காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூரில், ‘பாரம்பர்ய வேளாண்மை விதைகள் உற்பத்திப் பயிற்சி’ அண்மையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்துகொண்டனர். ‘பிரதான் மந்திரி விவசாயப் பயிற்சித் திட்ட’த்தின் கீழ் விவசாயிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது. முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.

‘அரியனூர்’ ஜெயச்சந்திரன் பேசும்போது, ‘’விவசாயிக்கு மண்வளம் மிக முக்கியம். இயற்கை விவசாயம் பற்றி பேசுவது எளிது. ஆனால், கடைசிவரை அதைக் கடைபிடிப்பதுதான் மிகவும் முக்கியம். ரசாயன உரங்கள் இட்ட நிலங்களை ‘கொம்பு சாண உரம்’ உபயோகிப்பதன் மூலம் உடனடியாக இயற்கைக்கு மாற்றலாம்” என்றவர் கொம்பு சாண உரம் தயாரிப்பு குறித்து விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார்.

அடுத்ததாக முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்கள் தயாரிப்பு முறைகளை விளக்கினார்.

“தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்து முடித்தவர்கள் ‘முழு இயற்கை விவசாயி’ எனச் சொல்லிக்கொள்ளத் தகுதியுடையவர்கள். தற்போது இயற்கை விவசாயத்துக்கான வழிகாட்டியாக ‘பசுமை விகடன்’ புத்தகம் இருக்கிறது. இப்புத்தகத்தில் வெளிவரும் தகவல்களைப் படித்தாலே இயற்கை விவசாயம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும்” என்றும் விவசாயிகளிடம் சொன்னார் சுப்பு.

கள்ளை மீட்க நெடும் பயணம்!

சென்னை, சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய கூட்டமைப்பின் செயலாளர் கு.நல்லசாமி, “மத்திய-மாநில அரசுகள், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையையும், விவசாய கமிஷன் பரிந்துரையையும் ஒரே தேதியில் வெளியிட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். அதோடு, ‘‘சட்டத்தின் ஆட்சியை முன்னிறுத்தி, கள்ளை மீட்கவும், காவிரித் தீர்ப்பை அரசுகள் ஏற்கவும், எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தவும், விவசாய கமிஷனை செயல்படுத்தவும், தேர்தல் முறைகேடுகளைக் களையவும், கலப்படத்தை ஒழிக்கவும்... ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ‘நீதி கேட்பு நெடும்பயணம்’ நடைபெறும்’’ எனவும் அறிவித்தார்.

மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள கண்ணன் ராஜகோபாலன் பண்ணையில், ‘நாட்டுச்சர்க்கரை உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு’ அண்மையில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் கரும்பு விவசாயி தனபால், முன்னோடி இயற்கை விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், மூத்த வேளாண் விஞ்ஞானி அரு.சோலையப்பன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். கரும்பு பயிரிடும் விவசாயிகள், மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயார் செய்வதில் தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

பயிற்சியில் பேசிய கரும்பு விவசாயி தனபால், ‘’யூரியா போட்டு பயிர் செய்த கரும்பில் வெல்லம் காய்ச்சினால், அது நீர்த்துப் போய் விடும். இயற்கை விவசாயத்தில் விளைந்த கரும்பில் மட்டுமே முழுபலன் பெற முடியும். கரும்பை வளர் மொட்டிலேயே கிள்ளி விட்டால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வரும். குறைந்த விலைக்கு ஆலைக்குக் கொடுப்பதை விட்டு விட்டு நாமே மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம் கிடைக்கும்” என்றார்.