Published:Updated:

மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: வீ.சிவக்குமார், கா.முரளி, ம.அரவிந்த்

மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: வீ.சிவக்குமார், கா.முரளி, ம.அரவிந்த்

Published:Updated:
மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!
மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

ண்டு முழுவதும் நமக்காக உழைத்து வருமானம் ஈட்டித்தரும் கால்நடைகளை கோடை வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாக்க வேண்டியது, நமது கடமை அல்லவா... தற்போது பருவமழைக்காலம் என்பதால் கால்நடைப் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இதுகுறித்து தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே...

“மழைக்காலம் ஆரம்பிக்கும்போதும், குளிர் மற்றும் பனிக்காலம் முடிந்து கோடை காலம்

மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பிக்கும்போதும்... கால்நடைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, நோய் கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்தச் சமயங்களில் ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் கோமாரி, துள்ளுமாரி, சப்பை, ஜன்னி மற்றும் கோழிகளுக்கு ஏற்படக்கூடிய கழிச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொண்டும் நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பெறலாம். இவை ஒருபுறமிருக்க, முன்னெச்சரிக்கைத் தடுப்பு மருந்துகளாக... அன்றாடம் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய மூலிகைகளையேக் கூடப் பயன்படுத்த முடியும்” என்ற புண்ணியமூர்த்தி, சில மருத்துவ முறைகளைச் சொன்னார். 

“மழைக்காலங்களில், 15 நாட்களுக்கு ஒரு முறை... ஒரு ஆட்டுக்கு 100 கிராம், மாட்டுக்கு 250 கிராம், கன்றுக்கு 150 கிராம் என்ற அளவில் வாய் வழியாக சோற்றுக்கற்றாழையைக் கொடுத்து வர வேண்டும். மழைக்காலம் முடியும் வரை இப்படிக் கொடுப்பதால் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். மழைக்காலம் முடிந்தாலும் கூட இதைத் தொடரலாம்.

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் தடுக்க... வாரம் ஒருமுறை அரிசிக்குருணையில் 50 கிராம் கீழாநெல்லி, 5 கிராம் சீரகம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கலாம். இது 10 கோழிகளுக்கான அளவு.

மழைக்காலங்களில் ஆடு மாடுகளின் கால் குளம்புகளில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி புண்கள் ஏற்பட்டால், ஒரு கைப்பிடி துளசி, ஒரு கைப்பிடி குப்பைமேனி, 4 பல் பூண்டு, 5 கிராம் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து... 100 மில்லி நல்லெண்ணெயில் வதக்கி, சூடு ஆறியதும் ஆடு மாடுகளின் குளம்பில் தடவ வேண்டும். உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்புகளைக் கழுவி, ஈரத்தைத் துடைத்த பிறகு, இம்மருந்தைத் தடவ வேண்டும்.

மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

மழைக்காலங்களில் ஆடு, மாடுகளுக்கு சளித்தொல்லை அதிகரிக்கும். அடிக்கடி ஜுரமும் உண்டாகும். தலா 5 கிராம் மிளகு, சீரகம், வெந்தயம், 10 கிராம் மஞ்சள், ஒரு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் முருங்கை, தலா 2 இலைகள் தூதுவளை, ஆடாதொடை, ஓமவல்லி ஆகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதோடு, 50 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து ஆடு மாடுகளின் நாக்கில் தடவினால், சளி, ஜுரம் கட்டுப்படும். தினமும் இரு வேளை வீதம் மூன்று நாட்களுக்கு இதுபோல் கொடுக்க வேண்டும்” என்ற புண்ணியமூர்த்தி , நிறைவாக “மழைக்காலங்களில் கொட்டகைப் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடு மாடுகள் கட்டும் இடங்களில் ஈரம், சகதி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கொசுக்கள் கடிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், கொசுக்களைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் அந்தி சாயும் நேரத்தில்தான் கொட்டகைக்குள் கொசுக்கள் அதிகளவில் படையெடுக்கும். அதனால், மாலை 6 மணியளவில் இரும்புச்சட்டியில் பாதியளவு மணலை நிரப்பி அதில் காய்ந்த விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்ட வேண்டும். இதில், நொச்சி, ஆடாதொடை, வேம்பு, எருக்கன் இலைகளைப் போட்டு 2 மணி நேரத்துக்கு மூட்டம் போட வேண்டும். இதனால் கொசுக்கள் தடுக்கப்படும்.

1 மடல் சோற்றுக்கற்றாழை, 10 ஓம இலைகள் ஆகியவற்றை அரைத்துக் கரைசலாக்கி மாடுகளின் மேல் தடவி விட்டால் கொசுக்கள் கடிக்காது. ஈக்களும் மாடுகளை மொய்க்காது. இதை ஆடுகளுக்குத் தடவக் கூடாது. மழைக்காலங்களில் கொட்டகையைச் சுற்றிலும் தார்ப்பாய்கள் அல்லது படுதாக்களைக் கட்டி கதகதப்பூட்ட வேண்டும்” என்றார்.

தொடர்புக்கு: டாக்டர் புண்ணியமூர்த்தி,

செல்போன்: 98424 55833

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism