Published:Updated:

விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!
விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

ந்த ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிறந்த விவசாயி’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயி பழனி. சிறு வயதிலிருந்தே நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் பழனி, விவசாயத்துக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நெல் வயலில் களை பறிப்பு வேலையைக் கவனித்துக்கொண்டிருந்த பழனியைச் சந்தித்து ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைச் சொன்னதும் நம்மிடம் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அப்பா வயலுக்குப் போறப்போ அவருக்கு உதவியா நானும் வேலைகளைச் செய்வேன். அதனால படிப்புல நாட்டமில்லாமப் போயிடுச்சு. ‘தாத்தா காலத்துல ரசாயன உரம் போடாமத்தான் விவசாயம் செஞ்சாங்க. ஆனா, என்னை ரசாயனத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வச்சுட்டாங்க’னு அப்பா அடிக்கடி சொல்வார். நான், ரசாயன உரம் இல்லாம இயற்கை விவசாயம் பண்ணணும்னு நினைச்சு ஒருமுறை 80 சென்ட்ல நெல் போட்டேன். ஆனா, ஒரு கட்டத்துல மனம் மாறி யூரியா 5 படி போட்டுட்டேன்” என்று, இயற்கை விவசாயம் பற்றி சொன்னவர் தொடர்ந்தார்.

விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மொத்தம் 15 ஏக்கர் நிலமிருக்கு. ஏரித் தண்ணியும், போர்வெல்லும்தான் எங்களுக்குப் பாசனத்துக்கான ஆதாரம். ஆரம்பத்துல நிலக்கடலை, நெல் ரெண்டையும் மாத்தி மாத்தி சாகுபடி செய்வேன். நிலக்கடலை எனக்குச் சரிப்பட்டு வராததால, இப்போ நெல் மட்டும் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஒரு போகம் மட்டும் நெல் போடுவேன். மண்ணும் களிமண்ணா இருக்குறதால நெல் நல்லா வளருது. ஆனா, இன்னமும் என்னால இயற்கை விவசாயத்துக்கு முழுசா மாற முடியலை. இயற்கை பாதி, செயற்கை பாதிதான் செய்றேன்” என்ற பழனி தனக்குக் கிடைத்த விருதுகள் குறித்துச் சொன்னார்.

‘‘2013-ம் வருஷம், கோ-51 ரக நெல்லைப் பயிர் செஞ்சேன். அதுல பூச்சிகளோட தாக்கம் குறைவா இருந்தது. 110-ம் நாள்ல அறுவடை செஞ்சப்போ ஒரு ஏக்கருக்கு 47 மூட்டை கிடைச்சது. அதை வேளாண்மைத்துறைக்கே விற்பனை செஞ்சுட்டேன். கோ-51 ரகம் எல்லாப்பருவத்துக்கும் ஏற்றது. அந்த வருஷம் கோ-51 ரகத்துல அதிக மகசூல் எடுத்ததுக்காக, அப்போ குஜராத் மாநில முதல்வரா இருந்த நரேந்திர மோடி கையால விருது வாங்கினேன்.

விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

அதுக்கடுத்து, டி.கே.எம்-13 ரக விதைநெல்லை திரூர்ல இருந்து வாங்கிட்டு வந்து, ஒரு ஏக்கர் நிலத்துல விதைச்சேன். அந்த ரகமும் செழுமையா வளர்ந்தது. காட்டுப்பாக்கம் கே.வி.கே தலைவர், திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் வாலாஜாபாத் வேளாண்மைத்துறை அதிகாரிங்க முன்னிலையி்ல அந்த ரக நெல்லை அறுவடை செஞ்சப்போ... ஒரு ஏக்கர் நிலத்துல 45 மூட்டை நெல் மகசூல் கிடைச்சது. அதனால, 2014-ம் வருஷம் நாடளுமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேல் கையால சிறந்த விவசாயினு பரிசு கிடைச்சது. அதுக்கப்பறம் அந்த ரகத்தைத்தான் தொடர்ந்து சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். இந்த ரகம், காத்து, மழையில சாயாம உறுதியா நிக்குது. 15 ஏக்கர்லயும் இப்போ இந்த ரகத்தைத்தான் சாகுபடி செய்றேன். என்கிட்ட விதைநெல் வாங்கிச் சுற்று வட்டார விவசாயிகளும், இந்த ரகத்தை விதைக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த வருஷ சுதந்திர தின விழாவில், மாவட்ட நிர்வாகம் சார்பா... காஞ்சிபுரம் மாவட்டத்துலயே சிறந்த விவசாயினு பட்டமும் பரிசும் கொடுத்திருக்காங்க” என்ற பழனி நிறைவாக,

“எந்தத் தொழிலா இருந்தாலும் அர்ப்பணிப்போட செஞ்சா வெற்றி நிச்சயம். நான் சின்ன வயசுலேயே விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து அர்ப்பணிப்போட செஞ்சுட்டு இருக்குறதாலதான் எனக்கு விருதும் பாராட்டுகளும் கிடைக்குது” என்றார்.

தொடர்புக்கு,
பழனி,
செல்போன்: 80980 53816.

கைகொடுக்கும் உற்பத்தியாளர் சங்கம்

விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!பழனி மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் இணைந்து ‘கோவிந்தவாடி குருபகவான் தானிய உற்பத்தியாளர் சங்கம்’ என்ற விவசாய அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய சங்கத்தின் தலைவர் பரசுராமன், “எங்க சங்கத்துல 50 பேர் உறுப்பினரா இருக்காங்க. விதை உற்பத்தி, விற்பனை எல்லாத்தையும் சங்கம் மூலமாவே செஞ்சுட்டு இருக்கோம். தவிர மதிப்புக் கூட்டுப் பயிற்சி கொடுக்கிறதுக்கும் ஏற்பாடுகள் செஞ்சுட்டு இருக்கோம். எங்களுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்களையும் நாங்களே வாங்கிக்கிற முயற்சிகளையும் செஞ்சுட்டு இருக்கோம்” என்றார்.

ஹெக்டேருக்கு 5,938 கிலோ

திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் அகிலா, டி.கே.எம்-13 ரக நெல் குறித்துச் சொன்ன தகவல்கள் இங்கே...

“எங்கள் மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் வகைகளில் மிக முக்கியமானது, டி.கே.எம்-13 ரகம். இந்த ரகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரத்து 938 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் வயது 125 முதல் 130 நாட்கள். இது காவிரி டெல்டா பகுதியில் தாளடி பருவத்துக்கும், மற்ற மாவட்டங்களில் சம்பா பருவத்துக்கும் ஏற்றது. இந்த நெல் வகை பி.பீ.டி-5204 என்ற ரகத்துக்கு மாற்றாகவும், நோய்த் தாக்குதலுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இலைச்சுருட்டுப்புழு, குறுத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, தூங்ரோ நோய் ஆகியவற்றின் தாக்குதலை எதிர்க்கும் வகையில் இருப்பது டி.கே.எம்-13 ரகத்தின் மற்றொரு சிறப்பு. விவசாயிகள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் நெல்லின் தேவைக்கு ஏற்ப விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு: நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர்.

தொலைபேசி: 044 2762023

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism