Published:Updated:

பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...

பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...
பிரீமியம் ஸ்டோரி
பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...

துரை.நாகராஜன்

பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...

துரை.நாகராஜன்

Published:Updated:
பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...
பிரீமியம் ஸ்டோரி
பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...
பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...

ரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை, இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களின் போல்கார்ட் II ரவுண்ட் அப் ரெடி பிளெக்ஸ் டெக்னாலஜியை உள்ளூர் விதை நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. எங்களைக் கட்டாயப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘அரச்சலூர்’ செல்வத்திடம் பேசினோம். “மான்சான்டோவின் அட்டூழியங்களுக்கு இந்திய அரசே துணை போகிறது. இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அனுமதித்ததிலேயே அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம். பி.டி பருத்தி, விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிகவும் கொடுமையானவை. பி.டி விதைகள் அனுமதிக்கப்பட்டால், விதை மறுசுழற்சி முறை ஒழிக்கப்பட்டு... ஒவ்வொரு முறையும் விதைக்காக மான்சான்டோவிடம் விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். ஒரு கட்டத்தில், விதையின் விலையை ஏகபோகமாகத் தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும் சூழ்நிலை உருவாகும்.

தற்போது, மான்சான்டோ நிறுவனம், பருத்தி விதைகளை உருவாக்க அனுமதி கோரும் விண்ணப்பத்தைத் திரும்ப வாங்கியதில் மகிழ்ச்சிதான். ஆனால் மான்சான்டோ இந்தியாவில் இருந்து முழுவதுமாக வெளியேறினால்தான் முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும். மான்சான்டோவுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் மத்திய அரசு பறிக்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலை தற்காலிகமானதுதான். நிரந்தரமானதல்ல. மரபணு மாற்றுப்பயிர்களை விற்பனை செய்ய இந்தியாவை ஒரு வேட்டைக்காடாகப் பார்க்கிறது, மான்சான்டோ.

பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருத்தி விஷயத்தில் பின்வாங்குவதுபோல நடித்துவிட்டு பி.டி கடுகைக் கொண்டு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. பி.டி பருத்தியால் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் விஷயத்தில் எந்த விசாரணையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அந்தப் பருத்தி விதைகளைப் பற்றிய ஆய்வுகளையும் நடத்தவில்லை. ஆனால், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் மறைமுக ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதற்குப் பின்புலத்திலும் மரபணு மாற்று விதை நிறுவனம்தான் இருக்கிறது.

பி.டி கடுகு மட்டுமல்ல... எந்தவொரு மரபணு மாற்றப்பட்ட பயிரும் இந்தியாவுக்குள் வரக்கூடாது. அப்படி வந்தால், இயற்கையும் நமது பாரம்பர்யமும் முற்றிலும் அழிந்துவிடும்” என்றார்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “பி.டி பருத்தி அறிமுகத்துக்கான விண்ணப்பத்தை மான்சான்டோ திரும்ப வாங்கியிருக்கிறது, அவ்வளவுதான். ஆனால், மான்சான்டோ ஒருபோதும் இந்தியாவை விட்டுப் போகப் போவதில்லை. பிரேசில் அரசு அபராதம் விதித்தும்கூட, மான்சான்டோ நிறுவனம் பிரேசிலை விட்டு வெளியேறவில்லை. இப்போது டெல்லி பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அறிமுகம் செய்யப்போகிறது. இந்த விதைக்கான உரிமையும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பேயர் நிறுவனத்துக்குத்தான் போகப்போகிறது. மான்சான்டோ அறிவித்திருப்பது வெறும் நாடகம்தான்” என்றார்.

‘விதைகள் எப்போதும் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் இருக்கக் கூடாது’ என்பது உலகறிந்த விஷயம். ஆனால், மத்திய அரசு மட்டும் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏனோ... அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

மரபணு கடுகு...

தொலைபேசி எதிர்ப்புமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதிக்கக் கூடாதென 044-33124242 என்ற தொலைபேசி அழைப்பு மூலம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள், சூழல் ஆர்வலர்கள். இதுவரை இந்தியாவில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 8 ஆயிரத்து 500 பேர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism