தர்மபுரி வறண்ட பூமி என்றுதான் அனைவரும் நினைப்போம். ஆனால், அந்த எண்ணத்தை மாற்றும் வகையில், விவசாயத்தில் பல சாதனைகளைச் செய்து வருகிறார்கள், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினர்.

சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் பணிகள் குறித்து அதன் மேலாளர் சிவலிங்கத்திடம் பேசினோம். “ஆரம்பத்திலிருந்தே விவசாயம் செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் பல காரணங்களால் விவசாயத்தை விட்டு விலக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியதில், ‘பசுமை விகடன்’ இதழுக்கு முக்கிய பங்கு உள்ளது .

முன்பு ‘ஆத்மா’ விவசாயிகள் சங்கத்தின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து வந்தேன். அதுதான் என்னை இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கத் தூண்டியது. சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இயற்கை விவசாயத்தின் மூலம் சிறுதானியங்களை உற்பத்தி செய்து, அதை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2011-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். அதற்காக விவசாயிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினோம். தற்போது இதில் 1021 பேர் (55 குழுக்கள்) உறுப்பினர்களாக உள்ளனர்” என்று பெருமையோடு குறிப்பிட்ட சிவலிங்கம், தொடர்ந்தார்.

“இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கும் சிறுதானியங்களை மாவட்ட அளவில் சந்தைப்படுத்தி

வருகிறோம். அவற்றை இந்திய அளவில் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம். அதற்காக 13 கோடி ரூபாய் செலவில் இயந்திரங்கள், தளவாடங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எங்களுடைய செயல்பாட்டை பார்த்து இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாய் நிதி உதவி கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். மாநில திட்டக்குழு 22 இலட்சம் நிதி உதவியும் அளித்துள்ளது. ‘டி மில்லட்’ என்ற பெயரில் நாங்கள் எங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தப் போகிறோம். இதற்காக மத்திய அரசின் தேசிய வேளாண்மை உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பதிவும் செய்துள்ளோம். அடுத்த கட்டமாக ஆன்லைனிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததிருக்கிறோம். மேலும், பழங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் பயிர்செய்து சந்தைப்படுத்த இருக்கிறோம்” என்ற சிவலிங்கம் நிறைவாக.

“ எங்களின் நோக்கம், இயற்கை விவசாயம் அனைத்து விவசாயிகளிடமும் பரவ வேண்டும். விவசாயிகள் இப்படி நிறுவனங்களை ஆரம்பித்து, அவர்களின் விளைபொருட்களை எளிதாக சந்தைப்படுத்த வேண்டும் என்பதுதான். உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்க நினைக்கும் விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும், என்னைத் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன்” என்றார்.

தொடர்புக்கு,
சிவலிங்கம்,
செல்போன்: 97875-45231.