Published:Updated:

நல் வாழ்வியல் திருவிழா!

நல் வாழ்வியல் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
நல் வாழ்வியல் திருவிழா!

அ.அருணசுபா

நல் வாழ்வியல் திருவிழா!

அ.அருணசுபா

Published:Updated:
நல் வாழ்வியல் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
நல் வாழ்வியல் திருவிழா!
நல் வாழ்வியல் திருவிழா!

லக சித்தர் அறக்கட்டளை மற்றும் வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘உலக சித்தர் மரபு திருவிழா’, கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், சென்னை, எம்.ஜி.ஆர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

சித்த மருத்துவத்தைப் பற்றி விழிப்பு உணர்வூட்டும் விதமாக மரபுக் கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்ய உணவுகள், பாரம்பர்ய விதைகள், மரபு விளையாட்டுகள், சித்த மருத்துவ முகாம், யோகப் பயிற்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய, தவத்திரு. மருதாச்சல அடிகளார், “இந்த விழாவை வெறும் சித்த மருத்துவ விழாவாக மட்டும் இல்லாமல் நல் வாழ்வியல் விழாவாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தின் மகத்துவம் உலகம் முழுக்க பரவி இருக்க வேண்டும். நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் கண்டுபிடித்து சொன்ன மருத்துவ முறை அற்புதமானது. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். இந்த வாழ்வியல் முறையை நாம் மறந்து போனதால்தான், நோய் நொடிகள் பெருகி வருகின்றன. இனியாவது விழித்துக்கொள்வோம். நமது மண்ணுக்கு சொந்தமான மரபைக் காப்போம். பிற நாட்டு மக்களும், பின்பற்றும் வகையில் நமது வாழ்வியல் முறை உள்ளது. இதை போற்றி பாதுக்காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

நல் வாழ்வியல் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிறைவு விழாவில் கலந்துகொண்ட நடிகர் நாசர், “நம்முடைய வரலாறு, நமது உணவு , நாம் உடுத்தும் உடை, நமது கலை, கலாசாரம் அனைத்தும் தனித்தனியானது என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததுதான் தமிழர் மரபு. நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையை சரியாக பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழ முடியும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஊடக ஆதரவைப் பசுமை விகடன் வழங்கியிருந்தது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்தின் சிறப்புகளை உணர்த்தும் விதமாகக் கண்காட்சியும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism