Published:Updated:

வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!

வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!
வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!

ந்த ஆண்டு, வடகிழக்குப் பருவமழைப் பொழிவு சிறப்பாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்... மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து, துறை சார்ந்த வல்லுநர்கள் சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மரக்கன்றுகளை நடவு செய்துள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற உதவி வனபாதுகாவலர் ஆர்.ராஜசேகரன், “நாட்டில் 33 சதவிகித அளவில்  இருந்த வனப்பரப்பு 22 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதனால், வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சமூகக் காடுகளை உருவாக்கி வருகிறோம். கிட்டத்தட்ட 45 கோடி அளவில் மரங்களைப் பெருக்கினால்தான் 33 சதவிகித இலக்கை அடைய முடியும். தற்போது மர வளர்ப்பு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில், மரம் நடுதல் அதிகரித்து வருவது ஆரோக்கியமான மாற்றம்.

மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வடகிழக்குப் பருவ மழைக்கு முன் சில பாராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டும். நடவு செய்துள்ள மரங்களைச் சுற்றி 1 மீட்டர் விட்டத்தில் 15 சென்டி மீட்டர் ஆழத்தில் வட்டப்பாத்தி போல அமைக்க வேண்டும். ஒவ்வொரு மரத்தின் அடிப்பகுதியிலும் 10 கிலோ அளவு இயற்கை இடுபொருளை இட வேண்டும். ஆட்டு எரு, மண்புழு உரம், தொழுஉரம் போன்றவற்றைத் தனித்தனியாகவோ அல்லது சரிவிகிதத்தில் கலந்தோ கொடுக்கலாம். மரங்களின் வயது அதிகமாக இருப்பின் இடுபொருட்களின் அளவையும் அதிகரித்துக்கொள்ளலாம். கோழி எரு எனில் நன்கு காய்ந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். பச்சையாகக் கொடுத்தால் அதன் கார, அமிலத் தன்மை பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல, மழைக்காலத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, மரங்களில் உள்ள பக்கக் கிளைகளை கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்துச் செய்யும்போது, மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயங்கள் ஏற்பட்டால் நோய்த்தாக்குதல் ஏற்படும். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள நிலத்தில் எக்காரணம் கொண்டும் தண்ணீர் தேங்கி நிற்க விடக்கூடாது. மழைத்தண்ணீர் வடிந்து போகுமாறு வடிகால் வசதி அமைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வடியும் தண்ணீரை... பண்ணைக்குட்டை அமைத்து அதில் சேமித்து வைத்தால் வறட்சிக் காலங்களில் உதவும்.

வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மரக்கன்றுகள் நடவு செய்த 3 ஆண்டுகள் வரை ஊடுபயிராக உளுந்து, கொள்ளு, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றைச் சாகுபடி செய்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். இறவைப்பாசன வசதி உள்ளவர்கள் காய்கறிகளைக்கூட சாகுபடி செய்யலாம்” என்றார்.

80 ஏக்கர் நிலத்தில் பலவகை மரங்களை வளர்த்து வரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ‘கொங்கு’ குழந்தைசாமி, “மரம் சாகுபடி செஞ்சா தண்ணீர் தேவையில்லைனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அது ரொம்பத் தவறான கருத்து. மலைக்காடுகள்ல நிலத்துல ஈரப்பதம் இருக்குறதால தண்ணீர் கொடுக்க வேண்டியதில்லை. ஆனா, சமவெளிப்பகுதிகள்ல எந்த மரமா இருந்தாலும் கண்டிப்பா நடவு செஞ்சு 3 வருஷம் வரைக்கும் வாரம் ஒரு முறை பாசனம் செஞ்சே ஆகணும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். தண்ணீர் வசதி குறைவா இருந்தா சொட்டுநீர் பாசனம் அமைச்சுக்கலாம். ஒவ்வொரு பருவமழைக்கு முன்னாடியும் உரம் வைக்க வேண்டியது அவசியம். களைகள் அதிகமா இருந்தால் கொஞ்சம் செம்மறி ஆடுகளை வாங்கிவிட்டா வருமானமும் கிடைச்சுடும். நிலத்துல களைகளும் இருக்காது. அதோட கழிவுகள் உரமாகிடும். கண்டிப்பா களைக்கொல்லி தெளிக்கவே கூடாது. 

கரிசல் மண் நிலம்னா... புளி, புங்கன், நாவல், நெல்லி, சவுக்கு, வேம்பு, வாகை மாதிரியான மரங்களை நடவு செய்யலாம்.  வண்டல் மண் நிலம்னா... தேக்கு, மூங்கில், வேம்பு, கருவேலம், சவுண்டல், புளி மாதிரியான மரங்களை நடவு செய்யலாம். களிமண் நிலம்னா... வாகை, புளி, புங்கன், சூபாபுல், நெல்லி, கருவேலம், மருது மாதிரியான மரங்களை நடவு செய்யலாம். களர்மண் நிலம்னா... குடைவேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை மாதிரியான மரங்களை நடவு செய்யலாம். உவர்மண் நிலம்னா... சவுக்கு, இலவு, புளி, வேம்பு மாதிரியான மரங்களை நடவு செய்யலாம்.

அமிலத்தன்மை அதிகம் கொண்ட நிலத்துல... குமிழ், சில்வர் ஓக் மாதிரியான மரங்களை நடவு செய்யலாம். காரத்தன்மை அதிகம் கொண்ட சதுப்பு நிலங்கள்ல... பெருமருது, நீர்மருது, நாவல், இலுப்பை, புங்கன் மாதிரியான மரங்களை நடவு செய்யலாம். சுண்ணாம்பு மண் உள்ள நிலங்கள்ல... வேம்பு, புங்கன், புளி, வெள்வேல் மாதிரியான மரங்களை நடவு செய்யலாம்” என்றார்.

தொடர்புக்கு,
செல்போன்:
ராஜசேகரன்:94424 05981
குழந்தைசாமி:98427 43535

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism