ஆடி மாதத்தைத் தொடர்ந்துவரும் மாதங்களில் பருவமழை கிடைக்கும் என்பதால்தான், ‘ஆடிப்பட்டம் தேடி விதை!’ என்ற சொலவடையைச் சொல்லி வைத்தனர், நம் முன்னோர். குறிப்பாக மானாவாரி விவசாயிகளுக்கு இப்பட்டம் சிறந்த பட்டம். கிடைக்கும் மழைநீரை முறையாகச் சேகரித்து வைத்தால்... நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை எளிதாகச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு... தமிழ்நாடு வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கி வரும் ‘தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை’, தண்ணீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களையும் அதைச் சார்ந்த பணிகளையும் செயல்படுத்தி வருகிறது.

ஆடிப்பட்டச் சிறப்பிதழுக்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர் ஆர்.ஆனந்தகுமாரைச் சந்தித்தோம்.

“இந்த பூமியில் இருந்து நம் தேவைக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ‘பூமிக்கு தண்ணீரைத் திருப்பி அளிக்க ஏதாவது செய்கிறோமோ?’ என்று ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். பூமியில் தண்ணீர் வளத்தைப் பெருக்க நாம் செய்யும் பணிகள், நமக்குத்தான் லாபமாக அமையும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தண்ணீரைச் சேமிப்பது என்பது வங்கியில் பணத்தைச் சேமிப்பது போன்றதுதான். கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பண்ணைக் குட்டைகள் ஆகியவை விவசாயத்துக்கு முக்கியமான நீர் ஆதாரங்கள். ஒவ்வொரு பண்ணையிலும் இவை இருக்கவேண்டியது அவசியம்.

மானாவாரி நிலங்களில் வாய்க்கால்கள், ஓடைகள், சரிவுப் பகுதிகள் ஆகியவை முக்கியமான நீர்வரத்துப்பகுதிகள். இவற்றைத் தேவையான இடங்களில் உருவாக்குவதும், முறையாகப் பராமரிப்பதும் தண்ணீர் வளத்தைப் பெருக்கும்வழிகளில் முக்கியமானவை. தவிர, கசிவுநீர்க் குட்டை, பண்ணைக் குட்டை, கால்நடைக் குட்டை, சமூகக் குட்டை, அமிழ்வுக் குட்டை ஆகியவற்றையும் தனியார் நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தைப் பெருக்கலாம். இதேபோன்று ஓடைகள், வாய்க்கால்கள், சரிவுப் பகுதிகளில் அமைக்கப்படும் தடுப்பணைகளும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலமாக கிராமங்களில் நீர்ச்சேமிப்பு முறைகளைச் செயல்படுத்தி

வருகிறோம். விவசாயிகள் சொந்த விருப்பத்தின் பேரில் குழுக்களாக இணைந்தோ, தங்கள் நிலங்களில் தனியாகவோ அமைப்பதாக இருந்தாலும், அதற்கு வழிகாட்டி வருகிறோம்” என்ற ஆனந்தக்குமார், தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் துணை இயக்குநர் செண்பகராஜை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய செண்பகராஜ், தண்ணீர் சேமிப்புமுறைகள் குறித்து விளக்கமாகச் சொன்னார்.

“நெல், கரும்பு, வாழை, போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து... பயறு, எண்ணெய்வித்துப் பயிர்களுக்கு மாறுவதும் தண்ணீர் சேமிப்புக்கான ஒரு வழியாகும். முகமையின் மூலமாக மானாவாரி நிலப்பகுதிகளில்தான் அதிகமாக திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். குறிப்பாக, மானாவாரிப் பகுதிகளில் ஓடைகள் தண்ணீர்வரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றைச் சீரமைத்தாலே மானாவாரிப் பகுதிகளில் விளைச்சலை அதிகப்படுத்தலாம்.

குட்டைகள், தடுப்பணைகளை உருவாக்கியும் நீரைச் சேமிக்கலாம். பயன்பாட்டில் இல்லாத கைவிடப்படப்பட்ட தூர்ந்து போன கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மீண்டும் தண்ணீர் சேமிக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்ற செண்பகராஜ், குட்டை, தடுப்பணைகளை உருவாக்குவது குறித்துச் சொன்னார்.

“குட்டைகளில் நான்கு வகைகள் உள்ளன. நான்கு வகைகளையும் முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் அமைத்து வருகிறோம். விவசாயிகளே குழுக்களாக இணைந்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள விருப்பப்பட்டாலும், இதுபோன்ற குட்டைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

தூர்ந்து போன கிணற்றில் நீரை சேமிப்பதுபோல தண்ணீர் வற்றிப்போன ஆழ்துளைக் கிணற்றிலும் நீரை சேமிக்கலாம்.

தண்ணீர் வற்றிபோன ஆழ்துளைக் கிணற்றின் மேலே பொருத்தப்பட்டிருக்கும் குழாயைச் சுற்றி துளைகள் இட வேண்டும். ஆழ்துளைக்கிணற்றின் முகப்பை (குழாய்), கொசுவலையால் இறுக்கிக் கட்ட வேண்டும். குழாயைச் சுற்றி 3 மீட்டர் விட்டம், 2 மீட்டர் ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். குழிக்குள் 2 அடி உயரத்துக்கு... 40 எம்.எம்.ஜல்லி (பெரிய சைஸ்), 20 எம்.எம். ஜல்லி (சின்ன சைஸ்), ஆற்றுமணல் என்று அடுக்கடுக்காகக் கொட்ட வேண்டும். மழை பெய்யும்போது கிடைக்கும் நீர், இந்த அமைப்பின் வழியாக வடிந்து பூமிக்குள் செல்லும். இதன்மூலம் ஆழ்துளைக்கிணற்றில் நீர் சேகரமாவதோடு, சுற்று வட்டாரத்திலும் நிலத்தடி நீர் உயரும். மேலே சொன்ன அளவுகள் பொதுவான(தோராய) அளவுகள்தான். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்” என்ற செண்பகராஜ் நிறைவாக திட்டங்கள் செயல்படும் முறைகள் குறித்துச் சொன்னார்.

“நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்கள் நீங்கலாக, மீதமுள்ள 26 மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளன. மானாவாரி நிலங்கள் மற்றும் தரிசுநிலங்களில், 3,000 முதல் 5,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். திட்ட காலம் 5 ஆண்டுகள். ‘5 ஆண்டுகளில் எந்தப் பகுதியில், எவ்வளவு பரப்பளவில், செயல்படுத்தப்பட உள்ளது’ என்பதற்கான திட்ட அறிக்கை முதலில் தயார் செய்யப்படும்.

திட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட கிராமங்களில் விழிப்பு உணர்வு முகாம் நடத்தப்படும். கிராம மக்களில் 12 முதல் 20 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு நீர்வடிப்பகுதி சங்கம் உருவாக்கப்படும். இச்சங்கத்தின் தலைவர், கிராம சபையில் தேர்ந்தெடுக்கப்படுவார். சங்கத்தின் தலைவரும், மாவட்ட நீர்வடிப்பகுதி அலுவலர்களும் இணைந்து, பயனாளிகள் குழுக்கள் மூலமாகத் திட்டத்தைச் செயல்படுத்துவார்கள்.

திட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கிராம மக்களே முடிவு செய்து, கிராம சபை தீர்மானத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படும். திட்டத்தைச் செயல்படுத்தும் பயனாளிகளின் நிலங்களில் திட்ட மதிப்பீட்டில், 80 சதவிகித மானியத் தொகையில் மரம் வளர்ப்பு, பயிர் சாகுபடி சம்பந்தமான பணிகள் செய்து கொடுக்கப்படும். தவிர, வேளாண்மைத் துறை மற்றும் இதர துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் பயிர் திட்டங்களுக்கான மானியங்களைப் பெறவும் வாய்ப்புண்டு.

கிராமத்தில் நிலம் இருப்பவர்கள் மற்றும் நிலமில்லாதவர்களைக் கொண்டு பயனாளிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு சுழல்நிதியும், கடன் வசதியும் செய்து கொடுக்கப்படும்.

திட்ட மதிப்பில் 56 சதவிகித நிதி... நீர், நிலவள மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும். அதாவது தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்தில் தடுப்பணைகள், குட்டைகள் கட்டுவது என தண்ணீர் சேமிப்பை மையமாகக் கொண்டு, மக்கள் பங்களிப்போடு இப்பணிகள் செய்யப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவோர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலர்களை அணுக வேண்டும். அவர்கள் ஆய்வு மேற்கொண்டு முகமைக்குப் பரிந்துரை செய்வார்கள். அதன் பிறகு பணிகள் தொடங்கும். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நீர் ஆதாரங்களை, அந்தந்தப் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து பாதுகாத்து, மழைநீரைச் சேகரித்து, தங்களது தரிசுநிலங்களை விளைநிலங்களாக மாற்றிகொண்டு, திட்டத்தின் பயனை முழுமையாக அடையலாம்” என்றார்.

தொடர்புக்கு,
தமிழ்நாடு நீர்வடிப்பகுதி
மேம்பாட்டு முகமை,
55, திரு.வி.க. தொழிற்பேட்டை,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032,
தொலைபேசி: 044-22250224.

கசிவுநீர்க் குட்டை (Percolation Pond)

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு மட்டுமே அமைக்கப்படும் ஒருவகையான குட்டை வகையைச் சேர்ந்தது. இது புறம்போக்கு நிலங்களில் அமைக்கக்கூடியது. இதை அமைக்க, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

50 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் என்ற அளவில், அமைத்தால், 70 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீரைச் சேமிக்க முடியும்.

பண்ணைக் குட்டை (Farm Pond)

இது தனியார் நிலங்களில் அமைக்கக்கூடியது. இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். குட்டையில் மீன்கள் வளர்த்து வருமானமும் பார்க்கலாம். பண்ணையில் நிலத்தடி நீர்மட்டம் சீராக இருக்கும். பக்க அளவுகள் 25 மீட்டர் இருக்குமாறு சதுரமாக ஒன்றரை மீட்டர் ஆழத்தில் குட்டை அமைக்க 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதன் மூலம் 25 ஆயிரம் கனஅடி அளவுக்கு மேல் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

கால்நடைக் குட்டை (Cattle Pond)

இதை புறம்போக்கு நிலங்களில் மட்டுமே அமைக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவைக்கு உதவும். பண்ணைக் குட்டை அமைப்பது போன்றே, இதையும் அமைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

அமிழ்வுக் குட்டை (Sunken Pond)

நீர்வரத்துள்ள ஓடைகள், வாய்க்கால்களில் அமைக்கப்படுபவை, அமிழ்வுக் குட்டைகள். இவை மூலம் மண் அரிமானம் தடுக்கப்படும். நீர்நிலைகளில் வண்டல் படிவதைத் தடுக்கும். தண்ணீர் ஆங்காங்கே தேங்கிச் செல்லும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்தலாம். 30 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் என்ற அளவில் இவற்றை அமைக்கலாம். இதன் மூலம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீரைச் சேமிக்க முடியும். இதை அமைக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

தடுப்பணை (Check Dam)

புறம்போக்கு நிலங்களின் கீழ் வரும் ஓடை அல்லது சரிவுப் பகுதிகளில் தடுப்பணைகளை அமைக்கவேணடும். இவற்றை அமைப்பதன் மூலம், வண்டல் மண் படிவதைத் தடுக்க முடியும். ஓடையில் செல்லும் மழைநீரின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, தண்ணீரைத் தேக்க உதவும். அதிகளவில் மழைத் தண்ணீர் வீணாவதைத் தடுக்க முடியும். ஓடையின் கரைகள் அரிக்கப்படுவதையும் தடுக்க முடியும். சமதளப் பகுதியில் 200 மீட்டர் இடைவெளியிலும், சரிவுப் பகுதிகளில் இடத்துக்குத் தகுந்தவாறும் தடுப்பணைகளை அமைக்க வேண்டும். பெரும்பான்மையான தடுப்பணைகள் சரிவுப் பகுதியில்தான் அமைக்கப்படுகின்றன. கான்கிரீட் சுவர்களாலும், கற்களாலும் இந்த தடுப்பணைகள் அமைக்கப்படுகின்றன. தடுப்பணைகளைக் கட்ட 75 ஆயிரத்திலிருந்து ஒரு லடசத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

தூர்ந்த கிணற்றில் நீர்ச் சேமிப்பு!

பாழடைந்த பழையக் கிணற்றுக்கு அருகே 3 மீட்டர் விட்டம், ஒன்றரை மீட்டர் ஆழம் என்ற அளவில், குழி எடுக்கவேண்டும். குழியின் அடியில் ஒரு குழாய் பொருத்தி அக்குழாயின் மறுமுனையைக் கிணற்றுக்குள் விடவேண்டும். குழியின் ஓரத்தில், பெரிய கற்களைக் கொண்டு சுவரெழுப்ப வேண்டும் (கான்கிரீட் வளையங்களைப் பயன்படுத்தியும் சுவர் அமைக்கலாம்). அதற்குள் 40 எம்.எம்.ஜல்லி (பெரிய சைஸ்), 20 எம்.எம்.ஜல்லி (சின்ன சைஸ்), ஆற்றுமணல் என்ற வரிசையில் அடுக்கடுக்காகக் கொட்ட வேண்டும்.

மழை பெய்யும்போது கிடைக்கும் நீர், இந்த அடுக்குகளின் வழியாக வடிகட்டப்பட்டு குழிக்கு அடியில் சென்று குழாய் வழியாக, கிணற்றில் சென்றுவிழும். இதன் மூலம், மழைக் காலங்களில் பாழடைந்த கிணற்றில் தண்ணீர் சேமிக்க முடியும். இந்த அமைப்புக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.