*விதைகள் மண்ணோடு உறவாடி முளைக்கும்.

*மண்ணில் நீர் சேமிக்கப்படும்.

*வேர்கள், மண்ணுக்குள் எளிதில் ஊடுருவும்.

*களைகள் கட்டுப்படும்.

*மண்ணில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியேறும்.

உழவு என்பது விவசாயத்தில் இன்றிமையாத ஒன்று. உழவு செய்யும் விதத்தைப் பொறுத்தே நிலத்தில் பயிர்களின் வளர்ச்சி அமையும். களை மேலாண்மையிலும் உழவு முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆடிப்பட்டத்தில் கையாளவேண்டிய உழவுமுறைகள் குறித்து... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உழவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் தேவசேனாதிபதி பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

“தமிழகத்தில் 7 வேளாண் கால நிலை மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் மழைப்பொழிவு வேறுபட்டாலும்... நிலத்தை உழவுசெய்யும் முறையில், பொதுவாக சில விஷயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உழவில் பாரம்பர்யமாக விவசாயிகள் கடைப்பிடித்துவரும் ‘கோடை உழவு’ முக்கியமானது. கோடையில் உழவு செய்யப்படும் நிலங்களில், மழையைப் பொறுத்து ஆடி மாதம் விதைக்கப்படுகின்றன. குறிப்பாக, ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் மானாவாரிப் பயிர்களுக்கு கோடை உழவே முக்கியமானது.

கோடை உழவு செய்யாதவர்கள்... ஜூன், ஜூலை மாதங்களில் கிடைக்கும் மழையை வைத்து உழவு ஓட்டி பயிர் செய்யலாம். ஆனால், கோடை உழவில் கிடைக்கும் நன்மைகள், அதற்கு பிந்தைய உழவுகளில் குறைவாகத்தான் கிடைக்கும். மண்ணின் தன்மையைப் பொறுத்து உழவு செய்வதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடினத்தன்மை வாய்ந்த மண், சாதாரண மண் அல்லது நல்ல மண். இரண்டு மண் வகைகளிலும் உழவுசெய்யும் முறைகள் குறித்துப் பார்ப்போம்.

கடினத்தன்மை வாய்ந்த மண்!

தற்போது டிராக்டரில் ‘கொத்துக் கலப்பை’ இணைத்து அதிகம் உழவு செய்யப்படுகிறது. முதல் உழவு, இரண்டாவது உழவு என்று அனைத்துக்கும் இந்த வகையான கலப்பையே பயன்படுத்தப்படுகிறது. நாம் எந்த கலப்பையில் உழவு செய்யவேண்டும் என்பதை மண்ணின் தன்மைதான் முடிவு செய்கிறது. அது தெரியாமலே அனைத்து வகையான மண்ணுக்கும் கொத்துக் கலப்பையைப் பயன்படுத்துகிறார்கள். இது தவறான முறை.

கடினத்தன்மை வாய்ந்த மண்ணுக்கு முதல் உழவாக ‘சட்டிக்கலப்பை’ அல்லது ‘இயந்திரக் கலப்பை’யில்... இரண்டு, மூன்று முறை குறுக்குநெடுக்காக உழவு செய்யவேண்டும். இந்தக் கலப்பை, இரண்டு அடியில் இருந்து இரண்டரை அடி ஆழத்துக்கு மண்ணைக் கிளறி விடும். அதற்குப் பிறகே, கொத்துக் கலப்பையில் உழுது விதைக்கவேண்டும். களிமண், களிப்பு மண், பாறை மண், இறுகிப் போன மண் வகைகளில் இந்த வகையான கலப்பையைப் பயன்படுத்தலாம். தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் களிமண் நிலங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அந்த நிலங்களில் இந்த உழவு முறையைப் பின்பற்றலாம்.

நல்ல மண் அல்லது சாதாரண மண்!

பொலபொலப்புத் தன்மை வாய்ந்த மண்ணை ‘நல்ல மண்’ என்று குறிப்பிடுகிறோம். இம்மண்ணில் டிராக்டரில் சாதாரணமாக இணைத்து உழவு செய்யப்படும் கொத்துக் கலப்பையால் ஒன்று, இரண்டு முறை உழவு செய்தாலே மண் பொலபொலப்பாகிவிடும். செம்மண், மணல் கலந்த மண் வகைகள் இந்த வரிசையில் சேரும். நிலக்கடலை, இந்த மண் வகைகளுக்கு ஏற்ற பயிர். தவிர, இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘உளிக்கலப்பை’ கொண்டு உழவு செய்தால், நிலத்தின் கடினத்தன்மையைப் போக்கி அதிகமாக நீர் சேகரமாக வழிவகுக்கும். உளிக்கலப்பை 60 சென்டி மீட்டர் ஆழத்துக்குச் செல்லும். அதில் ஓட்டிய பிறகு, சட்டிக் கலப்பை மற்றும் கொத்து கலப்பையால் ஓட்டி விதைக்கலாம்” உழவு முறைகள் குறித்துச் சொன்ன தேவசேனாதிபதி, கோடை உழவு குறித்துச் சொன்னார்.

கோடை உழவு!

“கிளறிவிட்ட நிலத்துக்கும், கடின நிலத்துக்கும் மழைநீர்ச் சேகரிப்பில் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்தே உழவின் அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஒரு பகுதியில் 1,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது என்றால், அதில் 150 முதல் 170 மில்லி மீட்டர் மழை கோடைமழையாக இருக்கும். கோடைமழைக்கே நிலத்தை உழவு செய்து வைத்தால்தான் ஆடிப்பட்டத்தில் விதைக்க முடியும். மானாவாரிப் பயிர்களுக்கு கோடை உழவு முக்கியம். கோடை உழவு செய்யப்படும் நிலமே வளமான மண்ணாக மாறும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால், மண் வளமாகிறது. களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது” என்றார்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-6611246.

குறுகியகால ரகமா... நீண்டகால ரகமா?

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.

தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும்... அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு. ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்வது நல்லது. நெல்லில் 100-110 நாட்கள் வயதுடைய ரகங்களைத் தேர்வு செய்யலாம். சோளம், நிலக்கடலை, துவரை, கேழ்வரகு, சாமை, தினை ஆகியன 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர்கள். அதனால் இவற்றைத் தேர்வு செய்யலாம்.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். இந்தப் பருவத்தில் நீண்டகால ரகங்கள் அல்லது பயிர்களை (6 மாதங்கள்) தேர்வு செய்யலாம்.

பயிர்களுக்கான உழவுமுறை!

கேழ்வரகு: இரண்டு அல்லது மூன்று முறை இயந்திரக் கலப்பையால் உழ வேண்டும். நாட்டு கலப்பை என்றால், ஐந்து முறை உழ வேண்டும்.

மக்காச்சோளம்: சட்டிக் கலப்பையால் ஒரு முறை உழுது, கொத்துக்கலப்பையால் இரண்டு முறை உழ வேண்டும்.

நிலக்கடலை: கொத்துக் கலப்பையால் இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். நாட்டுக் கலப்பை என்றால், மூன்று அல்லது 4 முறை உழ வேண்டும்.

பொதுவாக, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பருமனான விதைகளுக்கு குறைந்த உழவும், நெல், சிறுதானியங்கள் போன்ற சன்னமான விதைகளுக்கு அதிக உழவும் தேவைப்படுகின்றது. அப்படி விதைக்கும்போதுதான் விதை, மண் சரிசமமாக பிணைந்து விதை முளைப்பு முழுமையாகிறது. பயிர்களுக்கு ஏற்ற உழவு செய்வதால், உழவுக்கு ஆகும் செலவைக் குறைத்து நல்ல லாபம் ஈட்டலாம்.