Published:Updated:

கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

கா.முரளி, நிகரன்

கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

கா.முரளி, நிகரன்

Published:Updated:
கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!
பிரீமியம் ஸ்டோரி
கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!
கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள மலையையே லிங்கமாக கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ‘மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், பக்தர்கள் இடையூறு இல்லாமல் கிரிவலம் செல்ல கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும்’ என முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 110-விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில், ‘பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அது, 10 மீட்டராக மாற்றப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் பணியில் இறங்கிய நெடுஞ்சாலைத்துறையினர், கிரிவலப்பாதையில் உள்ள பசுமை நிறைந்த மரங்களையும், மூலிகைச் செடிகளையும் வெட்டி சாய்க்கத் துவங்கியுள்ளனர். பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு,

‘‘பவுர்ணமி, கார்த்திகை தீபம் மட்டுமில்லாம, வருஷம் முழுக்க பக்தர்கள் வந்துகிட்டே இருக்காங்க. இந்த மலையைச் சுத்தி கிரிவலம் வர்ற பக்தர்கள், மரங்களோட நிழல்ல, மூலிகைக் காத்தை சுவாசிச்சிக்கிட்டே நடக்கிறதை சிறந்த அனுபவமா நினைக்கிறாங்க. ஆனா, இப்ப, சாலையை விரிவாக்கம் செய்றோம்னு பழைமையான மரங்களையெல்லாம் வெட்டி சாய்க்கிறாங்க. திருவண்ணாமலை-செங்கம் சாலையில, எமலிங்கம் தொடங்கி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு வரைக்கும் சுமார் 15-க்கும் மேற்பட்ட அந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத் திட்டாங்க. மாவட்ட நிர்வாகம் உடனடியா, சாலையோர மரங்களை வெட்டுறதை கைவிடணும். வெட்டுன மரங்களுக்கு பதிலா, குறுகிய காலத்துல வளரக்கூடிய மரங்களை நடணும்’’ என்றார்.

கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைப்பற்றி வழக்கறிஞரும், சமூகஆர்வலருமான தனஞ்செழியனிடம் கேட்டப்போது,

‘‘மலையைச் சுத்தியிருக்க 14 கிலோ மீட்டர் தூரத்தில, எட்டு கிலோ மீட்டர்ல தான் மரங்க இருக்கு. விரிவாக்கம்னு சொல்லி அதையும் வெட்டிட்டா, பக்தர்கள் வெயில் காலத்துல, வெறுங்காலோட எப்படி நடப்பாங்க? வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் இங்க வந்து மாசக்கணக்குல தங்கிட்டுப் போறதுக்கு காரணமே, இங்க கிடைக்குற மூலிகைக் காத்துக்காகத்தான். அதையும் வெட்டிட்டா பக்தர்களோட வருகை ரொம்ப குறைஞ்சிடும். மாவட்ட நிர்வாகம், இதையெல்லாம் கவனத்துல வெச்சு, மரங்களை வெட்டாம, பாதையை விரிவாக்கம் செய்யணும். தவறும் பட்சத்துல நீதிமன்றத்துல வழக்குத் தொடர்வோம்’’ என்றார்.

திருவண்ணாமலை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘கிரிவலப் பாதையை விரிவாக்கம் செய்வது வரவேற்கக்கூடியது. ஆனால், இயற்கைக்குப் புறம்பாக மரங்களை வெட்டுவது நம்மையே நாம் அழித்துக்கொள்வதற்கு நிகரானது. மரங்களை வெட்டுவதினால் கிரிவலப் பாதை இனி, நிழல் இல்லாமல் வறட்சிப் பாதையாகிவிடும், பக்தர்களின் வருகையும் குறைந்துவிடும்’’ என்றார்.

கிரிவலப்பாதை... வெட்டப்படும் மரங்கள்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

இறுதியாக, மாவட்ட ஆட்சியர் ஞானசேகரனிடம் பேசினோம், ‘‘10 மீட்டர் வரை சாலையை அகலப்படுத்துகிறோம். ஒரு வழி வாகனங்கள் செல்லவும், மற்றொரு வழி பக்தர்கள் செல்லவும் வசதியாக இருக்கும்படி அமைக்கிறோம். கார்த்திகை தீபம் மற்றும் சித்திரா பவுர்ணமி ஆகிய நாட்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால், வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால்தான் முதல்வர் 110-வது விதியின் கீழ் பாதை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார். ஒரு மரம் வெட்டினால், 10 மரக்கன்றுகளை நடவேண்டும். ஆனால் நாங்கள் 20 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு உள்ளோம். அதன்படி 3 ஆயிரம் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. 115 மரங்கள் வெட்ட அடையாளக் குறியீடு இடப்பட்டுள்ளன. ஆனாலும், முடிந்த அளவு மரங்களை வெட்டாமல் இருக்க முயற்சி செய்து வருகின்றோம்’’ என்றார்.

‘மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்‘ என உரக்கப்பேசும் அரசு, இப்படி மரங்களை வெட்டி வீழ்த்துவது நியாயமா?
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism