Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

சிப்பிக் காளான் வளர்ப்பு!


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஜூன் 29-ம் தேதி, ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716

இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்டோரா

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூன் 29-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, முகவரி: திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு. தொலைபேசி: 04285-241626

நாட்டுக்கோழி வளர்ப்பு!

பெரம்பலூர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 28, 29-ம் தேதிகளில், ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04328 -291459

தென்னை சாகுபடி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 29- ம் தேதி, ‘தென்னை சாகுபடிக்கேற்ற மேலாண்மைப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

நாட்டுச் சர்க்கரை உற்பத்தி!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கட்டியம்பந்தல் கிராமத்தில் உள்ள கண்ணன் ராஜகோபாலன் பண்ணையில் ஜூன் 30ம் தேதி ‘நாட்டுச் சர்க்கரை உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு’ நடைபெற உள்ளது. கலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், முன்னோடி விவசாயி ஈரோடு ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் தனபால் ஆகியோர் பயிற்சி வழங்க உள்ளார்கள். அனுமதி இலவசம். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99625-74570

கட்டணப் பயிற்சி

பூச்சிவிரட்டித் தயாரிப்பு!

தண்டோரா

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 2-ம் தேதி, ‘இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிப்புப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தண்டோரா

உலக இயற்கை விவசாயிகள் மாநாடு!

புதுடெல்லியில், சர்வதேச இயற்கை வேளாண்மை இயக்கமும், இந்திய இயற்கை உழவர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக இயற்கை விவசாயிகள் மாநாட்டில் விவசாயிகளின் அனுபவ உரைகளுடன் கருத்தரங்கு நடைபெற உள்ளது.

விவசாயிகள் தங்களின் சிறந்த அனுபவங்கள், கண்டறிதல்கள், கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள், இடுபொருட்கள், தாங்கள் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைச் சமாளித்த விதம் என பல வகையான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் கருத்தரங்கு இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் கருத்துரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில்... 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் எழுதி, ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்புக்கு அனுப்ப வேண்டும்.

இயற்கை விவசாயத்தில் நீண்டகாலம் இயங்கி வரும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் சிறந்த கருத்துக்களைத் தேர்வு செய்வர். தேர்வு செய்யப்பட்ட கருத்துரைகள் தமிழில் இருந்தால், அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். அங்கு தேர்வு செய்யப்பட்டால், அக்கருத்துரைகளை உலக இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பேச வாய்ப்பளிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, தலவுமலை, அறச்சலூர், ஈரோடு-638101

செல்போன்: 94436-63562

மின்னஞ்சல் : organicalert@gmail.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism