அண்மையில் கூட்டுறவு, நுகர்வோர், உணவுத்துறை குறித்து சட்டசபையில் 110-வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு கொள்முதல் முறை நடைமுறைபடுத்தப்படும்.

நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறை கொண்டு வரப்படும். இதன் மூலம் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலையை பெருமளவு தவிர்க்க முடியும்.

மின்னணு கொள்முதல் அமைப்பதற்கு, ரூ13 கோடியே 43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். நெல் கொள்முதலுக்கான ரசீதுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நெல் கொள்முதல் கணினிமயமாக்கப்படும். கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை, விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கு மூலம் பட்டுவாடா செய்யப்படும்’’ என அறிவித்துள்ளார்.

-பசுமைக் குழு
படம்: சு.குமரேசன்