Published:Updated:

பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!

பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!

அழைப்பு விடுக்கும் ஆராய்ச்சி நிறுவனம் த.ஜெயகுமார், படங்கள்: அ.சரண்குமார்

பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!

அழைப்பு விடுக்கும் ஆராய்ச்சி நிறுவனம் த.ஜெயகுமார், படங்கள்: அ.சரண்குமார்

Published:Updated:
பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!
பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!

ழக்கமாக வெங்காயம், தக்காளியின் விலை உயர்வுதான் மக்களை பாடாய்ப்படுத்தும். ஆனால், கடந்த ஆண்டு உச்சத்துக்கு போன பருப்பு விலையின் உயர்வு, மக்களை மட்டுமில்ல; அரசுகளையும் பயறு வகை தானியங்களின் மீதான கவனத்தைக் குவிக்க வைத்துள்ளது.

உலகளவில் பயறு வகை தானியங்களின் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும் நம்நாட்டின் தேவைக்கு ஏற்ப உள்நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் பயறு சாகுபடியை மேம்படுத்த, 2016-ம் ஆண்டை ‘சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக’ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து செயலாற்றி வருகிறது. பயறு சாகுபடியை ஊக்குவிக்க அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பல கூட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9-ம் தேதி வரை பயறு சாகுபடி குறித்து பல்வேறு தலைப்புகளில் சென்னை, தரமணியில்  உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகளை நடத்தியது. வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் என்று பலரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

துவக்க நாள் நிகழ்வில் பேசிய எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செல்வம், “நெல், கோதுமை பற்றாக்குறை பிரச்னை 1960-களில் ஏற்பட்டது. அப்போது பஞ்சாபில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால், உணவுப் பற்றாக்குறை பிரச்னை தீர்க்கப்பட்டது. தற்போது மக்களிடையே ஊட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து குறைபாடும் பருப்பு பற்றாக்குறையும், நிலவி வருகிறது. பயறு வகை  தானியங்களின் உற்பத்தியை பெருக்கினால் இந்த பிரச்னைகளை எளிதாக தீர்க்கலாம்” என்றார்.

லெபனான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வறட்சிப் பகுதி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் மஹமத் சோல் பேசும்போது, “இந்தியாவில் 60-களின் மத்தியில் நிகழ்ந்த ஒரு புரட்சி, இப்போது நடைபெற வேண்டும். அதுதான் பயறு உற்பத்தி புரட்சி. பயறு வகை தானியங்களின் மூலம் ஊட்டச்சத்து பலன்கள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாக விற்பனைக்கும் பயறு வகைகள் ஏற்றவை என்பதால் இந்திய விவசாயிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் 1.22 பில்லியன் மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையோடு இருக்கும் சூழலில் பயறு வகைகளின் உற்பத்தி மிகவும் அவசியம்” என்றார்.

பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி பேசும்போது, “தை, சித்திரை மற்றும் குறுவை என்று மூன்று பட்டங்களில் தமிழ்நாட்டில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. நெல் சாகுபடியில் இயந்திரங்கள் பயன்பாட்டால், அறுவடை வேலைகள் எளிதாக முடிந்து விடுகின்றன. அதனால், உடனே பயறு வகை சாகுபடி வேலைகளைத் தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளது. இந்தச் சூழலை விவசாயிகள் பயன்படுத்தி பயறு வகை சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். ஹெக்டேருக்கு 570 கிலோ விளைச்சல் என்ற நிலை மாறி, பயறு வகைகளில் புதிதாக வந்துள்ள ஆராய்ச்சி ரகங்களால் 1000 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பயறு வகை ஆராய்ச்சி நிலையங்களில் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி விவசாயிகள் பயறு சாகுபடியில் ஈடுபட வேண்டும்” என்றார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பேசும்போது, “இந்த ஆண்டை சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக அறிவித்ததற்கு காரணமே பயறு வகை தானியங்களின் பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்பதே. பசியில்லா உலகம் என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்கும்போது குழந்தைகள், பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆஸ்திரேலியா, மொசாம்பிக், மியான்மர் உள்ளிட்ட நாடுகள் பயறு வகைகள் உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும், உலகளவில் இந்தியாவும் இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

இதை இன்னும் அதிகப்படுத்த நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து, பயறு வகைகளை விதைப்பதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். இப்படி விதைப்பதால் ஒரே வகையான பயிர்கள் பயிரிடுவது தவிர்க்கப்பட்டு, பல வகையான பயிர்களை விதைப்பது சாத்தியமாகிறது.

இதுமட்டுமில்லாமல், பயறு வகைகள் மண்ணுக்கு சத்தை அளிக்கக்கூடிய வேலையையும் செய்கின்றன. பயறு வகைகளால் மண்ணின் வளம் காக்கப்படுவதோடு, உற்பத்தியும் பெருகுகிறது. இந்திய உணவுக் கழகமும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதற்கு தயாராக இருந்து வருகிறது” என்றார்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதி விவசாயிகள் நடத்தி வரும் பயறு உற்பத்தியாளர் நிறுவனத்தின் அரங்குகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

பயறு உற்பத்தியில் இந்தியாவின் நிலை

*உலகளவில் இந்தியாவின் உற்பத்தி 22 சதவிகிதம். பயன்பாடு 27 சதவிகிதம்.

*உள்நாட்டு தேவை 18 மில்லியன் டன். 2030-ல் இது 32 மில்லியனாக அதிகரிக்கும். ஆண்டுதோறும் 3-5 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.

*மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பயறு உற்பத்தியில் முன்னணியில் இருந்து வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism