பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூரில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, ‘பாமரர் ஆட்சியியல் கூடம்’ அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசும்போது, “மருத்துவம், பொருளாதாரம், கல்வி அனைத்திலும் மிகவும் பின்தங்கிய பகுதி என வேப்பூர் ஒன்றியத்தை தமிழ்நாடு திட்டக் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் பொறுப்பு எங்களுடைய பாமரர் ஆட்சியியல் கூடத்திடம் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இப்பகுதியில் முன்பு அதிகளவில் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, வரகு போன்றவை சாகுபடி செய்யப்பட்டபோது இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருந்திருக்கிறது. காலப்போக்கில் மக்காச்சோளம், பருத்தி மட்டுமே சாகுபடி செய்யத் தொடங்கிய பிறகுதான், இம்மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதி விவசாயிகள் விதை முதல் விற்பனை வரை அனைத்துக்கும் தனியார் நிறுவனங்களையே நம்பி ஏமாந்து கடனாளிகளாகி நிற்கிறார்கள். பாரம்பர்ய வேளாண்மைக்கு மாறினால்தான் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்” என்றார். தொடர்ந்து பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, “தமிழகத்திலேயே மிகவும் சிறிய மாவட்டம் பெரம்பலூர். ஆனால் பருத்தி, மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யும் மாவட்டமாக இது விளங்குகிறது.

இது மிகவும் வேதனையான விஷயம். மக்காச்சோளத்தையும், பருத்தியையும் மக்கள் சாப்பிட முடியுமா? இதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள், விற்பனைக்காக பெரும் நிறுவனங்களைத்தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. சிறுதானியங்களாக இருந்தால் மக்களிடம் விவசாயிகளே நேரடியாக, எளிமையாக விற்பனை செய்ய முடியும். இது மானாவாரி பூமி... மழை பெய்து நிலத்தை தயார் செய்த நிலையில் பருத்தி, மக்காச்சோள விதைகள் விற்பனை செய்யும் கடைகள் மூடிக்கிடந்தால் விவசாயிகளின் நிலை என்னவாகும்? ஆண்டுதோறும் பருத்தி, மக்காச்சோள விதைகளின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்பகுதி விவசாயிகளை ஏமாற்றி தக்கவைத்துக் கொள்வதற்காகவே பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் மூலமாக பன்னாட்டு நிறுவனங்கள் விருதுகள் வழங்குகின்றன. இதில் மிகப்பெரிய சூழ்ச்சி மறைந்துள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் தூரன் நம்பி, இயற்கை வேளாண் பயிற்றுநர் ஏகாம்பரம், பாரம்பர்ய விதைகள் சேகரிப்பாளர் யோகநாதன், சிறுதானியங்கள் மகத்துவ மையத்தைச் சேர்ந்த சண்முகபிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.