Published:Updated:

மரபணு மாற்றுக் கடுகு... பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

மரபணு மாற்றுக் கடுகு...  பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
மரபணு மாற்றுக் கடுகு... பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

நிகரன்

மரபணு மாற்றுக் கடுகு... பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

நிகரன்

Published:Updated:
மரபணு மாற்றுக் கடுகு...  பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
மரபணு மாற்றுக் கடுகு... பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!
மரபணு மாற்றுக் கடுகு...  பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

டெல்லிப் பல்கலைக்கழகம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து, அதற்கு ‘டி.எம்.எச் - 11’ எனப் பெயர் சூட்டியுள்ளது. இந்தக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அனுமதியளிக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு முறையும் மரபணு மாற்று விதைகள் கொண்டு வரும்போது அரசியல் ரீதியாகவும் விவசாயிகள் மத்தியிலும் சர்ச்சை எழும். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மிகவும் ஏற்றது. விஞ்ஞானிகள் ‘நாட்டின் சமையல் எண்ணெய் தேவை உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருப்பதால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மரபணு மாற்று தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாகச் சொல்கிறார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்... செப்டம்பர் 5-ம் தேதியன்று, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு குறித்த அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இ்ந்த இணையத் தளத்தில் அக்டோபர் 5-ம் தேதி வரை, பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, பொதுமக்களின் கருத்துகளைத் தொடர்ந்து கண்காணித்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி அளிப்பது குறித்துப் பரிசீலனை செய்யும்.

ஏற்கனவே, உற்பத்தி அதிகரிப்புக்காக, கொண்டு வரப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகத்தால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோயிருக்கிறார்கள். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டக் கடுகுக்கான அனுமதி, விவசாயிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மரபணு கடுகு... கருத்து சொல்வது எப்படி?

மரபணு மாற்றுக் கடுகு குறித்த தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க www.moef.gov.in/sites/default/files/Proforma%20for%20Comments.pdf என்ற இணைய இணைப்புக்குச் செல்ல வேண்டும். அதில் உள்ள படிவத்தை, பதிவிறக்கம் செய்து, கருத்துகளைக் குறிப்பிட்டு mustard.mef@gov.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இமெயிலில் உள்ள subject என்ற இடத்தில் “Comments on RARM document on GE Mustard” என்றும் குறிப்பிடவும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இன்னும் 50 பயிர்கள் ஊடுருவும்..!’’

‘‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகம், இயல்பிலேயே பல சிக்கல்கள், பாதகங்களைத் தனக்குள் கொண்டுள்ள போதிலும் அவை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை அனுமதித்தால், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் சவாலாக இருக்கும். இதே வகையான கடுகை ஏற்கெனவே ‘பேயர்’ (Bayer) என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்க அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.

அனுமதி மறுக்கப்பட்ட பிறகு பன்னாட்டு நிறுவனங்கள், டெல்லிப் பல்கலைக்கழகத்தை முன்னிறுத்திக் காய் நகர்த்தி வருகின்றன. இப்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியைக் காட்டியே, இன்னும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ வைப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். இதற்கு ஆதாரமும் உள்ளது’’ என்கிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் ரா.செல்வம்.

இது தொடர்பான முழுமையான கட்டுரையை வாசிக்க https://www.vikatan.com/news/india/68113-why-should-we-oppose-gm-mustard.art என்ற விகடன் இணையதளத்தில் உள்ள இணைப்பைப் பார்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism