Published:Updated:

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

Published:Updated:
மண்புழு மன்னாரு !

வேலிப் பருத்தி அற்புதமான மூலிகை. இது மனுஷங்களுக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் பாதுகாவலனா இருக்குது. அரை கிலோ வேலிப்பருத்தி இலையை, அரைச்சி பத்து லிட்டர் தண்ணியில கலந்துடுங்க. கூடவே நூறு மில்லி காதி சோப்பு கரைசலையும் சேர்த்து, நிலக்கடலைச் செடி மேல தெளிங்க. இப்படி செய்யறதால, இலைச்சுருட்டுப் புழு, கம்பளிப் புழுங்க எல்லாம் காணாம போகும். முப்பது நாளைக்கு ஒரு முறை இப்படி தெளிச்சா புழு, பூச்சும் அண்டாது நிலக்கடலையும் திரட்சியா வளரும். இந்தத் தொழில்நுட்பத்தை குஜராத்துல செய்துக்கிட்டு இருக்காங்க.

 மாமரத்துல இலைப் புழுங்களோட தொல்லை அதிகமா இருக்கும். அதைக் கட்டுப்படுத்த கண்ட, கண்ட விஷத்தைத் தெளிக்க வேணாம். ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி, விளக்கெண்ணெய் 100 மில்லிங்கற வீதத்துல எடுத்துக்குங்க. இதை, பத்து லிட்டர் தண்ணியில கலக்கி, நூறு மில்லி காதி சோப்புக் கரைசலையும் கலந்து... தெளிச்சுவிடுங்க. ஒரு வாரம் கழிச்சி திரும்பவும், ஒரு முறை தெளிங்க. இலைப்புழுங்க இருந்த இடம் தெரியாம போயிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அசோலா வளர்க்கறவங்க, மாசம் ஒரு தடவை அதுக்கு உரம் போடணும். உரம்னதும்... 'ரசாயன உரம்'னு முடிவு பண்ணிக்காதீங்க. இயற்கையிலயும் அதுக்கு உரம் இருக்குது. தினமும் அரை கிலோ மகசூல் கொடுக்கிற தொட்டிக்கு, ஒரு கிலோ செம்மண், ஒரு கிலோ பசுஞ்சாணம் ரெண்டையும் போட்டு கலக்கி விடுங்க. இதை மாசம் ஒரு தடவை செஞ்சா... அசோலா அற்புதமா வளரும்.

 கிளுவைச் செடியை உயிர்வேலியா பயன்படுத்தலாம். குறிப்பா... மானாவாரி நிலத்துல கிளுவைச் செடி வேலிங்க, கோட்டை மதில் மாதிரி நிக்கும். இதோட இலைங்க ஆடுகளுக்கு அருமையான தீவனம். இந்தத் தழையைச் சாப்பிட்டு வளர்ற ஆடுங்க... 'கொழுகொழு'னு வளரும்.

கிளுவை பத்தின கூடுதல் தகவல்... ஒரு வகை கிளுவைச் செடியில இருந்துதான் வாசனையான குங்குலியம் எடுக்கிறாங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism