Published:Updated:

கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!

கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஸ்குமார்

கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஸ்குமார்

Published:Updated:
கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!
கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரைத் தருவதற்குத் தொடர்ந்து மறுத்து வருகிறது, கர்நாடகா. இந்த ஆண்டும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனதால், ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடியாத நெருக்கடியான நிலை உருவானது. இதனால் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

அடுத்து, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தனர், விவசாயிகள். கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பொழிந்து கிருஷ்ணராஜசாகர், கபிணி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளில் தண்ணீர் நிரம்பியும் கூடத் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது, கர்நாடகா. நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி... இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 50 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், தண்ணீர் திறக்கப்படாததால், தற்போது மேட்டூர் அணையில் 34 டி.எம்.சி அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. அதனால், டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில், சம்பா சாகுபடி பொய்த்துப்போகும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 

இந்நிலையில், கர்நாடக அரசைக் கண்டித்துக் கடந்த ஆகஸ்டு 19-ம் தேதி கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்களின் சார்பில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆகஸ்டு 30-ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் விவசாயிகளோடு தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், த.மா.கா, பா.ஜ.க, எஸ்.டி.பி.ஐ போன்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைகோத்தனர். வணிகர் சங்கங்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்தன.

‘சம்பா சாகுபடிக்கு கர்நாடகா உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மத்திய அரசு, கர்நாடகாவுக்கு

கானல் நீரான காவிரி நீர்... தவிப்பில் டெல்டா விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து உத்தரவிட வேண்டும். தமிழக அரசு காவிரி நீர் பெறுவதற்கான முயற்சிகளைப் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு உருவாக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகள் இப்போராட்டங்களில் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில் நடப்பு பாசன ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு கர்நாடகா தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டிய 50.052 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்திருந்த இடைக்கால மனு செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு கர்நாடக அரசு கட்டுப்பட வேண்டும். தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். 3 நாட்களுக்குள் காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு அணுக வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு இரு மாநில நிலைமைகளை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் காவிரி கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக மாநிலம் மண்டியாவில் செப்டம்பர் 5-ம் தேதி விவசாயச் சங்கங்களின் ஏற்பாட்டில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், இரு மாநில எல்லைகளில் பதற்றம் நிலவியது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், “இத்தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. பஞ்சாயத்துச் செய்வது போல் உள்ளது. ‘பாவம், போனா போகட்டும் 10 நாட்களுக்கு மட்டுமாவது தண்ணீர் திறந்து விடுங்கள்’ எனச் சொல்வது போல் இத்தீர்ப்பு உள்ளது. நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் பற்றாக்குறைக் காலப் பகிர்வுத் திட்டம் சொல்லப்பட்டுள்ளது. அது சட்டப்படியானது. அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். தமிழக அரசாவது இதை வலியுறுத்தியிருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள அணைகள், ஏரிகளின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்து, பற்றாகுறைக் காலப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் கேட்க தமிழகம் தவறிவிட்டது” என்றார்.

வலுக்கும் போராட்டங்கள்!

காவிரிநீர் பெற்றுத் தராத மத்திய அரசையும், ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து, காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் போராட்டங்கள் நடைபெற உள்ளன. வரும் செப்டம்பர் 23-ம் தேதி, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரம் இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism