Published:Updated:

தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - பாசனம்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்! - பாசனம்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்
தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

சொட்டுநீர்ப் பாசன முறைகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் மற்றும் நீரியல் வல்லுநருமான இளமுருகு பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

“சொட்டுநீர்ப் பாசனம் என்பது இந்திய விவசாயிகளுக்கு இன்றைக்கும் புதிதாகத் தெரிகிறது. ஆனால், உலகின் பல நாடுகளின் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பது, சொட்டுநீர்ப் பாசனம்தான். ஒரே ஒரு குளத்தை மட்டுமே நீராதாரமாக வைத்துள்ள இஸ்ரேல், வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்வதில் தலைசிறந்து விளங்கக் காரணம், சொட்டுநீர்ப் பாசனம்தான். இஸ்ரேலில், நீர் மேலாண்மையில் பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் அடிப்படை, சொட்டுநீர்ப் பாசனம்தான்.

தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும்பாலான விவசாயிகள், ‘தண்ணீர் வசதி இல்லாதவர்கள்தான் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் வசதி இருப்பவர்கள், சொட்டுநீர்ப் பாசன முறைக்கு மாறினால் தண்ணீரைச் சேமிக்க முடியும். வறட்சியைச் சமாளிக்க முடியும்.

வாய்க்கால் மூலமாகப் பாசனம் செய்வதைத் தவிர்த்து, செடிக்குத் தேவையான தண்ணீரை, குழாய் மூலமாக நேரடியாக வேர்ப் பகுதியில் சொட்டுவான் மூலமாக சொட்டுச் சொட்டாகக் கொடுக்கும் முறைதான், சொட்டுநீர்ப் பாசனம். இப்பாசன முறை மூலம் தேவையான நேரத்தில், தேவையான அளவு நீர் கிடைப்பதால் பயிர்கள் செழிப்பாக வளர்வதுடன், தரமான மகசூலும் கிடைக்கிறது. தவிர, வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்காது என்பதால், வேர் அழுகல் நோய் தவிர்க்கப்படும்.

தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

திறந்த வெளிக் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து மின் மோட்டார் மூலமாக இறைக்கப்படும் தண்ணீரை, முதன்மைக் குழாய் (மெயின் பைப்), கிளைக் குழாய் (சப் மெயின் பைப் ), பக்கவாட்டுக் குழாய் (லேட்ரல்) ஆகியவற்றின் மூலம் சாகுபடி செய்யப்படும் நிலத்துக்குக் கொண்டு செல்வது, தேவையான இடங்களில் சொட்டுவான்களை அமைப்பது, இவைதான் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் முறைகள்” என்ற இளமுருகு, சொட்டுநீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் குழாய்கள் குறித்துச் சொன்னார்.

மோட்டாரில் இருந்து முதன்மைக்குழாய்!

“சொட்டுநீர்ப் பாசனத்துக்குப் பெரும்பாலும் பி.வி.சி குழாய்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மோட்டாரில் இருந்து, நிலத்தின் கடைசிப் பகுதி வரை முதன்மைக் குழாய்களைப் பொருத்த வேண்டும். கிணற்றில் இருந்து வரும் தண்ணீரில் உள்ள தூசு துகள்கள் சொட்டுவானில் நீர் சொட்டும் சிறிய துளைகளை அடைத்துக்கொள்ளும் என்பதால், முதன்மைக்குழாயில் ஒரு வடிகட்டியைப் (ஃபில்டர்) பொருத்த வேண்டும். மோட்டாரின் திறன், தண்ணீர் வெளியேறும் அளவு போன்றவற்றைப் பொறுத்து முதன்மைக்குழாயின் அளவை நிர்ணயித்துக்கொள்ளலாம். முதன்மைக்குழாய்களை மண்ணுக்கு அடியில் இரண்டு, மூன்று அடி ஆழத்தில் அமைத்தால், வெப்பத்தால் பாதிப்பு ஏற்படாது. முதன்மைக்குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் டிராக்டர், கடப்பாரை ஆகியவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.
 
முதன்மைக்குழாயில் இருந்து கிளைக் குழாய்!


முதன்மைக்குழாய்கள் மூலமாக வரும் தண்ணீரை மடைமாற்றும் பணியைச் செய்பவைதான், கிளைக்குழாய்கள். முதன்மைக்குழாயின் அளவைவிட, இவற்றின் அளவு சிறியதாக இருக்க வேண்டும். கிளைக்குழாய்களும் மண்ணுக்கு அடியில் இருக்க வேண்டும். பயிர்களுக்கு ஏற்ப அல்லது நமது வசதிக்கேற்ற இடத்தில் கிளைக்குழாய்களை முதன்மைக்குழாய்களில் இணைக்க வேண்டும். ஒவ்வொரு கிளைக்குழாய்க்கும் ஒரு ‘கேட் வால்வு’ பொருத்த வேண்டும். கேட் வால்வின் மீது மண், சேறு படியாமல் பாதுகாக்க வேண்டும். முதன்மைக்குழாய்களைச் சுத்தம் செய்ய வசதியாக, கிளைக்குழாயின் கடைசியில் ‘பிளஸ் வால்வு’ பொருத்த வேண்டும்.

கிளைக்குழாயில் இருந்து லேட்ரல்!

கிளைக்குழாய்களில் இருந்து வரும் தண்ணீரைப் பயிருக்கு அருகே கொண்டு செல்பவை,

தேவையான நேரத்தில் அளவான தண்ணீர்

பக்கவாட்டுக் குழாய்கள் (லேட்ரல்). இவை, 12 மில்லிமீட்டர், 16 மில்லிமீட்டர் ஆகிய அளவுகளில் கிடைக்கின்றன. லேட்ரல்களைப் பயிரின் வரிசை,  இடைவெளிக்கேற்ப கிளைக்குழாயில் இணைக்க வேண்டும். கிளைக்குழாயில் சரியான அளவு ‘வாசர்’ மற்றும் ‘ஸ்டார்ட்டர்’ ஆகியவற்றைப் பொருத்தினால் தண்ணீர் கசிந்து வீணாவதைத் தடுக்க முடியும். லேட்ரல் குழாய்கள் மடங்கக்கூடாது. இக்குழாயின் இறுதிப்பகுதியில், குழாயை மடக்கி ‘எண்ட்கேப்’ (8 போன்ற அமைப்பில் உள்ள வளையம்) போட வேண்டும். லேட்ரல்களை சூரிய வெப்பம் மற்றும் எலி, அணில் போன்ற பிராணிகளிடம் இருந்து காப்பாற்ற மூன்று அல்லது நான்கு அங்குல ஆழத்தில் புதைத்து வைக்கலாம் (தற்போது எலி, அணில் போன்ற பிராணிகளால் பாதிப்புக்குள்ளாகாதவாறு சொட்டுநீர்க் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன). வாரம் ஒருமுறை எண்ட் கேப்பை நீக்கி பாசனம் செய்யும்போது, லேட்ரல்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படும்.

டிரிப்பர் எனப்படும் சொட்டுவான்களின் வகைகள் மற்றும் அவற்றைப் பொருத்தும் விதம், அடுத்த இதழில்...

- தண்ணீர் சொட்டும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism