Published:Updated:

பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!

 பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!

பண்ணைக் கருவிகள்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!

பண்ணைக் கருவிகள்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
 பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!
 பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!

விவசாயத்தில் வேலையாட்கள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க எளிய வழி, சின்னச் சின்னக் கருவிகளைப் பயன்படுத்துவதுதான். இதனால் வேலைப்பளு குறைவதோடு விவசாயப் பணிகளைத் தொய்வில்லாமலும் செய்ய முடியும். அதற்காக வேளாண் பல்கலைக்கழகம் மூலமாகப் பல வகையான இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், தங்களுக்கேற்ற கருவிகளை விவசாயிகளும், விவசாய ஆர்வலர்கள் பலரும் தாங்களாகவே வடிவமைத்துக் கொள்வதும் உண்டு. அந்த வகையில், தேங்காய் நெற்றை வெட்டக்கூடிய வகையில், ‘கோக்கனட் கட்டர்’ (Coconut Cutter) எனும் இயந்திரத்தையும், கடலைச் செடியில் இருந்து கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளார், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த செந்தில். இவர், லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

பட்டறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த செந்திலைச் சந்தித்தோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்ல. ஆனா, விவசாயிகள் பயன்படுத்துற கருவிகள், இயந்திரங்கள் குறித்து நல்லா தெரியும். தாத்தா, அப்பா, இப்போ நான்னு மூணு தலைமுறையா லேத் பட்டறை வேலைதான் பார்க்கிறோம்.

நான் எட்டாம் வகுப்பு முடிச்சவுடனேயே அப்பா கூட வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி விவசாயக் கருவிகள், டிராக்டர்களுக்கு எல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் உடனடியா கிடைக்காது. தேடி அலைய வேண்டியிருக்கும். சொல்லி வெச்சுதான் வாங்க வேண்டியிருக்கும். சில சமயம் மாசக்கணக்குல காத்திட்டு இருக்க வேண்டியிருக்கும். அதனால, பக்கத்துல இருக்குற விவசாயிகள் எங்க ஒர்க்‌ஷாப்புக்கு வந்து பழுதான பார்ட்ஸ் மாதிரி செஞ்சு தரச் சொல்லுவாங்க. அது மாதிரியே செஞ்சு கொடுப்போம். அப்படி இங்க வர்ற விவசாயிகள்கிட்ட பேசுறப்போ, அதிக வேலையாட்கள் தேவைப்படுற விவசாய வேலைகள், ஆட்களால் செய்ய முடியாத வேலைகள் குறித்துத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ விவசாயிகள் சொல்ற பிரச்னைகளை கேட்டப்போதுதான் விவசாயிகளுக்கு உதவுற மாதிரியான சின்னச்சின்னக் கருவிகளை வடிவமைக்கணும்னு எண்ணம் வந்தது” என்று முன்னுரை கொடுத்த செந்தில் தொடர்ந்தார்.

“நெல் வயல்ல வரிசையா நாற்றை நடவு செய்றதுக்காகக் கயிறு பிடிச்சு நடுவாங்க. அதுக்கு மாற்றா ‘ரோ மார்க்கர்’னு ஒரு கருவியை வடிவமைச்சேன். ஒரு வட்டத்தில் 4 கம்பி இருக்கும். அதைக் கையில் பிடித்து உருட்டினால் 25 சென்டிமீட்டர் இடைவெளியில் மார்க் விழுந்துடும். அதுதான் நான் செஞ்ச முதல் கருவி. தொடர்ந்து, ‘கோனே வீடர்’, ‘பிங்கர் வீடர்’, ‘களை எடுக்கிற இயந்திரம்’, ‘உளுந்து விதைக்கும் இயந்திரம்’ என விவசாயத்துக்கான கருவிகளைச் செஞ்சேன்.

 பட்டறை உரிமையாளரின் பலே முயற்சி! - சின்னக் கருவிகள், பெரிய பலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்சார வாரியப் பணியாளர்கள் மின் கம்பங்கள்ல சுலபமாக ஏறுவதற்கு ஒரு ‘லிப்டிங் செப்பல்’ கண்டுபிடிச்சேன். அந்த வரிசையிலதான் இப்போ, ‘கோக்கனட் கட்டர்’, ‘கடலையைப் பிரித்தெடுக்கும் கருவி’ ரெண்டையும் வடிவமைச்சிருக்கேன்” என்ற செந்தில் அருகிலுள்ள அவர் நண்பரின் தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அவர் வடிவமைத்த இயந்திரங்கள் இருந்தன.

“இந்தத் தென்னந்தோப்புக்கு ஒரு நாள் வந்திருக்கும்போது, கோடரி, அரிவாள் வெச்சு தேங்காய் நெத்துகளை ரெண்டா உடைச்சு, காய வெச்சுட்டு இருந்தாங்க. அந்த வேலையை எளிதாக்குற விதமாத்தான் கோக்கனட் கட்டரை வடிவமைச்சேன். ‘Coconut Cutterச் செடிகளில் இருந்து கடலையைப் பிரித்தெடுக்குறதுக் குள்ள போதும் போதும்னு ஆயிடும்’னு விவசாயி ஒருத்தர் சொன்னார். அதை மனசுல வெச்சுதான் கடலையைப் பிரித்தெடுக்குற மிஷினை வடிவமைச்சேன்” என்ற செந்தில், இந்தக் கருவிகள் வடிவமைக்க ஆகும் செலவு பற்றியும் சொன்னார்.

“கோகனட் கட்டர் வடிவமைக்க 7 ஆயிரம் ரூபாய் செலவானது. கடலையைப் பிரித்தெடுக்கும் மிஷினை வடிவமைக்க 8 ஆயிரம் ரூபாய் செலவானது. இதே விலைக்கு விவசாயிகளுக்கும் கருவிகளை வடிவமைச்சுக் கொடுத்திட்டு வர்றேன்.

வேலையாட்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைக் கணக்குப் பார்க்கும்போது ஒரேமுறை முதலீடு செய்ற இந்தத் தொகை ரொம்பக் குறைவானது தான். அடுத்ததாக நெத்தில் இருந்து முழுத்தேங்காயை உரித்தெடுக்குற கருவியை வடிவமைக்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறேன்” என்றார்.  அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

கருவிகள் செயல்படும் விதம் இதுகுறித்து செந்தில் சொன்ன விஷயங்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

தேங்காய் நெற்றை வெட்டும் கருவி


தரையில் இருந்து 20 அங்குல உயரம், 30 அங்குல அகலம் கொண்ட ஒரு சட்டம் செய்து, சட்டத்துக்கு நடுவில் தேங்காயை வைக்கும் படியாக இரண்டு வளைவுகள் அமைச்சிருக்கேன். இதுலதான் தேங்காயை வைக்க வேண்டும். வலது புற ஓரத்தில் 5 அடி உயரத்தில் இரண்டு இரும்புப் பட்டைகள் பொருத்தியிருக்கேன். இந்த இரண்டு இரும்புப் பட்டைகளுக்கு நடுவில் சிறிது இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியில்தான் தேங்காயை வெட்டும் ‘யூ’ வடிவ பிளேடு பொருத்தப்பட்ட 7 அடி நீளமுள்ள பட்டை பொருத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டையின் எதிர்முனை இடதுபுற ஓரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். தேங்காயை மிஷினின் நடுவில் வைத்துவிட்டு, வலது புறத்தில் உள்ள கைப்பிடியை எவ்வளவு உயர்த்த முடியுமோ, அவ்வளவு உயர்த்தி வேகமாகக் கீழே இறக்கினால், தேங்காய் இரண்டு துண்டுகளாகிவிடும்.

சாதாரணமாக, ஆயிரம் தேங்காய் நெத்துகளை அரிவாள் மூலம் வெட்ட, குறைந்தது 8 வேலையாட்கள், 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்தக் கட்டர் மூலம் ஆயிரம் தேங்காய் நெத்துகளை இரண்டு வேலையாட்கள் 4 மணி நேரத்தில் வெட்டி முடித்துவிடலாம். கோடரி, அரிவாளால் வெட்டும் போது, தேங்காய் ஓடுகள் சிதறி உடலில் பட வாய்ப்புள்ளது. ஆனால், கட்டர் பாதுகாப்பானது. தவிர, சரியாக இரு பாதியாக வெட்ட முடியும். கீழே பாத்திரம் வைத்து தேங்காய்த் தண்ணீரையும் வீணாக்காமல் பிடித்துத் தாகம் தணிக்கலாம். தவிர, நெத்துகளை இடுபொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும்.

கடலையைப் பிரித்தெடுக்கும் கருவி

இரண்டரை அடி உயரம், இரண்டரை அடி நீளம், ஒன்றரை அடி அகலத்தில் ‘எல்’ வடிவ இரும்புப் பட்டைகளை இணைத்து மேசை போன்ற ஒரு பிரேம் செய்துள்ளேன். அதன் நடுவில் சுழலும் வகையில் ‘சைக்கிள் ரிம்’ பொருத்தி, அதை 1 எச்.பி மோட்டாருடன் இணைத்துள்ளேன்.

சைக்கிள் ரிம்மின் நடுப்பகுதிக்கு வலப்புறமும், இடப்புறமும் ஒன்றரை அங்குல அளவு இடைவெளியில் ஒரு சிறிய தடுப்பு வைத்துள்ளேன். மோட்டாரின் சுவிட்சை ஆன் செய்தால், சைக்கிள் ரிம் வேகமாகச் சுழலும், கடலைச் செடிகளை ஒரு கை அளவு எடுத்து ரிம்மின் இரண்டு புறங்களிலும் உள்ள தடுப்புகளுக்கு இடையில் கொடுத்தால், கடலைச் செடிகள் சைக்கிள் ரிம்மில் உள்ள போக்ஸ் கம்பிகளில் பட்டு, கடலை தனியாக விழும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்த கடலையைப் பிரித்து எடுக்க, குறைந்தது 14 பேர் ஒரு நாள் முழுக்க வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்த மிஷின் மூலம் கடலையைப் பிரித்தெடுக்க, 4 பேர் 3 மணிநேரம் வேலை செய்தாலே போதுமானது. மின்சாரமும் குறைந்த அளவில்தான் செலவாகும்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism