Published:Updated:

அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்... அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்...  அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!
பிரீமியம் ஸ்டோரி
அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்... அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

கு. ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், க.சதீஸ்குமார்

அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்... அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

கு. ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், க.சதீஸ்குமார்

Published:Updated:
அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்...  அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!
பிரீமியம் ஸ்டோரி
அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்... அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!
அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்...  அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

‘கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதிலிருந்து... கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அம்மாநிலத்தில், செப்டம்பர் 9-ம் தேதி, மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றாத கர்நாடக அரசு, அத்தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு போட்டது. செப்டம்பர் 12-ம் தேதி அதனை விசாரித்த நீதிமன்றம் ‘தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 20-ம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.  அதைத் தொடர்ந்துதான் அங்கு தமிழர்கள் மீதான வன்முறை அதிகமாகியது. ஊடகங்களில் அதுகுறித்துத் தெரிந்துகொண்ட தமிழக மக்கள் மிகுந்த  வேதனையுற்றனர். 

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்; மத்திய அரசு, சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும் என்றும் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆகியவை ‘காவிரிப் போராட்டக்குழு’ என்ற பெயரில் இணைந்தன. இக்குழு, செப்டம்பர் 16-ம் தேதி முழு அடைப்புப்  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அரசியல் கட்சிகள் தனித்தனியாக வெவ்வேறு நாளில் சம்பிரதாயப் போராட்டங்கள் நடத்துவதுதான் கடந்த கால வழக்கம்.  ஆனால், செப்டம்பர் 16-ம் தேதி இந்நிலை தலைகீழாக மாறி, ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களத்தில் குதித்தது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக்குழு, செப்டம்பர் 19-ம் தேதி டில்லியில் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில், ‘கர்நாடகா, தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர்  திறந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டது. ஆனால் அதற்கு உடன்படாத தமிழக மற்றும் கர்நாடக தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர்.

அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்...  அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்துப் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “காவிரி மேற்பார்வைக்குழுவால் இதுவரை தமிழ்நாட்டுக்கு உருப்படியான எந்த ஒரு காரியமும் நடந்ததில்லை. மழையின் அளவு, அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு, நடுவர் மன்றம் இறுதித்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ள பற்றாக்குறை கால பகிர்வுத் திட்டம் என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கர்நாடகாவுக்கு சாதகமாக, காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காவிரிக்காக நடக்கும் போராட்டங்களை ஒடுக்குவதில்தான் அ.தி.மு.க அரசு முனைப்பாக இருக்கிறது. காவல்துறையினரை ஏவி விவசாயிகளை அச்சுறுத்துகிறது. வேலை நிறுத்தத்தின் போது  வீம்பாக, ‘பேருந்துகளை இயக்கியே காட்டுவேன். பள்ளி, கல்லூரிகளைச் செயல்பட வைப்பேன்’ எனத் தமிழக அரசு முரண்டு பிடிக்கிறது. இது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம்” என்றார்.

காவிரி நீர் குறித்த வழக்கில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில்... ‘4  வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு அமைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கும், ‘27-ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்று கர்நாடக மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்...  அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!

தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் ‘சுவாமிமலை’ விமல்நாதன், “கர்நாடகம் 2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்கவில்லை. இந்தாண்டு குறுவை, சம்பா இரண்டுக்குமே போதுமான தண்ணீர் வழங்கவில்லை. ஆனால் தமிழக அரசு 2013-ம் ஆண்டில் குறுவைக்குத் தண்ணீர் வழங்கவில்லை என்று 2,500 கோடி இழப்பீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் 5 குறுவை, 1 சம்பாவுக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை. இதற்கு இழப்பீடாக 22 ஆயிரம் கோடியைப் பெற்றுத் தரவேண்டும். இல்லையேல், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, தேசிய பேரிடர் நிதியிலிருந்து இழப்பீட்டைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” என்றார்.

குஜராத் மாநிலம், நர்மதை நதிக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டதால்தான் குஜராத்-மத்தியபிரதேசம் இடையே நதிநீர்ப் பங்கீட்டில் சுமுகமான சூழல் நிலவுகிறது. கிருஷ்ணா மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதால்தான் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே நதிநீர்ப் பங்கீடு சுமுகமாக நடக்கிறது. பக்ராநங்கல் அணை மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டதால்தான் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களிடையே நியாயமான நதிநீர்ப் பங்கீடு நடைபெறுகிறது. அந்த வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்பட்டால், காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

‘‘கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்’’

அவசரம் காவிரி மேலாண்மை வாரியம்...  அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!



காவிரி நீர் குறித்து,  காவிரி  டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி  கல்யாணம் பேசும்போது,  “ஜூன் முதல் தேதியிலிருந்து  ஜனவரி மாதம் வரைதான் பாசனப் பருவம் என நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு பாசனத்துக்கு அணைகளைத் திறக்கக் கூடாது. ஆனால், கர்நாடகா, கோடைப் பாசனத்துக்கு தொடர்ச்சியாக காவிரித் தண்ணீரை எடுத்துக்கொள்கிறது. ஜூன் மாதத்தில் தங்களது அணைகளில் தண்ணீர் இல்லை எனக் கூறுவதை கர்நாடகா வாடிக்கையாக வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்
30 டி.எம்.சி அளவு தண்ணீரை கோடைப் பாசனத்துக்கு கர்நாடகா பயன்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி கர்நாடக அணைகளின்  மொத்த நீர் இருப்பு 40.3 டி.எம்.சி. ஆனால் மே 31-ம் தேதி 18.5 டி.எம்.சியாக அது குறைந்துவிட்டது. விதிமுறைகளை மீறி, கர்நாடகா கோடைப் பாசனத்துக்குத் தண்ணீரை பயன்படுத்திவிட்டு, ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை’ என  நாடகமாடுகிறது. மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இதை அனுமதிக்கக் கூடாது” என்றார்.

இந்நிலையில், சம்பா சாகுபடிக்காக  செப்டம்பர்  20-ம் தேதி மேட்டூர் அணை  திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் வந்து சேர பத்து நாட்கள் ஆகிவிடும் என்பதால், இன்னமும் டெல்டா விவசாயிகள் மன உளைச்சலில்தான் இருக்கிறார்கள். அதனால், தொடர்ச்சியாக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள், விவசாயிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism