
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
- ஆசிரியர்
இலவசப் பயிற்சிகள்
கெண்டை மீன் வளர்ப்பு!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி, ‘பயிர் வகைகளுக்கான மண் வள மேலாண்மை’, 29-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சின்னவெங்காயம்!
நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையத்தில், ஆகஸ்ட் 17-ம் தேதி, ‘சின்னவெங்காயம் மற்றும் பருத்தி சாகுபடி’, 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, ‘மதிப்புக்கூட்டிய மீன்பொருட்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம், தொடர்புக்கு: தொலைபேசி: 04286-266345
செம்மறியாடு வளர்ப்பு!
கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைகழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 16-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04142-290249
ஆடு வளர்ப்பு!
பெரம்பலூர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 17-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’, 23-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘இறைச்சிப் பொருட்களை மதிப்புக்கூட்டுதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04328-291459
சிறுதானிய சாகுபடி!
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘காடை வளர்ப்பு’, 31-ம் தேதி, ‘சிறுதானிய சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 77088-20505
நாட்டுக்கோழி வளர்ப்பு!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

காளான் உற்பத்தி!
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 30-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘இயற்கை விவசாயத்தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, முகவரி: தொலைபேசி: 04285-241626
இறால் வளர்ப்பு!
சென்னை, அசோக் நகர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகத்தில், ஆகஸ்ட் 16, 17-ம் தேதிகளில் ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18, 19-ம் தேதிகளில் ‘கெண்டை மீன் வளர்ப்பு’, 23, 24-ம் தேதிகளில், ‘இறால் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, செல்போன்: 99440-99579
கட்டணப் பயிற்சிகள்
மாடித்தோட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஆகஸ்ட் 27-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ` 100. முன்பதிவு அவசியம்.
தொலைபேசி: 04652-246296.
வாழைசாகுபடி!
தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம், ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், ஆகஸ்ட் 17-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ 18-ம் தேதி, ‘சிறுதானியங்கள் மதிப்புக்கூட்டல்’ 24-ம் தேதி, ‘நட்டுக்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி, ‘வாழை சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் ` 100 கட்டணம். முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 0461-2269306
அறிவிப்பு
தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.