Published:Updated:

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’
‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

*பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்...

*நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்...

*வெற்றி விவசாயிகளின் அனுபவ உரைகள்..

டந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. அதன் அமோக வெற்றியைத்தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தற்போது மூன்றாவது முறையாகக் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை... மஞ்சள் மாநகர் ஈரோட்டில், வ.உ.சி திடலில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. நாள்தோறும் கூட்டம் கூட்டமாக விவசாயிகளும், பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

விதைகள், நாற்றுகள், பண்ணைக்கருவிகள், விசைத்தெளிப்பான்கள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், இடுபொருட்கள், மரச்செக்கு எண்ணெய், பயோ உரங்கள், மதிப்புக்கூட்டிய பொருட்கள், புத்தகங்கள், சிறுதானிய உணவுகள், சூரியசக்தி மின்சாரம், உழவுக்கருவிகள், கொட்டில் ஆடு வளர்ப்பு குறித்த அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய பயிர் பதனீட்டு ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு  மெர்க்கண்டைல் வங்கி, தமிழ்நாடு அரசு கனிம நிறுவனம் போன்ற அரசுத்துறைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சர்வதேசத் தரத்தில் குளுகுளு வசதியுடன் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற கண்காட்சித் துவக்கவிழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜன், விவசாயிகள் சங்கத்தலைவர் காசியண்ண கவுண்டர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். காலை 10 மணி அளவில் சிறப்பு அழைப்பாளர்கள் மூவரும் ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் துவக்கி வைத்தனர். தொடர்ந்து அனைத்து அரங்குகளையும் பார்வையிட்டுவிட்டு... கருத்தரங்கு மேடையில் குத்துவிளக்கு ஏற்றினர்.

ஆசிரியர் குழுவினரின் வரவேற்பு உரை, விளம்பரத் துறையின் நினைவுப்பரிசுகள் ஆகிய வழக்கமான நிகழ்வுகளை அடுத்து, கருத்தரங்கத் துவக்க விழா நடைபெற்றது.   துவக்க விழாவில்,  விவசாய  சங்கத்தின் தலைவர் காசியண்ண கவுண்டர் பேசும்போது... ‘‘பசுமை விகடன் நடத்தும் இந்தக் கண்காட்சியும் கருத்தரங்கும் சிறப்பாக நடைபெற வாழ்த்துறேன். பசுமை விகடனுக்கு என்னோட ஆதரவு எப்போதும் உண்டு. எல்லாரும் நல்லா இருக்கணும்’’ என்று ரத்தினச் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.

 அடுத்து, இயல்பான நகைச்சுவை இழையோடும் பேச்சால் பங்கேற்பாளர்களை ஈர்த்தார், பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

அவர் பேசியதிலிருந்து... “எத்தனையோ பட்டிமன்றக் கூட்டங்கள்ல நான் பேசியிருக்கேன். வழக்கம் போல அது கடந்து போயிடும். ஆனா, இந்த விவசாயக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுவது எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. அடிப்படையில் நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்ங்கிறதுதான் மகிழ்ச்சிக்குக் காரணம். நான் பொறந்த ஊரு முப்போகம் நெல் வெளையுற சோழவந்தான். நானும் எல்லா விவசாயக் குடும்பத்துப் பசங்களப்போலதான். வயலில் வேலை பார்த்திருக்கேன். பசுமாடுகளைப் பராமரிச்சிருக்கேன். குடும்பத்தில் ஒரு நபராத்தான் விவசாயிங்க மாடுகள வளர்க்கிறாங்க. பசுமாடு மூலம் கிடைக்கிற வருமானம் குடும்பப் பெண்களுக்கு ஒரு சம்பாத்யம். பால், தயிர், மோர், வறட்டினு ஊருக்குள்ள வித்துச் சிலுவாடு சேர்த்து வைப்பாங்க. அவசரச் செலவு ஏற்படும் போது அந்தக் காசுதான் குடும்பத்துக்கு உதவும்.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

பசுமாடு நமக்குப் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்னு அஞ்சு நல்ல பொருட்களக் கொடுக்குது. ஆனா, வைக்கோல், தவிடு, கழுநீர், வடிகஞ்சி, எச்சிலைனு அஞ்சு கழிவுப்பொருட்களைத்தான் அதுக்குத் தீனியாக் கொடுக்கிறோம். இதைத்தான் ‘அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’னு பழமொழியா சொல்லுவாங்க. தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அதுபோலத்தான் பசும்பாலும் முக்கியமானது.

அந்தக்காலத்து விவசாயிங்க மழை வரும் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிஞ்சு வெச்சிருந்தாங்க. அந்தப் பூமி சாஸ்திரம் அவங்களுக்குத் தெரிஞ்சு இருந்துச்சு. ஆற்றுக்குள் இறங்கி மணலில் நடக்கும்போது அதில் கால் பொதிந்தால் அதை வைத்து ஆற்றில் தண்ணீர் வந்திட்டிருக்கு என்பதைத் தெரிஞ்சு வெச்சிருந்தாங்க. இதைத்தான் ‘ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி’ என்று அந்தக்காலப் புலவர்கள் ஆருடம் பாடி வெச்சாங்க.

மழை வரும் அறிகுறி நண்டுக்குத் தெரியும்னு சொல்வாங்க. அது தன்னோட வளையைச் சேற்றைப் பயன்படுத்தி உசத்திக் கட்டுமாம். அதே போல ஆடு, மாடு, தவளை, பறவைகள்னு சில ஜீவராசிகளுக்கும் மழை வரப்போவது முன்கூட்டியே தெரிஞ்சிருப்பதால, அவை முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்கிறதாம். ஆனால், மனுஷன் மட்டும்தான் சுனாமி வருவதை ‘செல்ஃபி’ எடுத்து வெள்ளத்தில் சிக்கிக்கிட்டான்.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

நம்ம முன்னோருங்க, பிறை நிலாப் பார்த்து மழை ஜோசியம் சொல்லும் யுக்தி தெரிஞ்சவங்க. வளர் பிறையின் நுனி வலது பக்கமா நீண்டிருந்தா அந்த வருஷம் பெருமழை வரும்னு கண்டு வெச்சிருந்தாங்க. அதேபோலக் கோயில் திருவிழாக்கள்ல பெண்கள் முளைப்பாரி எடுப்பாங்க. ஒரு பாத்திரத்தில் மண் கொட்டி அதுல தானியங்க, பயறுனு வெதைச்சு நிழலில் வைப்பாங்க. குறிப்பிட்ட நாள்ல அந்த முளைப்பாரி விதை முளைக்கும் திறனை வெச்சு அந்த விதைகளோட தன்மையைத் தெரிஞ்சு அது நல்ல விதையானு கண்டு பிடிச்சு நெலத்தில் விதைப்பாங்க. அப்படியாக ஆன்மிகத்திலும் ஒரு தொழில்நுட்பத்தை நம் முன்னோருங்க கண்டு பிடிச்சு வெச்சிருக்காங்க.

காக்கா கூடு கட்டுவதை வெச்சுக்கூட மழை அளவைக் கணக்கிடமுடியும்னு நம்ம விவசாயிங்க கண்டுபிடிச்சு வைச்சிருக்காங்க. வேப்பமரத்தோட நடுக்கிளையில் அது கூடு கட்டினா அந்த வருஷம் பெருமழை கிடைக்குமாம், வெளிக்கிளையில் நம்ம கண்ணுல படும்படி கூடு கட்டினா குறைஞ்ச மழைதான் பெய்யுமாம். இப்படி காக்கா மட்டுமல்ல தூக்கணாங்குருவிகூட ரெண்டு அறைகளைக் கொண்ட கூடுகளைக் கட்டி பெய்யுற மழைத் தண்ணீர் ஒரு சொட்டுக்கூட உள்ளே நுழையாதபடி தன்னோட கூட்டைக் கட்டுது. அதுமட்டுமா ஈரக் களிமண்ணில் மின்மினிப் பூச்சிகளை ஒட்டி எடுத்து வந்து தன்னோட கூட்டுக்கு வெளிச்சம் கொடுக்குது. அதேபோலத்தான் கரையான், தேனீ, சிலந்தினு பல ஜீவன்கள் தனக்கான உணவையும் இருப்பிடத்தையும் ஆச்சர்யப்படும்படியான தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தி வருவது, இயற்கைக் கொடுத்த வரம்னு சொல்லலாம். மனுஷங்களான நாம் அதைச் சிதைக்காமல் இருந்தால் போதும். உயிர்ச்சங்கிலி வலுவாக இருந்து உலகைக் காப்பாத்தும்.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

நான் சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கூடம் போகும் போதும் திரும்பி வீடு வரும்போதும் ஊர்சுற்றித்தான் வருவேன். பறவைகள், ஆடு மாடுகள், செடிகள், மரங்கள், பூச்சிகள், வண்டுகள்னு பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அந்தக்காலக் குழந்தைகளுக்குக் கிடைச்சது. பள்ளி விடுமுறை நாட்களில் விவசாய வேலை செஞ்சோம். அது மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு. அந்தக்காலப் பெற்றோர்களும் அதுக்கு ஊக்கம் கொடுத்தாங்க. ஆனா, இன்னிக்கு இருக்கிற பெற்றோருங்க குழந்தைகளைப் பார்த்து, ‘நீ கலெக்டர் ஆகணும், டாக்டர் ஆகணும், வக்கீல் ஆகணும்’னுதான் சொல்றாங்களே தவிர, ‘விவசாயி ஆகணும்’னு சொல்றதில்லை. மொழி அழிஞ்சால் அந்த இனம் அழிஞ்சு போய்விடும்னு அமெரிக்கப் பெண்மணி ஒருத்தர் சொன்னாரு. அது போலத்தான் தாய்த் தொழிலான விவசாயம் அழிஞ்சு போனால் உலகமே அழிஞ்சு போகும். அதைக் காப்பாற்றும் விதமாக ‘பசுமை விகடன்’ செயல்பட்டு வருது. அதில் ஒரு அங்கம்தான் இந்தக் கண்காட்சியும் கருத்தரங்கும். பசுமை விகடனின் முதல் வாசகன் என்ற விதத்தில் இதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. விவசாயத்தையும், பழைமையான விஷயங்களையும் நமக்குத் திருப்பிக் கற்றுக் கொடுக்கும் பணிகளைப் பசுமை விகடன் செஞ்சிட்டு வருது. அதனால, பசுமை விகடனை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அதே   போன்று விவசாயத்துக்கென்று ஒரு வேளாண் தொலைக்காட்சியையும் விகடன் குழுமத்தார் தொடங்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார் ஞானசம்பந்தன்.

தொடர்ந்து கருத்தரங்கு நடைபெற்றது. முதல் வல்லுநராகப் பேசியவர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன்.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

“விவசாயம், கால்நடைகளுக்கு மட்டுமல்ல... மனிதர்களின் சில நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலும் பஞ்சகவ்யா கரைசலுக்கு உண்டு. குப்பை மண், இலை தழை, ஆடு மாடுகளின் எருனு தன்னோட கிராமத்தில் கிடைச்ச இயற்கை உரங்களைப் பயன்படுத்தித்தான் நம்ம முன்னோர் விவசாயம் செஞ்சாங்க. மண்ணும் மனுஷ உடலும் அப்ப கெட்டுப்போகாமல் இருந்துச்சு. ஆனா, பசுமைப்புரட்சி வந்த பிறகு எல்லாமே தலைகீழ் ஆயிடுச்சு. அதிக வெளைச்சல் எடுக்க இதுதான் வழினு அரசாங்கம் கொடுத்த யோசனைப்படி, மூட்டை மூட்டையா உரத்தையும்,  லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லி விஷத்தையும், களைக்கொல்லியையும் கொட்டுனதுல மண்ணும் நஞ்சாகிப்போச்சு. அதுல வெளைஞ்சதைத் தின்ன மனுஷனும் நோயாளியாகிப்போனான். போதாக்குறைக்கு ‘ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அதிக வெளைச்சல் எடுக்கிற கில்லாடி விவசாயிங்க பஞ்சாப்பில் இருக்காங்க, நீங்களும் அங்கு போய்ப் பார்த்துட்டு வாங்க’னு அரசாங்கமே தமிழ்நாட்டு விவசாயிகள் பலரை பஞ்சாப் அழைச்சுப் போய்க் காட்டுச்சு. அவ்வளவு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துனதாலதான், இப்ப, பஞ்சாப்ல ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’னு ரயில் விடுற சூழ்நிலை வந்திடுச்சு.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

ஆனா, நம்மாழ்வார், பாலேக்கர் போன்றவங்களும் பசுமை விகடனும் கொடுத்த விழிப்பு உணர்வு இப்ப நெறைய விவசாயிங்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வெச்சிருக்கு. இயற்கை விவசாயம், வேகமா பரவி வருதுங்கிறது, சந்தோஷமான விஷயம். இயற்கை விவசாயத்துல முக்கியப் பங்கு வகிப்பது பஞ்சகவ்யா. சிவன்கோயில்கள்ல பிரசாதமா கொடுக்கப்படுற இதை விவசாயப் பயிர்களுக்குக் கொடுக்கும் விதமா மேம்படுத்திப் பரிசோதனை செஞ்சோம். அது வெற்றி அடைஞ்சு ஒரு கட்டத்துல வேளாண்மைப் பல்கலைக்கழகமே பஞ்சகவ்யாவை ஏத்துக்கிடுச்சு.

மங்களகரமான மஞ்சள் பயிர்லதான் அதை முதல்ல சோதனை செஞ்சு பார்த்தோம். அது வெற்றி அடைஞ்சதும் மத்த பயிர்களுக்கும் கொடுத்துப் பார்த்து 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாங்கிற அளவீட்டை முடிவு செஞ்சோம். இப்ப பாசனத்துலயும் சரி, தெளிப்புக்கும் சரி, இந்த 3 சதவிகிதம் என்கிற அளவுதான் உறுதிப்படுத்தப்பட்ட ஒண்ணு.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

கொம்பு, திமில் உள்ள மாடுகளுக்குத்தான் ஆற்றல் அதிகம். அதுல கிடைக்கிற சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகிய அஞ்சு பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுற பஞ்சகவ்யாவுக்குத் திறன் அதிகம். நுண்ணியிரிகளின் பெருக்கத்துக்கு உகந்ததும் கூட. பஞ்சகவ்யா கொடுக்கப்பட்ட செடிகளின் பக்கக் கிளைகள் அதிகரிப்பதால் அதன் பூக்கும் திறன் காய்ப்புத்திறன் கூடி மகசூல் அதிகரிக்கும். இலைகள் பெரிதாகவும் அகலமாகவும் வளர்றதால, ஒளிச்சேர்க்கை வேகமாக நடக்கும். ஆணிவேர் நீளமாக வளர்ந்து மண்ணில் அதிக ஆழம் வரை ஊடுருவும். அதனால, ஆழத்தில் உள்ள ஈரத்தையும் உறிஞ்சி செடிகளுக்குக் கொடுக்கிறதால, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும்.

‘‘பசுமை விகடனை பாடத்தில் சேர்க்க வேண்டும்!’’

பஞ்சகவ்யா கொடுக்கப்பட்ட கரும்பில் பிழிதிறன் அதிகமாக இருக்கும். பழங்கள் அதன் இயற்கையான சுவை மாறாமல் விளங்கும். பூக்கள் மிகுந்த வாசனையுடன், அதிக நாள் வாடாமல் இருக்கும்.

பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பலன் பெற்ற விவசாயிகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே வருது” என்றார் நடராஜன்.

கருத்தரங்கில் பேசிய பல்வேறு வல்லுநர்களின் உரை வீச்சுக்கள் அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism