Published:Updated:

பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!
பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

கோடை காலம் துவங்கியதுமே நுங்கு, பதநீர் விற்பனை களைகட்டும். பதநீர் விற்பதைத் தொழிலாகச் செய்பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், ஊர் பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்பனை செய்து பணம் திரட்டுகிறது, ஒரு கிராமம் என்பது ஆச்சர்ய தகவல்தானே! தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள அந்தோணியார்புரம்தான் அந்த ஆச்சர்ய கிராமம்.

கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்திருக்கின்றன பனைமரங்கள். இவைதான் இந்த கிராமத்துக்கே அடையாளம்.

பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நுழையும் இடத்திலேயே இருக்கிறது, ஊர் பதநீர் விற்பனைக்கடை. பதநீர் விற்பனையில் தீவிரமாக இருந்த ஊர்த் தலைவர் மைக்கேல் ஜெபமாலையைச் சந்தித்தோம்.

‘‘எங்க கிராம மக்களின் முக்கியமானத் தொழிலே பனைமரம் ஏறுறதும், கருப்பட்டி காய்ச்சுறதும்தான். ஆனா, பனை மரங்களோட எண்ணிக்கை குறைஞ்சிட்டதுனால, வருசத்துல அஞ்சு மாசம்தான் தொழில் இருக்குது. மீதி ஏழு மாசமும் வேற வேலையைத் தேடி ஓட வேண்டி இருக்கு. அதனால, இந்தத் தொழிலும், மரமேறிகளோட எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு.

இந்த கிராமத்துப் பிள்ளைக படிப்புக்காக அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டி இருந்ததுனால, 1940-லயே ஊர் மக்கள் ஒண்ணாசேர்ந்து அஞ்சாம் வகுப்பு வரை உள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியைத் தொடங்கியிருக்காங்க. பிறகு நாங்கள்லாம் முயற்சி எடுத்து, 2003-ம் வருஷம் 8-ம் வகுப்பு வரைக்கும் இருக்கிற நடுநிலைப்பள்ளியா மாத்திட்டோம். இங்க மொத்தம் 200 பசங்க படிக்கிறாங்க. ஏழு வாத்தியார் இருக்காங்க. இதுல நாலு பேருக்குத்தான் கவர்மென்ட் சம்பளம் கொடுக்குது. மத்த மூணு வாத்தியார்களோட சம்பளம், கரன்ட்பில், நிர்வாகச் செலவுக்காக, பதநீர் வித்து பணம் சேர்க்கிறோம்.

பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

எங்க கிராமத்துல பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான குளத்தைச் சுத்தியும் சுமார் ரெண்டாயிரம் பனைகள் இருக்குது. ஏப்ரல் மாசத்துல இருந்து ஆகஸ்ட் வரைதான் பனை சீசன். இதுல, மே, ஜூன் ரெண்டு மாசம் மட்டும்தான் பதநீர் வரத்து அதிகமா இருக்கும். பிறகு படிப்படியா குறையா ஆரம்பிச்சுடும். எங்க கிராமத்தைச் சேர்ந்த பதினைஞ்சு பேர் மரத்துல ஏறி, தினமும்  பதநீர் இறக்குவாங்க. இந்த பதநீர் எல்லாத்தையும் ஊர்கமிட்டி சார்பா மொத்தமாக வாங்கிக்குவோம். சீசன் காலத்துல தினமும் 250 படி வரை (ஒரு படி ஒன்றரை லிட்டர்) கிடைக்கும். மரத்துல இருந்து இறக்குறவங்ககிட்ட, ஒரு படி 35 ரூபாய் விலை கொடுத்து வாங்கி, நாங்க படி 70 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். காலையில 7 மணியில இருந்து 12 மணி வரைக்கும் விற்பனை இருக்கும். எஞ்சிய பதநீரை கருப்பட்டியா மதிப்புக் கூட்டி விற்பனை செய்றோம்.

இந்தப் பதநீர் விற்பனைக் கடைக்கு ரெண்டு பேர், கருப்பட்டி காய்ச்ச ரெண்டு பேர்னு மொத்தம் நாலு பேருக்கு தினசரி கூலி போக, மிச்சமாகிற தொகையை கல்விநிதியில சேர்த்துடுவோம். அஞ்சு மாசம் பதநீர் வித்தா செலவு போக சராசரியா ரெண்டு லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். அதை அப்படியே பள்ளிக்கூடத்து கணக்குல பேங்க்ல டெபாசிட் பண்ணிடுவோம். பள்ளிக்கூடச் செலவு தவிர, வேற எந்தத் தேவைக்காகவும் இந்தத் தொகையில இருந்து ஒரு ரூபாய் கூட எடுத்து செலவு செய்யமாட்டோம்.

பள்ளிக்கூட நிதிக்காக பதநீர் விற்கும் கிராமம்!

பனை ஏறுறவங்களும், ஊர்மக்களும்தான் இந்த கல்விநிதி சேர்றதுக்கு முக்கியமான காரணம். அடுத்த வருஷம் 9, 10 வகுப்புகளைத் தொடங்கலாம்னு ஊர்மக்கள் கூடி முடிவெடுத்திருக்கோம். அரசு உதவி செஞ்சா, மாணவர்களோட எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

கற்பகத் தருவான பனை மரத்தினால் மலர்கிறது, மாணவர்களின் கல்வி.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism