்குகளை ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை வேட்டையாடலாம் என்கிற அனுமதியைக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. அதேநேரம், ‘தமிழகத்திலிருந்து வனவிலங்குகளைக் கொல்ல இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை’ எனத் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism