‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது...

சிறகை விரித்துப் பறப்போம்... நம் உறவில் உலகை அளப்போம்...

விளையாடலாம் நிலாவிலே... நிழல் மூழ்குமோ தண்ணீரிலே

வானைப் புரட்டிப்போடு... புது வாழ்வின் கீதம் பாடு!’

என இனியெல்லாம் பாட முடியாது என்பதுதான் தற்போதைய ‘லேட்டஸ்ட்’ ஆனால் ‘ஹாட்டஸ்ட்’ தகவல்..

பல நூறு ஆண்டுகளுக்கு முன், ‘மில்க்கி வே’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பால்வெளியைப் பார்த்த எகிப்தியர்கள், ‘பசுவின் பால் குளம்’ என்று வர்ணித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ‘டால்பின்கள் நீந்தும் காட்சி’ என்று வர்ணித்தனர். கலிலியோ, அரிஸ்டாட்டில் என்று வரிசையாக பல ஆராய்ச்சியாளர்கள் தொலைநோக்குக் கருவிகளை வைத்து, விண்வெளியையும், பால்வெளியையும் ஆராய்ந்து ஆராய்ந்து வான சாஸ்திரம், சோதிடம், விண்வெளி ரகசியம் என்று பலவற்றையும் நமக்கு அளித்தனர். அவர்கள் பால்வெளியின் அழகிலும், அறிவிலும் மயங்கியே கிடந்தனர். ஆனால், இப்போது வெளியிடப்பட்ட புதிய ‘அட்லஸ்’ ஒன்று விஞ்ஞானிகளுக்கே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் 99 சதவிகித மக்களால், இரவு நேரத்தில் பால்வெளியை... அவ்வளவு ஏன் அழகான இரவு நேர வானத்தையே பார்க்க முடியாது. காரணம், மின்சார விளக்குகளால் ஒளிரும் ஒளி. அமெரிக்காவில் 80 சதவிகித மக்களாலும், ஐரோப்பாவில் 60 சதவிகித மக்களாலும் வானத்தின் இயற்கை அழகை இரவில் பார்க்கக்கூட முடிவதில்லை. மின்சார விளக்குகளின் ஒளியைத் தாண்டி நமது கண்களால் வான் வெளியை நோக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்விளக்குகளால் ஏற்பட்டுள்ள மாசு, பால்வெளியையும், பூமிப்பந்தையும் கிட்டத்தட்ட துண்டித்தே விட்டது.

இத்தாலியைச் சேர்ந்த மின்ஒளி மாசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியளர் பேபியோ பால்ச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் ஒவ்வொரு பகுதியின் மின்சார ஒளியின் அளவீட்டு விவரங்கள் தரப்பட்டுள்ளன. இவர் தலைமையிலான ஆய்வுக்குழு, பூமியில் சுமார் 35 ஆயிரம் இடங்களில் இந்த அளவீட்டை மேற்கொண்டுள்ளது. இவர்களின் கணக்கீட்டின்படி ஒளிமாசுவில் சிங்கப்பூர் முதல் இடம் வகிக்கிறது. அதாவது, சிங்கப்பூரில் இரவில் ஒருவர் வான் வெளியைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு மின்சார விளக்குகளின் ஒளி, வானத்தையும் பூமியையும் பிரித்துவிடுகிறது. குவைத், கத்தார், ஐக்கிய அரபு நாடுகளின் நிலையும் படுமோசம்.

அதேசமயம் ஆப்பிரிக்க நாடுகளின் பெரும்பாலான மக்கள் தங்கள் தலைக்கு மேலே அழகான விண்வெளியைக் கொண்டுள்ளனர், பார்த்து ரசித்து வருகின்றனர்.

“உலகின் முதல் அட்லஸில் பார்த்த காட்சிகளும், தற்போதைய அட்லஸில் கண்ட காட்சிகளும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வானவெளியைப் பார்த்து, நட்சத்திரங்களைப் பார்த்து பார்த்து இயற்றப்பட்ட இலக்கியங்கள், தத்துவம் மற்றும் எழுதப்பட்ட அறிவியல், வான சாஸ்திரக் குறிப்புகள் அனைத்தின் மூலத்தையும் நாம் இன்று இழந்துவிட்டோம்’’ என்று பால்ச்சி வருத்தம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

‘‘ஒருகாலத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே, வானத்தின் அழகை ரசிக்க முடியும். ஆனால், இன்று பல மைல் தொலைவுக்கோ, கடலின் நடுப்பகுதிக்கோ செல்லவேண்டி வந்துவிட்டது’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் விஞ்ஞானிகள்.

வான்வெளியை ஆராய்வது விண்வெளி ஆராய்ச்சிக்கு மட்டும் தேவையானது அல்ல, நுண் உயிரியல், மருத்துவம், உயிர் சார்ந்த ஆய்வு என பலதுறைகளுக்கும் தேவையானது. ‘‘மின்சாரத்தை ‘எல்இடி’ விளக்குகள் மிச்சப்படுத்துகின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும்கூட இந்த விளக்குகள்தான் நீண்ட காலத்துக்கு பூமியின் ஒளிமாசுக்கு முதல் காரணமாக இருக்கப்போகின்றன’’ என்று கவலைகொள்கிறார்கள் விஞ்ஞானிகள்.

‘‘இத்தாலியில் ஏற்கெனவே மின்விளக்குகளின் மாசு குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். தேவையான இடத்துக்கு மட்டுமே, அதிலும் பூமிக்கு மட்டுமே வெளிச்சம் அடிக்கும் வகையிலான விளக்குகள் அமைத்து அழகான வானவெளியைக் காண இருட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இது ஒளிமாசுவைக் கட்டுப்படுத்த போதுமானது அல்ல. அதேசமயம் அதிகரிக்காமல் இருப்பதற்கான ஒரு சிறு முயற்சியே’’ என்கிறார் பால்ச்சி.

‘‘ரசாயனம், கார்பன்-மோனாக்சைடு, அணுக்கழிவு உட்பட அனைத்து மாசுக்களையும் போலவே கட்டாயம் குறைக்கப்பட வேண்டியது ஒளி மாசுவும் ’’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இரவை மாற்றிய மின்விளக்குகள் நம் இயல்பை மாற்றிய அபாயம் நிகழ்ந்தே விட்டது.