Published:Updated:

ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?

ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?
பிரீமியம் ஸ்டோரி
ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?

கு.ராமகிருஷ்ணன்பிரச்னை

ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?

கு.ராமகிருஷ்ணன்பிரச்னை

Published:Updated:
ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?
பிரீமியம் ஸ்டோரி
ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?
ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?

மிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி தண்ணீரை இந்த ஆண்டும் கொடுக்காமல் கர்நாடக மாநிலம் ஏமாற்றி விட்டது. இதனால், வழக்கம் போல டெல்டா பகுதியின் குறுவை போக நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத அவலநிலை உருவானது. இந்நிலையில், ‘சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும் சூழ்நிலையில் உள்ளனர், டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள். இன்னமும் அது குறித்த தெளிவான பதில் இல்லாததால், சம்பா சாகுபடிக்கான விதைப்பைத் துவக்க முடியாமல் நெருக்கடி நிலையில் இருக்கிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க‘த்தின் துணைச் செலயாளர் சுகுமாறன், ‘‘காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில், ‘கர்நாடகா, 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குத் தர வேண்டும்’ எனச் சொல்லப்பட்டது. ஆனால், கர்நாடகா அதை மதிக்கவேயில்லை. இறுதித் தீர்ப்பில், ‘192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும்’ எனச் சொல்லப்பட்டது. அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விழா நடத்தி, ‘பொன்னியின் செல்வி’, ‘காவிரித்தாய்’ எனப் பட்டங்கள் சூட்டி அ.தி.மு.க-வினர் மகிழ்ந்தார்கள். ஆனால், இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீர் இதுவரை வந்து சேரவே இல்லை. கர்நாடகா தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தமிழக அரசோ தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு! - ‘சம்பா’வும் அம்போவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டும் குறுவையைக் கைவிட்டதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் வாழ்வாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடியையாவது வெற்றிகரமாக மேற்கொண்டால்தான் விவசாயிகள் ஓரளவுக்காவது நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முடியும். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால்தான், முன்பட்ட சம்பா பருவத்தில் நீண்டகால நெல் ரகங்களை விதைக்க ஆரம்பிக்க முடியும். பெரும்பாலான விவசாயிகளுக்கு முன்பட்ட சம்பா பருவம்தான் கைகொடுக்கும். இப்பருவத்தில் பூச்சி, நோய்த்தாக்குதல் இருக்காது. சூல் பருவத்துக்கு முன் வடகிழக்குப் பருவமழை கிடைக்கும் என்பதால், அதுவும் நன்மையாக இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 24 டி.எம்.சி அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. 52 டி.எம்.சி அளவுக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான்  அணையைத் திறக்க முடியும். அப்படி பார்த்தால், ஆகஸ்டு மாதக் கடைசியில்தான் திறக்க வாய்ப்புள்ளது. ஆனால், பின்பட்ட சம்பா பருவத்தில் மத்திய கால, குறுகிய கால ரகங்களைத்தான் பயிரிட முடியும். இதில் பூச்சி, நோய்த்தாக்குதல்களுக்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்று வருத்தப்பட்டார்.

நிறைவாகப் பேசிய சுகுமாறன், ‘‘ஜூன், ஜூலை மாதங்களுக்கு சட்டப்படி 44 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா கொடுத்திருக்க வேண்டும். இயற்கையின் கருணையால், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால்தான் தமிழகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைத்தது. அவர்கள் கொடுக்கவேண்டிய தண்ணீரைக் கொடுக்கவேயில்லை. தண்ணீரைப் பெற்றுத் தர தமிழக முதல்வர் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை விரைவாகச் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism