Published:Updated:

கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!

கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி! - சந்தைதுரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன்

கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி! - சந்தைதுரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:
கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!
கம்பு! - குவிண்டால் ரூ 2,700 சத்தான லாபம் தரும் கம்பு!

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும், சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ‘ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன?’ என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். இந்த இதழில் கம்பு குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

இந்தியாவில் விளையும் தானியங்களில் முக்கியமானவற்றில் ஒன்று கம்பு. இது, புன்செய் நிலங்களுக்கான முக்கியமான பயிர். கடும் வறட்சி நிலவிய காலங்களில் பசி போக்க உதவிய தானியம் இது. வறட்சியான பகுதிகளிலும் நன்றாக விளையக்கூடியது. நாடு முழுவதுமே இறவை மற்றும் மானாவாரியில் இப்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. உலகளவில் இந்தியாவில்தான் கம்பு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, மூன்று முதல் நான்கு மாதங்களில் அறுவடைக்கு வரும். அனைத்து வகை மண்ணிலும் விளையும். மண்ணில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும்கூட வளர்ந்துவிடும் தன்மை கொண்ட பயிர். அதனால்தான் இந்தியாவில் விளையும் சிறுதானியங்களில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல வருமானம் தரும் பயிர்களிலும் கம்பு முதலிடத்தில் உள்ளது.

இதன் பூர்விகம் ஆப்ரிக்கா என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 40 நாடுகளில் இது உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. தவிர, கால்நடைத்தீவனத் தயாரிப்பு, ஸ்டார்ச் தயாரிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றிலும் கம்பு பயன்படுத்தப்படுகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தைக் கம்பு பிடித்திருக்கிறது. இந்தியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கம்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

தமிழகத்தில் நெல், சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் பயிர், கம்பு. இது, மற்ற தானியங்களைவிட அதிகச் சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் அதிகளவு புரோட்டீன் (11.8%) உள்ளது. வைட்டமின் ஏ-வை உருவாக்கும் பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ளது. அதனால், தோல் மற்றும் கண்ணுக்கு ஏற்ற உணவிது. நன்கு உலர வைத்த கம்பு 6 மாதங்கள் வரைகூடக் கெடாது. அவ்வப்போது வெயிலில் காய வைத்துப் பத்திரப்படுத்தினால் போதும். கம்புடன் நொச்சி இலைகளைச் சேர்த்து சேமித்து வைத்தால் பூச்சிகள் வராது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பரிந்துரைப்படி ஒரு ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்ய 5 கிலோ அளவு விதை தேவைப்படும். பெரும்பாலான விவசாயிகள், சால் முறையில்தான் விதைக்கிறார்கள். விதைப்பு முறையைப் பொறுத்து விதையின் அளவு மாறுபடும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தகவலின்படி கோ (சியு) 9, வீரிய ஒட்டு ரக கம்பு கோ (சியு) 9 ஆகிய ரகங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றவை. இந்த இரண்டு ரகங்கள்தான் தமிழகத்தில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இந்த ரகங்களை மானாவாரி நிலங்களில் ஆடி, புரட்டாசி ஆகிய பட்டங்களில் விதைக்கலாம்.   இறவையில் மாசி, சித்திரை  பட்டங்களில் விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 2.89 டன் மகசூல் கிடைக்கும்.

நீலகிரி மாவட்டத்தைத் தவிர தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கம்பு சாகுபடி செய்யலாம். இறவை நிலங்களில் சித்திரை மற்றும் மாசிப் பட்ட விதைப்பில் கோ-7, கோ-9, X 7, ICMV-221, த.வே.ப.கழக கலப்பின கம்பு, கோ-9 ஆகிய ரகங்கள் விதைக்கப்படுகின்றன. இதே ரகங்களை மானாவாரி நிலங்களில் ஆடி, புரட்டாசி பட்டங்களிலும் விதைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 2014-15-ம் ஆண்டில் 1.71 லட்சம் டன் அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட 46 சதவிகிதம் அதிகம். அதிகத் தேவை இருக்கும் தானியமாகக் கம்பு இருப்பதால் அதற்குச் சத்தான சந்தை வாய்ப்பு உள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு கம்பு சாகுபடியில் ஈடுபட்டால், நிச்சயம் நல்ல லாபம் ஈட்ட முடியும். தற்போது, ஒரு குவிண்டால் கம்பு 2 ஆயிரத்து 400 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 700 ரூபாய் வரை விற்பனையாகிறது.

(ஆதாரம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதளம்)

- லாபம் பெருகும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism