Published:Updated:

பண முதலைகளுக்கு பாதுகாப்பு... விவசாயிகளுக்கு அடி உதை!

பண முதலைகளுக்கு பாதுகாப்பு...  விவசாயிகளுக்கு அடி உதை!
பிரீமியம் ஸ்டோரி
பண முதலைகளுக்கு பாதுகாப்பு... விவசாயிகளுக்கு அடி உதை!

தூரன்நம்பிசாட்டை

பண முதலைகளுக்கு பாதுகாப்பு... விவசாயிகளுக்கு அடி உதை!

தூரன்நம்பிசாட்டை

Published:Updated:
பண முதலைகளுக்கு பாதுகாப்பு...  விவசாயிகளுக்கு அடி உதை!
பிரீமியம் ஸ்டோரி
பண முதலைகளுக்கு பாதுகாப்பு... விவசாயிகளுக்கு அடி உதை!

வீடு ஜப்தி... டிராக்டர்கள் பறிமுதல்... நிலம் ஏலம்... சுதந்திரம் கிடைத்தது முதல் இன்றுவரை விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுத்துவரும் பரிசுகள் இவைதான். வறட்சி, வெள்ளம், மழை, வெயில், குளிர் என அனைத்து இடர்களையும் சமாளித்து... லாப நஷ்ட கணக்குக்கூட பார்க்காமல் தொடர்ந்து உழைத்து, 120 கோடி மக்களின் பசி தீர்க்கும் விவசாயிகளின் தியாகத்தை யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. இந்திய நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்துவதை விட்டு விட்டு, ஆப்பிரிக்க நாடுகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி.

கடன் தொல்லையால் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தியாவில் உயிரை மாய்த்துக்கொண்டு இறந்துள்ளனர். இன்னும் இறப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி, எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி... விவசாயிகளின் இறப்புக்கு குறைந்தபட்சம் அனுதாபம்கூட காட்டாமல் அதை மூடி மறைக்கத்தான் பார்க்கின்றன. 

பண முதலைகளுக்கு பாதுகாப்பு...  விவசாயிகளுக்கு அடி உதை!

யானையை விட்டுவிட்டு எறும்பை பிடித்து வதைக்கின்றன வங்கிகள். போலிப் பத்திரங்களை அடமானம் வைத்தும், பொய்க்கணக்கு காட்டியும் கோடிகளில் கடன் வாங்கி கட்டாமல் விடுகிறவர்களைக் கண்டுகொள்வதில்லை. அவர்களைப் பாதுகாக்கவும் அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால், 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கடன்பெற்ற விவசாயிகளை... குண்டர்கள் மூலமும் போலீஸ் மூலமும் மிரட்டி அடித்து அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டுகின்றன, வங்கிகள். இதைத் தடுப்பதை விட்டு விட்டு... நிலங்களை கையகப்படுத்திக் கொண்டு விவசாயிகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையவிடுவதில்தான் குறியாக இருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் விவசாயிகளாகப் பிறப்பது அவ்வளவு பாவமா என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண முதலைகளுக்கு பாதுகாப்பு...  விவசாயிகளுக்கு அடி உதை!

இந்திய தேசத்தின் உணவுக் களஞ்சியம், உணவுக் கிண்ணம் என்று கொண்டாடப்படும் பஞ்சாப் மாநில விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகள் அதிகமாக இங்குதான் அரங்கேறுகின்றன. இந்திய மக்களுக்கு சோறு போடும் பணி மட்டுமல்ல... இந்த தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் ராணுவப் பணியிலும் பஞ்சாப் சிங்கங்கள்தான் அதிகம். அந்த சிங்கங்கள், நாட்டுக்காக உழைத்துவிட்டு... இறுதியில் தூக்கில் தொங்கி தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதைப் பார்க்கும்போது, இதயம் கனக்கிறது.

இத்தனைக்கும் பஞ்சாப் வறண்ட பிரதேசமல்ல. 98 சதவிகிதம் பாசன வசதி பெற்ற மாநிலம். நெல்லும், கோதுமையும்தான் நிரந்தரப் பயிர்கள். உற்பத்தித் திறனில் அமெரிக்காவை மிஞ்சியவர்கள், பஞ்சாப் விவசாயிகள். ஆனால் கட்டுபடியான விலை கிடைக்காமல் வறுமையில் தவிக்கிறார்கள், விவசாயிகள். மனசாட்சியே இல்லாமல் நெல்லுக்கும், கோதுமைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது, மத்திய அரசு. பஞ்சாப் மட்டுமில்லாமல், தமிழ்நாடு, கேரளா என தென் மாநிலங்களிலும் விவசாயிகளின் தற்கொலைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த லட்சணத்தில், அண்டை நாடுகளுடன் (Free trade agreement) தடையற்ற வணிகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, மத்திய அரசு. ஒருவேளை, ‘தெற்காசிய நாடுகள் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலம்’ உருவானால், அவ்வளவுதான். இப்போதே சீனப் பொருட்கள் இந்திய சந்தையில் நீக்கமற கிடைக்கின்றன. அதனால், பல்வேறு தொழில்கள் காலியாகி விட்டன. தடையற்ற வணிகத்துக்கு அனுமதி வழங்கினால், இந்தியா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும்.

 கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாத எந்தப் பொருளாதாரக் கொள்கையும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. யோசிக்குமா மத்திய அரசு?

பண முதலைகளுக்கு பாதுகாப்பு...  விவசாயிகளுக்கு அடி உதை!

“அரசு ஊழியருக்கு நிகரான வருமானம் விவசாயிக்கும் வேண்டும்” 

டந்த ஜூலை 18-ம் தேதி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான  கிஸான் ஏக்தா (KISAN YAKTHA) சிம்லாவில் கூட்டம் நடத்தியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திர சர்மா தலைமைவகித்தார். 20 மாநிலங்களிலிருந்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தேவேந்திர சர்மா உணவு மற்றும் விவசாயத்துறை நிபுணர்.  ஐரோப்பிய கண்டத்தில் 15 நாடுகளின் நாடாளுமன்றத்திலும், அமெரிக்க கண்டத்தில் 50 பல்கலைக்கழகங்களிலும் சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.

அக்கூட்டத்தில் பேசிய தேவேந்திர சர்மா, “இந்திய புள்ளியியல் துறை கணக்குப்படி ஏறக்குறைய 25 கோடி விவசாயக் குடும்பங்கள் இந்தியாவில் உள்ளன. ஒரு குடும்பத்தின்  சராசரி மாத வருமானம் 6 ஆயிரம் ருபாய்தான்.

அரசு ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு சம்பள கமிஷனிலும் இரு மடங்காகிறது. ஆனால், விவசாயிகளின் ஊதியத்தில் உயர்வுக்கு வழியேயில்லை. குறைந்தபட்சம் அரசாங்கத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளம் அளவிலாவது விவசாயிக்கு வருமானம் கிடைக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் அரசு,  உணவு உற்பத்தி செய்யும் உழவர்கள் பாதுகாப்பு குறித்து சிந்திப்பதே கிடையாது.

அரசு ஊழியர்களுக்கு இரு மடங்குக்கு மேல் சம்பள உயர்வு கொடுத்துள்ள மோடி அரசு, நெல் விலையை ஆண்டுக்கு 60 ரூபாய் உயர்த்துகிறது. இதுதான் சமூக நீதியா... இதுதான் விவசாயிகளின் நண்பன் செய்கிற காரியமா? விவசாயிகள் தற்கொலை நிறுத்தப்பட வேண்டுமானால், நிலைத்த நீடித்த, உத்தரவாதத்துடன் கூடிய வருமானம் கிடைக்க வழி பிறக்க வேண்டும். அதற்காக, தனியாக, சுதந்திரமாக இயங்கக்கூடிய, ‘விவசாய வருமானக் குழு’ (Agricultural Income committee) அமைக்கப்பட வேண்டும். அதில் சரி பாதி உறுப்பினர்கள் விவசாயிகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு சிறிதளவாவது நீதி கிடைக்கும்.

 கடந்த 10ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு சலுகை வழங்கி இருக்கிறது. ஆனால் விவசாயத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஒரே ஒரு முறை மட்டும் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டு... விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை அறிவித்தால், மட்டுமே விவசாயிகள் இனி மானத்தோடு இந்த மண்ணில் வாழ முடியும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism