Published:Updated:

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

நீர்நிலை த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

நீர்நிலை த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!
பிரீமியம் ஸ்டோரி
நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!
நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

டந்த ஆண்டு பெய்த பெருமழை தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழையால் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. பெரும் அளவிலான தண்ணீரும் எந்த பயன்பாடும் இல்லாமல் கடலில் கலந்தது. இந்த தண்ணீரை முறையாக சேமித்திருந்தாலே, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி இருந்திருக்கும். ஆனால் மழை பெய்த சில மாதங்களிலேயே பல நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை.

இத்தகைய கொடுமைக்குக் காரணம், நீர்நிலைகள் சரிவர பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிக்கப்பட்டதும்தான் என்பதையே கடந்த பெருமழை உணர்த்திக் காட்டியுள்ளது. இத்தகைய சூழலில் பெருவெள்ள பாதிப்புக்கு பிறகு விகடன் குழுமத்தின் அறத்திட்டப்பணிகளை மேற்கொண்டிருக்கும் வாசன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் ‘நிலம்... நீர்... நீதி!’ எனும் திட்டம் உருவானது. இதற்காக விகடன் குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட, வாசகர்களும் இந்த நல்ல திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஆர்வத்தோடு நிதியை அள்ளித் தர, மொத்த நிதி இரண்டேகால் கோடியைத் தாண்டியது.

ஆலோசனைக்குழுவின் ஆய்வு!

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, நீரியல் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. சென்னை, அடையாறு ஆற்றின் வெள்ளப் பெருக்குக்குக் காரணமாக அமைந்த வண்டலூர் தொடங்கி, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை இந்த ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர். பெரும்பாலான நீர்நிலைகள் துளியும் பராமரிப்பின்றி கிடக்க, ‘பெருமழைபெய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் பல ஏரிகளில் தண்ணீர் இல்லை. தமிழகம் முழுக்கவே பெரும்பாலான நீர்நிலைகள் இப்படித்தான் பராமரிப்பின்றி கிடக்கின்றன’ என்று வேதனையை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, சென்னை அருகேயுள்ள நீர்நிலைகளில் சிலவற்றை, நிலம்... நீர்... நீதி! திட்டத்தின் மூலமாக சீரமைத்துக் காட்டலாம். இதை ஒரு முன்மாதிரி திட்டமாக நாம் செயல்படுத்தலாம். இதேபோல தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை அரசாங்கமும் பிற அமைப்புகளும் முன்வந்து சீரமைக்கும்போது, அடுத்தடுத்த பருவமழைக் காலங்களில் வெள்ள ஆபத்தும் இருக்காது. விவசாயத்துக்கான பாசனநீர் மற்றும் குடிநீர் பிரச்னையும் பெரும் அளவுக்கு தீரும் என்று முடிவெடுக்கப்பட்டது.

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரைகள் உயர்ந்த கரசங்கால் குட்டை!

இதன்படி சென்னை அடுத்த வண்டலூர்-ஒரகடம் பகுதியில் சில குளங்கள் மற்றும் ஏரிகளின் சீரமைப்பு பணிகளைக் கையில் எடுத்துள்ளோம். ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புகளும் இதில் கைகோத்துள்ளன. இந்த அமைப்புகளில் ஒன்றான இ.எஃப்.ஐ அமைப்பின் மேற்பார்வையில் மண்ணிவாக்கம் அருகேயுள்ள கரசங்கால் கிராமத்தில் 20 ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையில் இருந்து வந்த ‘கருமக்குட்டை’யை தூர்வாரி, கரைகளை உயர்த்தி பலப்படுத்தும் பணி முழுமையாக முடிந்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை சுமார் 3 லட்ச ரூபாய்.

அடுத்தக் கட்டமாக சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பாக்கம் ஏரி (71 ஏக்கர்), சிறுமாத்தூர் ஏரி (140 ஏக்கர்) மற்றும் அம்மன் குளம் ஆகிய நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் நீர்நிலைகள்.

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

நரியம்பாக்கம் ஏரி! 

தற்போது நரியம்பாக்கத்தில் பெரும்பான்மையான நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்ட போதிலும், சுமார் 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்து வந்த நரியம்பாக்கம் ஏரி, கடந்தாண்டு பெய்த கனமழையில் கரை உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறியது. அடுத்த மழை வந்தால் தண்ணீர் தேங்குவது கடினம் என்கிற சூழலில் தூர்வாரி சீரமைக்கும் பணி, ஜூலை 11-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அடையாறு ஆற்றின் உபநிலவடிப் பகுதியாக இருக்கும் இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்யாதவாறு, சாலை ஓரத்தில் 500 மீட்டர் நீளத்துக்கு தற்போது கரை எழுப்பப்பட்டுள்ளது. ஏரியின் கரையை பலப்படுத்தும் பணிகளில் ஒரு பகுதி முடிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலமங்கலம் ஏரியைச் (103 ஏக்கர்) சீரமைக்கும் பணியையும் கையில் எடுத்துள்ளோம். பணிகள் விரைவில் தொடங்கிவிடும்.

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

மரங்களும் உண்டு!

சீரமைக்கப்படும் ஏரிகளின் கரைகளை பாதுகாக்கும் பொருட்டும், பறவைகள், மனிதர்கள் பயன்பெறும் வகையில் நாவல், நெல்லி, வெட்டிவேர், புங்கன், வேம்பு போன்ற பாரம்பர்ய மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு கன்றுகளைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நரியம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சியும், ஒற்றை நாற்று நெல் சாகுபடி ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

‘நிலம்... நீர்... நீதி’ திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகள் குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அவ்வப்போது தங்களுடன் விகடன் குழும இதழ்கள் மூலமாகவும், இணைய தளத்தின் மூலமாகவும் பகிர்ந்து கொள்வோம்.

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

சுத்தமானது எங்க குட்டை!

தங்கள் ஊரின் குட்டை சீரமைக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த புனிதா, “இந்த இடம் முள்செடிகள், புதர்கள் மண்டி யாரும் உள்ளே போக முடியாதபடி இருந்துச்சு. குழந்தைகளை கூட இந்த குட்டை பக்கத்துல விளையாட அனுப்பமாட்டோம். அந்தளவுக்கு பாம்புகள் தொல்லையும் அதிகமாக இருந்துச்சு. ஊருக்கு முகப்புலே இருந்தும் பராமரிப்பு இல்லாமதான் வெச்சிருந்தாங்க. உங்களோட முயற்சியால இன்னைக்கு இந்த குட்டை தூர்வாரி, சுத்தப்படுத்தப்பட்டிருக்கு. ஊர்மக்கள் சார்பா இதுக்காக நன்றியை சொல்லிக்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியோடு.

கரைகள் பலமாகிடுச்சு!

நரியம்பாக்கம் ஏரியின் சீரமைப்புப் பற்றி பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அருள், “1964-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஏரி தூர்வாரப்படவே இல்ல. போன வருஷம் பெய்ஞ்ச மழையில கரையெல்லாம் உடைஞ்சு, தண்ணி வெளியே போயிடுச்சு. அதனால ஏரியில் தண்ணி தேங்காம போயிடுச்சு. இப்போ கரைகள பலப்படுத்திட்டு வர்றதால, இனிமே இந்த பிரச்னை இருக்காது. ஏரிக்கு நடுவுல இருக்குற மதகு மூலமாக தண்ணி தானாகவே வெளியேறிட்டு இருந்துச்சு. இதனால நிலத்துல தண்ணி தேங்கி வேலைகள செய்ய முடியாம இருந்தோம். மதகை சுத்தி தண்ணி வெளியேறாம சரிபண்ணி கொடுத்ததுக்கு பிறகு, இப்போ விவசாய நிலங்கள்ல வேலைகள தொடங்கியிருக்கோம்” என்று நன்றிப்பெருக்கோடு குறிப்பிட்டார்.

மக்களின் கைகளில் பாதுகாப்பு!

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

ஏரிகளைத் தூர்வாரி சீரமைப்பது ஒரு பக்கமென்றால், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது மிகமிக முக்கியம். இந்தப் பணியை சம்பந்தபட்ட பகுதி மக்கள்தான் முழுமையாகச் செய்ய முடியும். இதுபற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் நரியம்பாக்கம் கிராம மக்களிடையே கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கிராமத்திலிருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இதுபற்றிய விழிப்பு உணர்வு ஊட்டப்பட்டிருக்கிறது. ஏரியின் எதிர்கால பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தன்னார்வலர்களாக கிராம மக்களே மேற்கொள்ளும் வகையில் குழுக்களை ஏற்படுத்தும் வேலையும் நடக்கிறது.

ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதம்!

நிலம்... நீர்... நீதி! - கரை உயர... நீர் உயரும்!

நிலம்... நீர்... நீதி... மற்றும் தஞ்சை மாவட்ட தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள குளம், குட்டை, ஊருணி, தாங்கல், ஏரி, கண்மாய் ஆகிய நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அரசுக்கு அனுப்ப வேண்டிய விண்ணப்ப படிவத்தை ஏற்கெனவே பசுமை விகடனில் வெளியிட்டுள்ளோம். நெய்வேலி புத்தகக் காட்சி, கோவை கொடீசியா வேளாண் கண்காட்சி, அரியலூர் புத்தகக் காட்சி, விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம் என்று பல இடங்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடம் நேரிடையாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்ட தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் இயக்கம் தொடர்ந்து இந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பகுதி வட்டாட்சியருக்கு பொதுமக்களே வழங்க வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய:
https://www.vikatan.com/other/nilam-neer-neethi/

ஏரி சவாரி போலாமே!

ஏரிகள் பற்றி அனைத்து பொதுமக்களுக்குமே பொறுப்பு இருக்கவேண்டும் என்பதால், ‘ஏரி சவாரி’ என்கிற பெயரில் பொதுமக்களை நேரடியாக அழைத்துச் சென்று ஏரிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு எடுத்துரைப்பதோடு, ஏரிகளை சுத்தம் செய்யும் பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்தி வருகிறோம். வண்டலூர்-ஒரகடம் சாலையில் உள்ள வைப்பூர், வஞ்சுவாஞ்சேரி உள்ளிட்ட ஊர்களில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசார வாகன பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism