Published:Updated:

பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

இயற்கைஜி.பழனிச்சாமி - படங்கள்: வீ.சிவக்குமார்

பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

இயற்கைஜி.பழனிச்சாமி - படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!
பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

ரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. அந்த வரிசையில் இந்த இதழில் இடம்பெறுகிறார், ‘முன்னோடி முருங்கை விவசாயி’ ஏ.பி.அழகர்சாமி. இவரைப் பற்றி ‘சக்கைப் போடு போடுது முருங்கை சாகுபடி’ என்று 10.5.2007 பசுமை விகடன் இதழில் எழுதியுள்ளோம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது இவரது 22 ஏக்கர் பண்ணை. இவர் ஒரு முருங்கை விவசாயி மட்டுமல்ல. சிறந்த கண்டுபிடிப்பாளரும்கூட, விண் பதியன் முறை என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாரம்பர்யமான நாட்டுரக முருங்கை மரங்களில் இருந்து உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய ரக முருங்கையை உருவாக்கியுள்ளார். அந்த ரக நாற்றுகளையும் உற்பத்தி செய்து வருகிறார் இவர். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி முருங்கையில் நல்ல மகசூல் எடுத்து வரும் அழகர்சாமியிடம் பேசினோம்.

“எனக்குச் சொந்த ஊர் பள்ளப்பட்டி கிராமம். சாதாரண விவசாயக் குடும்பம்தான். எல்லா விவசாயிகளையும் போல என் அப்பாவும், ‘கஷ்டப்பட்டு நஷ்டப்படுற விவசாயம் என்னோடு போகட்டும். நீயாவது படிச்சுக் கைநிறையச் சம்பளம் வாங்குற வேலைக்குப் போகணும்’னு சொல்லி நல்லா படிக்க வெச்சார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி தாவரவியல் முடிச்சு, கிராம சேவைத்துறையில எம்.ஏ. படிச்சேன். முடிச்சதும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துல வேளாண்மைத் திட்ட அலுவலரா வேலை கிடைச்சது. 10 வருஷம் வேலை செஞ்சேன்.

திரும்பவும் படிக்க ஆசை வரவும், வேலையை விட்டுட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து ‘வேளாண்மையும் நலவாழ்வியலும்’ங்கிற தலைப்புல அஞ்சு வருஷம் ஆய்வு செஞ்சேன். அப்போதான், முருங்கை மரம் குறித்தும் அதன் மருத்துவக் குணங்கள் குறித்தும் ஆராய்ச்சி பண்ண வாய்ப்பு கிடைச்சது. அப்போ, முருங்கை மரங்கள் குறித்த தகவல்கள் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திச்சு.

பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முருங்கை சாதாரண மரம் அல்ல. பூ, இலை, காய், விதை, பிசின், பட்டைனு எல்லாத்துக்குமே சிறந்த மருத்துவக் குணங்கள் இருக்குறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுலதான் எனக்கு முருங்கை மீது பெரிய ஈடுபாடு வந்துச்சு” என்று முன்னுரை கொடுத்த அழகர்சாமி தொடர்ந்தார்.

 “100 வருஷம் வரை கூடக் காய்க்கும் திறனுடைய பல நாட்டு முருங்கை ரகங்கள் அழியற நிலையில் இருக்குறது தெரியவும்... அந்த மரங்களை மீட்டெடுக்குற முயற்சியில இறங்கினேன். பல இடங்கள் சுத்தினதுல 6 வகை நாட்டு ரக முருங்கைகளை தேர்ந்தெடுத்தேன். அந்த மரப் போத்துகளை என்னோட பூர்விக நிலத்துல நட்டேன். அந்த ரகங்கள்ல இருந்து புதிய நாட்டு ரக முருங்கை நாற்றுகளை உருவாக்கி, என்னோட ஒரு ஏக்கர் நிலத்துல நடவு செஞ்சேன்.

மழைக் காலங்கள்ல முருங்கைக் காய்களுக்கு ஏக கிராக்கி வரும். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாசங்கள்ல விரத நாட்கள் அதிகம். அதனால அந்தச் சீசன்ல முருங்கைக்குத் தேவை இருக்கும். ஆனா, விளைச்சல் இருக்காது. கிலோ 200 ரூபாய் வரைகூட விற்பனையாகும். நான் உற்பத்தி செஞ்ச புதிய ரக நாட்டு முருங்கை, மழைக்காலங்கள்ல சிறப்பான மகசூல் கொடுக்கும். அதிகமான அளவுல காய்கள் காய்க்கும். ஒரு ஏக்கர்ல நான் நட்டிருந்த நாட்டுமுருங்கை மூலமா எனக்கு நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது.

பஞ்சகவ்யா கொடுத்த பணக்கார வாழ்வு! - அன்று ஒரு ஏக்கர்... இன்று 22 ஏக்கர்!

மதுரை ‘சேவா’ விவேகானந்தன் மூலமா எனக்கு நம்மாழ்வார் அய்யா அறிமுகம் கிடைச்சது. அவர், என்னோட புதிய நாட்டு ரக முருங்கையைத் தெரிஞ்சு பாராட்டினார். திடீர்னு ஒரு நாள் என்னோட தோட்டத்துக்கும் வந்தார், நம்மாழ்வார். அப்போ, சில முருங்கை மரங்கள்ல பிசின் வந்து காய்ப்பு இல்லாம இருந்ததைப் பார்த்துட்டு, ‘பாதிக்கப்பட்ட முருங்கை மரங்கள சரி பண்ணுங்க... இல்லேனா நல்லா இருக்கிற மரங்களும் இதுபோல ஆயிடும். ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன் பஞ்சகவ்யானு ஒரு கரைசலைக் கண்டுபிடிச்சிருக்கார். அந்தக் கரைசலை முருங்கை மரங்களுக்குக் கொடுங்க. எல்லா நோயும் சரியாகிடும். மரங்கள் ஊக்கமாகவும் நின்னு பலன் கொடுக்கும்’னு சொன்னார்.

அடுத்த நாளே கொடுமுடி போய் டாக்டர் நடராஜனைப் பார்த்தேன். அவர், பஞ்சகவ்யா தயாரிக்கிற விதம், பயன்படுத்துற விதம் எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தார். உடனே பஞ்சகவ்யா தயாரிச்சு முருங்கை மரங்களுக்குக் கொடுத்தேன். படிப்படியா நோய் நீங்கி, பாதிக்கப்பட்ட மரங்கள் எல்லாம் நல்லா காய்க்க ஆரம்பிச்சது. தொடர்ந்து வழக்கமான அஞ்சு பொருட்களோட 5 கிலோ திராட்சை, 5 கிலோ பேரீச்சை, 10 கிலோ பப்பாளி, 150 வாழைப்பழங்கள், அரை லிட்டர் தேன்னு கூடுதலா அஞ்சு பொருட்கள் சேர்த்து ஊட்டமேற்றிய பஞ்சகவ்யா தயாரிச்சேன். இதுல பேரீச்சை தவிர எல்லாமே என்னோட தோட்டத்துல கிடைக்கிற பொருட்கள்தான்.

இந்தக் கரைசலைத்தான் 15 நாட்களுக்கு ஒருமுறை முருங்கை மரங்களுக்குக் கொடுத்திட்டிருக்கேன். 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர்ங்கிற அளவில் பாசனத்தில் கொடுக்கிறேன். இளம் செடிகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லிங்கிற அளவுல கலந்து தெளிக்கிறேன். பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிச்சது.

மழைக்காலங்கள்லயும் முருங்கை விளைஞ்சதால வருமானம் அதிகரிக்க ஆரம்பிச்சது. தவிர ஒட்டு ரக நாற்றுகளையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இப்படிக் கிடைச்ச லாபத்துல கொஞ்சம் கொஞ்சமா நிலம் வாங்கி முருங்கைச் சாகுபடியை ஆரம்பிச்சேன். இப்போ 22 ஏக்கர் நிலம் இருக்கு. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்குறதால இன்னிக்கு இந்த நிலத்தோட மதிப்பு பல கோடி ரூபாய். பஞ்சகவ்யா மாதிரியான இடுபொருட்களாலயும், என்னோட பதினஞ்சு வருஷ உழைப்பாலயும் கிடைச்ச பலன் இது” என்ற அழகர்சாமி, நிறைவாக, “அதிக மருத்துவக் குணம் கொண்ட முருங்கைப் பூக்கள், இலை, காய், விதை, பட்டை, பிசின் மாதிரியான மூலப்பொருட்களைக் கொண்டு ஊக்கம் தரும் டானிக் உள்ளிட்ட மருந்துகள் தயாரிக்கிற முயற்சியில் இருக்கேன். முருங்கை மரத்தில் பொதிந்து கிடக்குற மருத்துவத் தன்மைகளை வெளிக்கொண்டு வந்து நோயில்லா சமூகத்தை உருவாக்கணும்கிறதுதான் என்னோட நோக்கம். ‘மேழிச்செல்வம் கோழை போகாது’னு சொல்வாங்க. என்னைப் பொருத்தவரைக்கும் முருங்கைதான் என்னோட செல்வம்” என்று சொன்னபடியே வாஞ்சையுடன் முருங்கை மரத்தைத் தடவிக் கொடுத்தார்.


தொடர்புக்கு,
அழகர்சாமி
செல்போன்: 97917 74887.


பஞ்சகவ்யாவும் பள்ளப்பட்டி முருங்கையும்!

சரம் சரமாகத் தொங்கும் முருங்கைக்காய்களைக் காட்டிப் பேசிய அழகர்சாமி, “ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 500 கிலோவுக்கு மேல் முருங்கைக்காய் கிடைக்கும். பொதுவா, நாட்டு ரக முருங்கையில இவ்வளவு காய்ப்பு இருக்காதுனு சொல்வாங்க. ஆனா, அது தவறு. பஞ்சகவ்யா கொடுத்தா கண்டிப்பா இவ்வளவு மகசூல் எடுக்க முடியும்.

நடவு செஞ்ச நாள்ல இருந்து 15 நாளுக்கு ஒரு தடவை இலைவழியா பஞ்சகவ்யா தெளிச்சிடுவோம். 15 நாளைக்கு ஒரு தடவை வேர் வழி உரமா பாசனத் தண்ணீர்லயும் பஞ்சகவ்யா கொடுத்துடுவோம். நாட்டு மாடுகள்ல இருந்து கிடைக்கிற பொருட்கள்ல இருந்துதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறோம்.

சமீபத்துல ஆந்திர மாநிலத்தைப் பூர்விகமாக் கொண்ட ஓங்கோல் மாட்டையும், ரெண்டு கன்னுக்குட்டிகளையும் வாங்கியிருக்கேன். அந்த மாடுகளோட சாணம், சிறுநீரையும் பஞ்சகவ்யா தயாரிக்கப் பயன்படுத்துறோம். பஞ்சகவ்யாவில் விளைஞ்ச இந்தப் ‘பள்ளப்பட்டி முருங்கை’க்கு சந்தையில தனிக் கிராக்கி இருக்கு. வர்த்தக ரீதியா பி.ஏ.வி.எம். என்ற பேர்ல ஏற்றுமதிக்கு உகந்த காய்கள உருவாக்குற ரகமாகவும் இருக்கு.  இதுல மருத்துவக் குணமும் அதிகம்” என்றார்.

பிரிந்து சென்ற மனைவி...சேர்த்து வைத்த முருங்கை!

‘‘முருங்கைச் சாகுபடியில எனக்கு வெற்றி கிடைக்கவும். விவசாயம் தொடர்பான பத்திரிகைகள் எல்லாம் என்னோட பேட்டியை அப்போ வெளியிட்டாங்க. நல்லா போய்க்கிட்டிருந்த வாழ்க்கையில புயல் ஒண்ணு உருவாச்சு, ‘கை நிறையச் சம்பளம் வந்த வேலைய விட்டுட்டு முருங்கை முருங்கை...னு அலையுற மனுஷன்கூட, வாழ விரும்பலை’னு விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போய்ட்டாங்க என் மனைவி முருகேஸ்வரி. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவங்க கேக்கலை.
 
அந்த வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்த சமயத்துல, கூண்டுல நின்ன என்னை உத்து உத்துப் பார்த்தாரு நீதிபதி. அவரோட மேசையில் இருந்த ஒரு விவசாயப் பத்திரிகையை எடுத்துக் காட்டினார். அதுல என்னைப் பத்தி செய்தி வந்திருந்துச்சு. இது நீங்கதானான்னு கேட்டு நீதிபதி உறுதிப்படுத்திக்கிட்டார். அவர்தான் என் மனைவிகிட்ட, ‘பத்திரிகையில் எல்லாம் வருகிற அளவுக்கு இருக்காரு இவர். விவசாயத்துல சாதிக்கணும்னு நினைக்கிற மனுஷன். விவசாயம் உன்னதமான சேவை. நான்கூட ஓய்வுக்குப் பிறகு விவசாயம்தான் பார்க்கப் போறேன். இன்னும் இவர் விவசாயத்துல பல சாதனைகள் செஞ்சு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்க கொடுத்த விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கிட்டு இவர் கூடப் போயி வாழலாம்’னு சொல்லவும், சந்தோஷமாக என் மனைவி எங்கூட சேர்ந்துட்டார்’’ என்கிறார் அழகர்சாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism