Published:Updated:

‘முதலில் கீரை விதையுங்கள்!’

‘முதலில் கீரை விதையுங்கள்!’
பிரீமியம் ஸ்டோரி
‘முதலில் கீரை விதையுங்கள்!’

ஆர். குமரேசன்பயிற்சி

‘முதலில் கீரை விதையுங்கள்!’

ஆர். குமரேசன்பயிற்சி

Published:Updated:
‘முதலில் கீரை விதையுங்கள்!’
பிரீமியம் ஸ்டோரி
‘முதலில் கீரை விதையுங்கள்!’

ஞ்சில்லா காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில், மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றிய பயிற்சிகள், விழிப்பு உணர்வுக் கருத்தரங்குகளை ‘பசுமை விகடன்’ தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் பலனாக இன்றைக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாடிவீடுகள் பசுமையாக மாறியிருக்கின்றன. அந்த வகையில், கடந்த ஜுலை 24-ம் தேதி, திண்டுக்கல் நகரில் மாடித்தோட்டம் மற்றும் காளான் வளர்ப்புக் கருத்தரங்கை ‘பசுமை விகடன்’, ‘அவள் விகடன்’ மற்றும் திண்டுக்கல் ரோட்டரி குயின்சிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

 தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ரோட்டரி குயின்சிட்டி தலைவர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக முன்னோடி இயற்கை விவசாயி வெள்ளைச்சாமி கலந்துகொண்டார்.

‘முதலில் கீரை விதையுங்கள்!’

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்துப் பேசிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர். உதயகுமார், “மாடித்தோட்டம் அமைப்பவர்கள் முதலில் கீரைகளைப் பயிரிடுவது நல்லது. குறைந்த நாளில் கீரைகள் அறுவடைக்குத் தயாராகி விடும். அது உங்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கும். தொடர்ந்து, முள்ளங்கி, கொத்தவரை ஆகியவற்றை விதைக்கலாம். அடுத்த கட்டமாக காய்கறிகளை நடவு செய்யலாம். அதேபோல தொட்டிகளில்தான் செடிகளை வளர்க்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் காலியாக இருக்கும் எந்தப் பொருளிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைப்பதால், உடம்பு மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியமாகும். மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பாக விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எங்கள் மையத்தை அணுகலாம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘முதலில் கீரை விதையுங்கள்!’

தொடர்ந்து பேசிய திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாண் அலுவலர் சின்னசாமி, “வீட்டில் தோட்டம் அமைப்பது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் இல்லை. சிலர், செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் கான்கிரீட்டுக்குள் இறங்கி விடும் என்ற பயத்தில் ‘பாலிதீன் ஷீட்’ போட்டு அதன்  மீது தொட்டிகளை வைத்து செடிகளை வளர்க்கிறார்கள். ஆனால், அது தேவையில்லாதது. செங்கல்லை வைத்து, அதன் மீது தொட்டிகளை வைத்தாலே போதுமானது. வெளியே கசியும் தண்ணீரை, செங்கல் உறிஞ்சிக் கொள்ளும்” என்று நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்தார்.

 காளான் வளர்ப்பு குறித்துப் பேசிய திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி காளான் பண்ணையாளர் கவிதா மோகன்தாஸ், “காளான் வளர்ப்புத் தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பத்துக்கு பத்து அடி இடம் இருந்தாலே போதும், சிப்பிக்காளன் உற்பத்தி செய்யலாம். ஆனால், காளான் வளர்ப்பில் இறங்குவதற்கு முன், சந்தை வாய்ப்பை உருவாக்கிக்கொள்வது முக்கியம்” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism