Published:Updated:

ஒரு கிலோ தக்காளி ரூ100

ஒரு  கிலோ தக்காளி ரூ100
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிலோ தக்காளி ரூ100

ஒரு கிலோ தக்காளி ரூ100

ஒரு கிலோ தக்காளி ரூ100

ஒரு கிலோ தக்காளி ரூ100

Published:Updated:
ஒரு  கிலோ தக்காளி ரூ100
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிலோ தக்காளி ரூ100
ஒரு  கிலோ தக்காளி ரூ100

-என உச்சத்தில் விற்பனையாவதும் உண்டு. இதே தக்காளி கிலோ 1 ரூபாய்க்கும் சரிந்து சாலையில் கொட்டுவதும் நடக்கிறது.

விவசாயிகளைப் பொறுத்தவரை நிரந்தரப் பிரச்னையாக இருப்பது விளைபொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காததுதான். இதில் முக்கிய காரணமாக இருப்பது ஒரே சமயத்தில், ஒரே பயிரை அதிகமாக விளைவிப்பதுதான். ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்தப் பட்டத்துக்கு என்ன பயிர் சிறப்பாக விளையுமோ, அந்தப் பயிரை மட்டும் சாகுபடி செய்தால் விலை வீழ்ச்சியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். 

மேலும், விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காத காலங்களில், சாலையோரங்களில் வீசிச் செல்லும் அவல நிலையில்தான் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள். ஒவ்வொரு விளைபொருளையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழில்நுட்பங்கள் தெரியாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளைபொருட்கள் வீணாகின்றன. விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்தால், விவசாயிகளுக்கும் நன்மை, நகரத்தில் உள்ள நுகர்வோர்களுக்கும் நன்மை. ஆனால், நேரடி விற்பனை செய்வது குறித்த விவரம் பல விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.

வேளாண்மைத் துறை அலுவலர்களின் முறையான ஆலோசனைகள் கிடைக்காமல், தனியார் நிறுவனங்களை நம்பி, விதை, உரம், பூச்சிக்கொல்லி எனச் சாகுபடி செலவுக்கே பெரும் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசின் மானியங்களும், திட்டங்களும் வசதி படைத்த, விவரம் தெரிந்த ஓரிரு விவசாயிகளை மட்டுமே சென்றடைகின்றன. பெரும்பாலான விவசாயிகளுக்கு எந்தச் சலுகைகயும் கிடைப்பதில்லை.

ஒரு  கிலோ தக்காளி ரூ100

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் வழியே, இந்தப் பிரச்னைகளை உங்களால் மாற்றி அமைக்க முடியுமா? அல்லது எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்காகவே விகடன் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பு ‘விகடன் ஹாக்கத்தான்’.

இந்த `விகடன் ஹாக்கத்தான்’ நிகழ்வில், மாற்றத்தை விரும்பும் யாரும் இணையலாம். கல்வி, விவசாயம், கேளிக்கை, வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தின் ஆற்றல் என்கிற தலைப்புகளில் தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ தங்களுடைய பிரச்னைகளையும், அதைத் தீர்ப்பதற்கான மாதிரியையும் உருவாக்க வேண்டும். மூன்று சிறந்த தீர்வுகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு உண்டு. நிகழ்ச்சியில் தலைசிறந்த தொழில்நுட்பப் பிரமுகர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism