ஆண்டுதோறும் கோயம்புத்தூர் கொடீசியா சார்பில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச வேளாண் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கண்காட்சி, கடந்த ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. பீளமேட்டில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தன.

கண்கவர் ‘காயர்’ கண்காட்சி!

வேளாண் கண்காட்சியில் இந்த ஆண்டு, மத்திய அரசின் கயறு வாரியம் (Coir Board) தனி கண்காட்சி ஒன்றை நடத்தியது. தென்னைநார் பொருட்கள் தயாரிப்புத் தொழில்நுட்பம், விற்பனை குறித்த கருத்தரங்கம் தினமும் நடைபெற்றது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்தார் மத்திய காயர்போர்டு சேர்மன் சி.பி.ராதாகிருஷ்ணன். இந்தக் கண்காட்சி விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மின்மோட்டார் ஒன்று, பம்ப்செட் நான்கு!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பெரிய குமாரப்பாளையம் விவசாயி பி.கனகராஜ் என்பவர் கண்டுபிடித்து பார்வைக்கு வைத்திருந்த மின்மோட்டார் கம்ப்ரசர் பம்ப்செட், கிணற்றுப்பாசன விவசாயிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

5 குதிரைசக்தி மின்மோட்டார் ஒன்றுடன் நான்கு கம்ப்ரசர் பம்ப் செட்களை இணைத்து, அதில் இருந்து வெளியேறும் காற்றுசக்தி மூலம் மூன்று ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து ஒரேநேரத்தில் தண்ணீரை எடுத்து பாசனம் செய்யமுடியும். இதை எல்சிடி திரையிலும் ஓடவிட்டிருந்தனர். மின்மோட்டார் இல்லாமல், இதற்கான மொத்த செலவு 35,000 ரூபாய். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போர்வெல் நீரைக் கூட இந்த கம்ப்ரசர் பம்ப்செட் கொண்டுவரும் ஆற்றல் கொண்டது என்று கூறப்பட்டதால், கனகராஜின் ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது.

பசுமை விகடன் ஸ்டாலில் நான்கு நாட்களும் திருவிழா கூட்டம்தான் சந்தா பதிவு செய்த விவசாயிகள், விகடன் பிரசுர புத்தகங்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

ஜூலை 15-ம் தேதி கண்காட்சி துவங்கிவிட்டது. என்றாலும், அடுத்த நாள் 16-ம் தேதி துவக்கவிழா நடத்தப்பட்டது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணைவேந்தர் ராமசாமி பேசும்போது, ‘‘தமிழ்நாடு அரசு, வேளாண்மைக்காக பல்வேறு நல திட்டங்களைக் கொடுத்துள்ளது. அதுகுறித்த பதிவுகள் எங்குமே காணப்படவில்லை. தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’’ என்று சூடாகக் கேட்டார். அடுத்துப் பேச வந்த அமைச்சர் வேலுமணியும் அதைச் சுட்டிக்காட்டியதோடு, ‘‘சமூக உணர்வுடன் மழைநீர்ச் சேகரிப்பு தொடர்பான விழிப்பு உணர்வு விளக்கப் பட பேனர் வைக்க வந்த விவசாயி ஒருவரை விரட்டி அடித்துள்ளது கொடீசியா நிர்வாகம். இது கண்டிக்கதக்கது. வரும் காலங்களில் இதுபோன்ற குறைகளை திருத்திக்கொள்ளவேண்டும்’’ என்று கடுமையாக சொன்னார். மேடையில் இருந்த கொடீசியா தலைவர் சசிகுமார் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பூச்சிகொல்லிக்கு 8 நாள்... பஞ்சகவ்யாவுக்கு 40 நாள்!

நலம் பாரம்பர்ய அறக்கட்டளை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் உள்ள விநாயகநல்லூர் எஸ்டேட் திருமண மண்டபத்தில், ‘பாரம்பர்ய நெல் திருவிழா’ ஜூலை 16-ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் எஸ்.பழனிசாமி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பாரதி மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விழாவில், பேசிய தமிழக கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘தற்போது தமிழக அரசு பின்பற்றி வரும் இலவச கால்நடைத் திட்டங்கள் இயற்கை வேளாண்மைக்கு பெரிதும் உதவுகின்றன.

உணவு என்ற பெயரில் நாம் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு வருகிறோம். ‘கேன்சர்’ போன்ற கொடிய நோய்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் இயற்கைக்கு மாறவேண்டும். கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்போதுதான் இயற்கை விவசாயம் சாத்தியமாகும். பூச்சிக்கொல்லி தெளித்தால், 8 நாட்கள்தான் பூச்சி வராது, பஞ்சகவ்யா தெளித்தால் 40 நாட்களுக்கு பூச்சி வருவதில்லை. இஷ்டத்துக்கு மருந்து அடிக்கும் போது நன்மை செய்யும் பூச்சிகளை அழித்து விடுகிறோம். அவரவர் சக்திக்கு ஏற்றபடி ஒவ்வொரு விவசாயியும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்’’ என்று விஷயங்களை அழகாக அடுக்கினார்.

இந்த விழாவில், இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் எம்.வீராசாமி, எஸ்.வரதராஜன், சிவப்பிரகாசம் பிள்ளை ஆகிய மூன்று விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்பட்டன.

- மு.ஜெயராஜ்