Published:Updated:

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?ஓர் அலசல்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?ஓர் அலசல்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

Published:Updated:
வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!
வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

*நாட்டுரக தக்காளி விதைகள் பல்கலைக்கழகத்தில் இருப்பு உள்ளன.

*விலை ஏற்றத்துக்குக் காரணம், அதிக வெயில்தான்.

*தக்காளி அதிகம் விளையும் மகாராஷ்டிராவில் கடுமையான வறட்சி.

‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று பெருமையோடு சொல்லக்கூடிய தக்காளியை, அம்பானி, அதானிகள்கூட வாங்கி சமைக்க யோசிக்கும் அளவுக்கு எகிறிக் கிடக்கிறது அதன் விலை. கடந்த வாரம் கிலோ 120 ரூபாய் என்று உயர்ந்த அதன் உச்சவிலையில் உறைந்து போனார்கள் மக்கள். தக்காளி தங்கமாக ஜொலிப்பதும், சில மாதங்களில் சாலையோரங்களில் சீந்துவாரில்லாமல் கொட்டிக்கிடப்பதும் நாம் கண்கூடாகக் காணும் நிகழ்வு. தக்காளிக்கு மட்டும் ஏன் இந்த விலை முரண்பாடு? விளைச்சல் குறைவு, விதைத் தட்டுப்பாடு, வறட்சி, வெயில் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உண்மையில், என்னதான் நடக்கிறது? என்பதை அறியும்விதமாக தமிழ்நாட்டில் அதிக அளவில் தக்காளி சாகுபடி நடந்துவரும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை வலம் வந்தோம்.

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருவநிலை மாற்றம்தான் காரணம்!

நம்மிடம் பேசிய முன்னோடி தக்காளி விவசாயியும், தக்காளி நாற்று உற்பத்தியாளருமான பாப்பனூத்து ராமநாதன், ‘‘உடுமைலைப்பேட்டை பகுதியில மட்டும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்புல தக்காளி சாகுபடி நடக்குது. நான், 15 வருஷமா தக்காளி விவசாயம் செய்றேன். அதோட விவசாயிங்களுக்குத் தேவையான காய்கறி நாத்துகளையும் உற்பத்தி செஞ்சு கொடுக்கிறேன். இந்த போகத்துல தக்காளி விலை கூடிப்போச்சுனு புலம்புறாங்க.

தக்காளி வருஷத்துல ரெண்டு பட்டத்துல விளையும். ஒண்ணு மாசிப் பட்டம், ரெண்டாவது புரட்டாசிப்

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

பட்டம். இந்த மாசிப் பட்டத்துல (பிப்ரவரி-மார்ச்) எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் கொளுத்திச்சு. வறுத்தெடுத்த அந்த வெம்மையில பல ஆயிரம் ஏக்கர் நிலத்துல நடவு செஞ்சிருந்த தக்காளி செடிக பூக்குற பருவத்துல கருகிப்போயிடுச்சு. அதனால, போதிய விளைச்சல் இல்லை. அதேசமயம் தமிழ்நாட்டுல தக்காளி சீசன் இல்லாதப்ப, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்கள்ல இருந்து தக்காளி வரத்து இருக்கும்.

இந்த தடவை அங்கயும் போதாதகாலம். தக்காளி அதிகம் விளையுற மகாராஷ்டிராவுல கடுமையான வறட்சி... குடிநீருக்கே பஞ்சமாகிப்போச்சு. கர்நாடகா, ஆந்திராவுலயும் மழை பொய்த்துப் போச்சு. ஆகமொத்தம், உற்பத்தி குறைஞ்சதுதான் தக்காளி வெலை கிடுகிடுனு ஏறிப்போனதுக்கு காரணம். பருவநிலை மாற்றம்தாங்க தக்காளியைக் காலி பண்ணிடுச்சு’’ என்றவரிடம், ‘‘தக்காளி விதைப்பதுக் கல்தான் இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம். சரியான பட்டத்தில் விதை கிடைக்காமல் போனதால் தான் விவசாயிகளால் சாகுபடியைத் தொடங்க முடியவில்லை என்கிறார்களே அது உண்மையா?’’ எனக் கேட்டோம்.

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

உடனே நம்மை அழைத்துச் சென்று அவரது நிழல்பந்தல் நாற்றங்கால் பண்ணையைக் காட்டியப்படி பேசினார் ராமநாதன், ‘‘இங்க ஒரு லட்சம் தக்காளி நாத்துங்க குழித்தட்டுல முளைச்சு தயாரா இருக்கு. விதைத் தட்டுப்பாடு இருந்தா, இவ்வளவு நாத்துகளை உற்பத்தி செஞ்சிருக்க முடியுமா? விதைத் தட்டுப்பாடு அப்படீங்கிறதெல்லாம் தவறான தகவல். போன் அடிச்சா லோடுக்கணக்குல விதையைக் கொண்டு வந்து கம்பெனிக்காரங்க கொட்டிடுவாங்க. அதைவிட, சில வருஷமா தக்காளி விவசாயிங்க யாரும் நேரடியா விதைகளை வாங்கி நாத்து பாவுறதில்லை. இப்ப எல்லாமே ரெடிமேடுதான். நவீன நாற்றுப்பண்ணைகள்ல குழித்தட்டுல இருக்கிற நாத்துகளை வாங்கிட்டுப் போய்த்தான் நடுறாங்க. இதனால, சாகுபடி காலத்துல 25 நாள் மிச்சமாகுது. ஒரு நாத்து விலை 50 பைசாவுக்கு விற்பனை செய்றோம்’’ என்றார்.

பசுமைக்குடில்தான் நிரந்தர தீர்வு!

தக்காளி விலையில் உள்ள சிக்கல் குறித்து, உடுமலைப்பேட்டை, தோட்டக்கலை உதவி இயக்குநர், முனைவர். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘பசுமைக்குடில் அமைத்து, அதில் தக்காளி நடவு செய்தால், வெயில் காலங்களில்கூட, நல்ல மகசூலை எடுக்க முடியும். இதன் மூலம் நல்ல வருமானமும் பெறலாம். மானியத்துடன் பசுமைக்குடில் அமைக்க தோட்டக்கலைத்துறை உதவி செய்கிறது. உடுமலைப்பகுதி சீதோஷ்ண நிலைக்கு காய்கறி விவசாயம் உகந்ததாக இருக்கிறது.

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!

விவசாயிகள் தங்கள் நிலத்தில்  குறைந்தபட்சம் 25 சென்ட் அளவிலாவது பசுமைக்குடில் ஒன்றை அமைக்கவேண்டும். அதிக வெயில், மழை, பனிக் காலங்களில் திறந்தவெளி காய்கறி விவசாயம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மகசூல் குறைவதால், சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றமடைகிறது. ஆனால், பசுமைக்குடில் விவசாயத்தில் இந்தப் பாதிப்பு ஏதும் இல்லை. பங்கமில்லாமல் மகசூல் கிடைப்பதால் நல்ல லாபம் பார்க்கமுடியும். இதுபோன்ற சமயங்களில் தேவையான காய்கறிகளும் மக்களுக்குத் தடையில்லாமல் கிடைக்கும்.

பசுமைக் குடிலை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல விளைச்சலும், வருமானமும் நிச்சயம் கிடைக்கும்’’என்று ஆலோசனை சொன்னார்.

தொடர்புக்கு,
எம்.ராமநாதன்,
செல்போன்: 94875-87078.

ஒரு கிலோ விதை, ஒரு லட்சம்!

விதைகள் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்ட ராமநாதன், ‘‘இன்னிய தேதியில நாட்டுரக தக்காளிய யாரும் நெனைச்சுக்கூட பாக்கிறதில்லை. உயர் விளைச்சல் கொடுக்கிற பன்னாட்டு ரக தக்காளியத்தான் விரும்பி நடவு செய்றாங்க. 120 நாள்ல 25 டன்  மகசூலை அள்ளிக்கொடுக்குது அந்த விதைங்க. இந்த விதைங்க, மறுமுளைப்புத்திறன் இல்லாத மலட்டு விதைங்க. அடுத்த போகத்துக்கு திரும்பவும் கடைக்காரங்ககிட்டதான் கையேந்தணும். ஆனால், நாட்டுரக தக்காளி அப்படியில்ல. நல்லா பழுத்த பழத்துல இருந்து நாமே விதையை எடுத்துக்கலாம். ஆனா, நாட்டுரகத்துல 10 டன் மட்டும்தான் மகசூல் கிடைக்கும்.

வீரிய ரக தக்காளியின் தோல் தடிமனா இருக்கும். சீக்கிரமா அழுகாது. ஆனா, நாட்டுரக தக்காளியின் மேல்தோல் லேசா இருக்கிறதால ரொம்பநாள் தாங்காம சீக்கிரம் உடைஞ்சிடும். அதனால வியாபாரிங்க வீரிய ரகத்தைத்தான் விரும்புறாங்க. இதனால, நாட்டுரகத்துக்கு மௌசு குறைஞ்சுபோச்சு. ஆனா, நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலமா மேம்படுத்தப்பட்ட மறுமுளைப்புத்திறனுள்ள நாட்டுரக விதைகளைப் பயன்படுத்தி குழித்தட்டு நாத்துக்களை உற்பத்தி செய்றேன்.

நாட்டு ரகமான, பி.கே.எம்.1, ஒட்டு ரகங்களான மருதம், பூசாரூபி, கோ-1, கோ-2 ரக நாத்துக்களை விவசாயிங்க விரும்பி வாங்கிட்டுப்போறாங்க’’ என்றவர் பன்னாட்டு விதைகளின் விலை பற்றிய ‘அடேங்கப்பா தகவ’லையும் பதிவு செய்தார்.

‘‘நாட்டுரக தக்காளி விதை ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், வீரிய ரக விதை ஒரு கிலோ 30 ஆயிரம் ரூபாய்ல இருந்து ஒரு லட்சம் ரூபாய்வரைக்கும் விற்பனை செய்றாங்க. ‘ஆப்பிள் தக்காளி’ங்கிற வீரியரகம் ஏக்கருக்கு 60 டன் வரை மகசூல் கொடுக்கிறதால, அந்த விதை கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்குப் போகுது. நாட்டுரக விதை ஒரு ஏக்கருக்கு 100 கிராம் போதும். அதில் இருந்து ஒரு ஏக்கருக்குத் தேவையான 10,000 நாத்துகளைக் குழித்தட்டுல உற்பத்தி செஞ்சுக்கலாம். என்னதான் பன்னாட்டு கம்பெனி ரகங்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தாலும், புளிப்புச்சுவையும் அதிக ருசியும் கொண்ட நாட்டுரக தக்காளிக்கு ஈடாகுமா?’’ என்றார் ராமநாதன்.

விதைத் தட்டுப்பாடு காரணமில்லை!

வெள்ளாமை பங்கமாச்சு... தக்காளி தங்கமாச்சு!‘கோடைவெயிலுக்கு ஏற்ற, நாட்டுரக விதை போதுமான அளவு கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டதுதான் தக்காளி விளைச்சல் குறைவுக்குக் காரணம்’ என்று சிலர் புகார் சொல்கிறார்கள் இது உண்மையா? என்ற கேள்வியை, கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காய்கறி பயிர்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் டி.ஆறுமுகத்திடம் முன்வைத்தோம். ‘‘இது முற்றிலும் தவறான தகவல்.

பி.கே.எம். என்கிற மேம்படுத்தப்பட்ட நாட்டுரக தக்காளி விதைகள் தேவையான அளவு பல்கலைக்கழகத்தில் இருப்பு உள்ளது. ‘எனி டைம் சீடு’ என்கிற தானியங்கி விதை வழங்கு இயந்திரம் ஒன்று பல்கலைக்கழகப் பூங்கா முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் 10 ரூபாய் தாளைப் போட்டு உங்களுக்குத் தேவையான காய்கறி விதையின் பெயரை அழுத்தினால் ‘பட்’ என்று விதை பாக்கெட் வந்து விழும். அது இன்றும் நடைமுறையில் உள்ளது.

தக்காளி விலை ஏற்றத்துக்கு, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொளுத்திய அதிக வெயில்தான் காரணம். அதனால், பூக்களின் மகரந்தச் சேர்க்கை தடைப்பட்டு விட்டது. மகரந்தம் செல்லும் சிறிய தண்டுக்குழாயின் ஈரத்தன்மை காய்ந்து விட்டபடியால், உள்ளே போகவேண்டிய மகரந்தத் துகள்கள் உதிர்ந்துபோயின. அதனால் தக்காளிச் செடிகள் கருகிவிட்டன. இதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த விலையேற்றம்’’ என்றார்.

தொடர்புக்கு, முனைவர்.டி.ஆறுமுகம், தொலைபேசி: 0422-6611374

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism