Published:Updated:

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷித்

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!
பிரீமியம் ஸ்டோரி
நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!
நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

ரந்து விரிந்த வயலில் நெற்பயிர்கள், அணி வகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான வாழைக்கன்றுகள், தென்னை மரங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட பால்மாடுகள்... இவையெல்லாம் இருக்கும் பண்ணை, ஓர் ஆசிரமத்தில் இருந்தால் ஆச்சர்யம்தானே! ஆம், ஆன்மிகம் மற்றும் கல்விப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ராமகிருஷ்ண தபோவனம், விவசாயத்திலும் முழுக்கவனத்தை செலுத்தி வருகிறது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கொம்புக்கு அருகே உள்ளது, திருப்பராய்த்துறை கிராமம். இங்குதான் எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது, தபோவனம். 

ஓர் அதிகாலை வேளையில் ஆசிரமத்துக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் உற்சாகத்தோடு வரவேற்றுப் பேசினார், ஆசிரமத் தோட்டத்தின் பொறுப்பாளர் ருத்ரானந்த சுவாமிகள்.

உணவு உற்பத்தி உன்னதமான பணி!

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!“ஆசிரமத்தின் மொத்த பரப்பு 40 ஏக்கர். ஸ்ரீவிவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளி, விடுதி, அலுவலகம், வீடுகள் எல்லாம் இதுலதான் இருக்கு. விவசாயம்ங்கிறது மனிதவாழ்க்கையில முதன்மையான அங்கம். உயிர்களை வாழ வைக்கிறதுக்கு உணவு அவசியம். அந்த உணவை உற்பத்தி செய்றதுங்கிறது உயர்வான, உன்னதமான பணி. இதுல எங்களுக்கு லாபநோக்கம் கிடையாது. விவசாயத்தை நோக்கி மக்களை அழைச்சிக்கிட்டுப் போகவும், இங்க வரக்கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்களை ஊக்கப்படுத்தவும், அவங்களுக்கு எல்லாம் உந்துசக்தியாக இருக்கணுங்கிற நோக்கத்துலதான் 1948-ம் வருஷத்துல இருந்து இங்க விவசாயம் நடந்துகிட்டு இருக்கு.

ஆசிரமத் தேவைக்கு ஆரோக்கிய உணவு!

இதனால், கூடுதல் பலனாக எங்க பள்ளிக்கூடத்துல படிக்கிற விடுதி மாணவர்கள் 560 பேருக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க முடியுது. இந்தப் பகுதிகள்ல உள்ள 30 விவசாயத் தொழிலாளர்களுக்கு வருஷம் முழுக்க வேலை கொடுக்க முடியுது. ஆறேழு விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் தபோவனத்துல உள்ள வீடுகள்ல நிரந்தரமா வசிக்கிறாங்க.

தபோவனத்துல ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா, சாரதா தேவி ஜெயந்தி விழா, நவராத்திரி விழானு ஆண்டு முழுவதும் நிறைய விசேஷங்கள் நடக்கும். பல்வேறு பகுதிகள்ல இருந்து பத்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் இங்க வருவாங்க. அவங்களுக்கும் ஆரோக்கியமான உணவு கொடுக்க முடியுது. அதனாலதான் இங்க நாங்க விவசாயத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறோம்” என்று அறிமுகம் கொடுத்த ருத்ரானந்த சுவாமிகள், பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

கொஞ்சம் செயற்கை... நிறைய இயற்கை!

“12 ஏக்கர் நிலத்துல நெல், 12 ஏக்கர் நிலத்துல வாழை, 2 ஏக்கர் நிலத்துல பசுந்தீவனம், வேலி ஓரங்கள்ல 2 ஆயிரத்து 500 தென்னை, 50 வேப்ப மரங்கள் இருக்கு. 62 கலப்பின மாடுகள் இருக்கு. இது களியும் வண்டலும் கலந்த பூமி.  ஆரம்பத்துல ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்திகிட்டு இருந்தோம். இப்போ குறைச்சு கொஞ்சமாதான் ரசாயனத்தைப் பயன்படுத்துறோம். அஞ்சு வருஷமா இயற்கை உரங்களை அதிகளவுல கொடுக்கிறதுனால உயிர்ச்சத்துகள் நிறைஞ்சு மண் நல்லா வளமா மாறியிருக்கு. பயிர்களும் நல்லா ஊட்டமா வளருது. 

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

இயற்கை இடுபொருட்கள்!

மாட்டுச் சாணத்தோட வேப்பந்தழை, எருக்கந்தழை, நொச்சித்தழை, தென்னை ஓலை கலந்து தயாரிக்கிற மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு தயார்  செஞ்சு பயிர்களுக்குக் கொடுக்கிறோம். அதோட, பஞ்சகவ்யாவும் அதிகளவுல கொடுக்கிறோம். இதனால, நோய் நொடி இல்லாம பயிர்கள் ஆரோக்கியமா வளர்ந்து, நிறைவான மகசூல் கொடுக்குது. நாங்களே மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிச்சு பயன்படுத்துறோம். அதுல நல்ல பலன் கிடைக்குது.

பழைய நெல்லில் கைக்குத்தல் அரிசி!

12 ஏக்கர் நிலத்துல குறுவை, தாளடினு ரெண்டு பருவத்துக்கும் சேர்த்து ஆயிரம் மூட்டை (60 கிலோ மூட்டை) அளவுக்கு மகசூல் கிடைக்குது. அறுவடை செய்த நெல்லை ஒரு வருஷம் வரைக்கும் வெச்சிருந்து, பிறகு கைக்குத்தல் அரிசியாக்கி பயன்படுத்துவோம். பழைய நெல்தான் கைக்குத்தல் அரிசிக்கு தரமா இருக்கும். கைக்குத்தல் அரிசி தயாரிக்கிறதுக்கான மெஷின், தபோவனத்துலயே இருக்கு. ஆயிரம் மூட்டை நெல்லுல இருந்து 700 மூட்டை கைக்குத்தல் அரிசி கிடைக்கும். இது எங்க மொத்த தேவைக்கும் சரியா இருக்கும். அரிசியாக்குறப்போ கிடைக்கிற 300 மூட்டை உமியை எருக்குழியில போட்டுடுவோம்.

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

மாணவர்களுக்கு தண்ணீர் கலக்காத பால்!

12 ஏக்கர்ல ரெண்டு போகத்துல கிடைக்கிற வைக்கோல் 62 மாடுகளுடைய தீவனத்துக்கு சரியா இருக்கு. எப்பவுமே 15 மாடுகள் வரை கறவையில் இருக்கும். ஒவ்வொரு மாடும் தினமும் 18 லிட்டர் வரை கறக்கும்னாலும் நாங்க 15 லிட்டருக்கு மேல கறக்க மாட்டோம். கன்னுக்குட்டிகளுக்கு தாராளமா விட்டுடுவோம். அதனால, கன்னுக்குட்டிகள் திடகாத்திரமா வளருது.  தினமும் 230 லிட்டர் பால் கிடைக்குது. இதுல கொஞ்சம் கூட தண்ணீர் கலக்காம காய்ச்சி, நல்ல சத்தான பாலா விடுதி மாணவர்களுக்குக் கொடுத்துடுவோம். தபோவன ஊழியர்கள், பக்தர்கள், விவசாயத் தொழிலாளர்களோட தேவைகளுக்கும் பால் பயன்படுது.

கோடை விடுமுறை, தீபாவளி, பொங்கல் விடுமுறை காலங்கள்ல மாணவர்கள் தங்களோட சொந்த ஊர்களுக்கு போயிடுவாங்க. அந்த நேரத்துல மிச்சமாகுற பாலை, ஒரு லிட்டர் 23 ரூபாய்னு  திருச்சியில உள்ள தனியார் பால் பண்ணைக்கு வித்துடுவோம்.

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

தேவைக்கு போக, தேங்காய் விற்பனை!

வேலி ஓரங்கள்ல 2 ஆயிரத்து 500 தென்னை மரங்கள் இருக்கு. இதுல 500 மரங்கள் 4-5 வருஷ வயசுடைய மரங்கள். மீதியுள்ள 2 ஆயிரம் மரங்கள்  20, 30 வருஷங்களை கடந்த மரங்கள். ஒரு வருஷத்துக்கு சராசரியா 2 லட்சத்து 40 ஆயிரம் காய்கள் கிடைக்குது. எங்களுக்கே ஒரு லட்சம் தேங்காய் வரை தேவைப்படும். மீதி காய்களை மட்டும் விற்பனை செஞ்சிடுவோம்.

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

தாய் மரத்தில் நார்... பக்கக் கன்றில் இலை!

12 ஏக்கர்ல வாழை சாகுபடி செய்றோம். நெய்பூவனும், நேந்திரனும் சாகுபடி செய்றது வழக்கம். 6 அடி இடைவெளியில ஏக்கருக்கு 1,100 வாழைனு பயிர் பண்றோம். ஏக்கருக்கு ஆயிரம் தார்களுக்குக் குறையாம கிடைக்கும். எங்க தேவைக்குப் போக, மீதியுள்ளதை விற்பனை செய்வோம். வாழைத்தார்கள் அறுவடை செஞ்சு முடிச்சதும் தாய் மரத்தை நார் உரிக்க குத்தகைக்கு விடுவோம். அதே மாதிரி பக்கக் கன்றுகளை இலை எடுக்க குத்தகைக்கு விடுவோம். இது மூலமாவும் பண்ணைக்கு ஒரு வருமானம் கிடைச்சுடும்” என்ற ருத்ரானந்த சுவாமிகள் நிறைவாக,

நெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்!

சில ஆண்டுகளில் முழுஇயற்கை!

“பால், வாழை, தேங்காய்னு வெளியில விற்பனை செய்றது மூலமாக கிடைக்கிற வருமானத்தை பண்ணைச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்குவோம். இப்போ இயற்கைக்கு கொஞ்சம் கொஞ்சமா  மாறுறதுல நல்ல பலன் கிடைக்குது. அடுத்தடுத்த வருஷங்கள்ல முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவோம்” என்று தெம்பாக சொன்னார்.

தொடர்புக்கு,
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்,
செல்போன்: 0431-2614351.

தென்னைக்கு கருவாட்டுத் தூள்!

“தென்னை மரத்துக்கு மேம்படுத்தப்படுத்தப்பட்ட மாட்டு எருவோட கருவாட்டுத்தூளைக் கலந்து கொடுக்கிறப்போ நல்ல பலன் கிடைக்குது. அதனால மரத்துல காய்ப்பு அதிகமாகுது”என்கிறார், ருத்ரானந்த சுவாமிகள்.

மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு!

“62 மாடுகள் மூலமா தினமும் முக்கால் டன் முதல் ஒரு டன் வரை சாணம் கிடைக்குது. 20 அடி நீளம் 15 அடி அகலம், 6 அடி ஆழம் கொண்ட ரெண்டு உரக்குழிகள் அமைச்சிருக்கோம். முதல் ரெண்டு மாசத்துக்கு அதுல சாணம் மட்டும் போடுவோம். அதுக்கு மேல வேம்பு, எருக்கன், நொச்சி இலை, தென்னை ஓலை எல்லாம் கலந்து 2 டன் போடுவோம். அடுத்து 2 டன் வண்டல் மண் போட்டு மறுபடியும் சாணம், இலைதழைகள், வண்டல் மண் என சுழற்சி முறையில போட்டுக்கிட்டே வருவோம். குழி நிறைஞ்ச பிறகு மூணு நாலு மாசம் அப்படியே விட்டுடுவோம். அதுக்கப்பறம் அந்த எருவை எடுத்து தேவைக்குப் பயன்படுத்திக்குவோம். இந்த உரக்குழியில் எரு தீருறதுக்குள்ள அடுத்த குழியில தொழுவுரம் தயாராகிடும்” என்கிறார், ருத்ரானந்த சுவாமிகள்.

பூச்சிவிரட்டி!

ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து... இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி, மூடி வைத்து 20 நாட்கள் தினமும் கலக்கி வர வேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் வாசனையுடைய 5 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் 10 லிட்டர்  மாட்டுச் சிறுநீரைக் கலந்து 20 நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். பிறகு இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து...

100 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். இது, குருத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் என்பது தபோவனத்தின் அனுபவ பாடம்.

கரைகளைக் காக்கும் கினியா புல்!

“எங்க பண்ணைக்குப் பக்கத்துல காவிரி ஆறு ஓடுது. ஆத்துல வெள்ளம் வர்றப்போ பண்ணைக்குள் தண்ணி வந்துடாம இருக்க, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 அடி அகலம் 4 அடி உயரத்துக்கு கரைகள் அமைச்சிருக்கோம். இந்தக் கரைகள்ல கினியா புல்லை நட்டிருக்கிறதால மண் அரிப்பு ஏற்படுறதில்லை. இந்தப் புல் மாடுகளுக்கு தீவனமாவும் பயன்படுது. இதுபோக, மாடுகளுக்கு தீவனமா கோ-3 புல்லும் சாகுபடி செய்றோம்” என்கிறார், ருத்ரானந்த சுவாமிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism