Published:Updated:

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!
பிரீமியம் ஸ்டோரி
ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

Published:Updated:
ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!
பிரீமியம் ஸ்டோரி
ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!
ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடும்போது, கூடுதல் வருமானம் கிடைப்பதோடு... விவசாயம் பொய்க்கும்போது வருமானத்தில் தடை ஏற்படாமலும் இருக்கும். அதனால்தான் திட்டமிட்டு விவசாயம் செய்யும் பலரும்... ஆடு, மாடு, கோழி, பன்றி எனக் கால்நடைகளையும் சேர்த்துக்கொண்டு ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், புதிதாக இத்துறையில் கால் பதிப்பவர்களுக்கும் தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வையும், கேள்விகளுக்கான விடைகளையும் தேடி அலைவதற்குள் ‘போதும், போதும்’ என்றாகிவிடும். தவிர, வளர்ப்புக்கான தரமான கால்நடைகள் வாங்குவதிலும் பல சிரமங்கள் உண்டு. இத்தகைய பிரச்னைகளாலேயே, கால்நடை வளர்ப்பை கைவிட்டவர்களும் பலர் உண்டு.
 
வளர்ப்புக்கான கால்நடைகளும், கால்நடை வளர்ப்பு தொடர்பான அத்தனை தகவல்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும்தானே... அப்படி ஓர் இடம்தான், சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே இருக்கும் செட்டிநாடு கிராமத்தில் உள்ள அரசு கால்நடைப்பண்ணை. கால்நடை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், பயிற்சிகள், தீவனப் பயிர் விதைகள் மற்றும் வளர்ப்புக்கான கால்நடைகள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.

தமிழகத்தின் மிகப்பெரிய அரசு கால்நடைப்பண்ணை இது. 1907 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையைச் சுற்றிப் பார்க்கவே சில நாட்கள் தேவைப்படும். 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பண்ணையில் நாட்டுக்கோழி, ஆடு, நாட்டு மாடுகள், வெண்பன்றிகள், தீவனப்பயிர்கள் என அனைத்தும் உள்ளன. நாட்டு மாட்டுப்பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தார்பார்க்கர், சாஹிவால் ரக மாடுகள் உற்பத்தியும் இங்கு நடைபெறுகிறது.

ஈரக்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு காலை வேளையில், கால்நடைப் பண்ணைக்குள் நுழைந்தோம். வாசலில் அமர்ந்திருந்த மயில் அகவல் செய்து வரவேற்பு கொடுத்துவிட்டு பறந்து சென்றது. பண்ணையின் துணை இயக்குநர் மாசிலாமணியிடம் பண்ணை குறித்துப் பேசினோம் (மாசிலாமணி, தற்போது பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநராக இருக்கிறார்).

“கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், அது தொடர்பான பயிற்சிகளையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துவதும்தான், இந்தப் பண்ணையின் நோக்கம். தற்போது இந்தப் பண்ணையில் 135 தார்பார்க்கர் மாடுகள், 50 சாஹிவால் மாடுகள், 310 தலைச்சேரி மற்றும் 88 ஜமுனாபாரி ஆடுகள், 420 ராமநாதபுரம் வெள்ளை ரகச் செம்மறி ஆடுகள், 450 வெண்பன்றிகள், 1,650 நாட்டுக்கோழிகள் இருக்கின்றன.

இதுபோக, வேலிமசால் விதை, கோ-4 தீவனத்தட்டை விதைக்கரணை, கோ.எஃப்.எஸ்-29 சோள விதை ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறோம்” என்ற மாசிலாமணி, பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

அறிவியல் ரீதியில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

“நாட்டுக்கோழி வளர்ப்பை அறிவியல் ரீதியாகவும், அதேநேரம் எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் செய்கிறோம். கோழி கூண்டுகளைச் சுற்றி, நிழல்வலை அமைத்து அதில் கீரைகள், தானியங்களை விதைத்துவிடுகிறோம். பகல் நேரத்தில் கோழிகள் இந்தச் செடிகளைக் கொத்தி தின்று கொள்ளும். வெயில் நேரத்தில் கொட்டகைக்குள் வந்துவிடும். கொட்டகைக்குள் கம்பு, சோளம், அரிசித்தவிடு, அசோலா போன்றவற்றைத் தீவனமாகக் கொடுக்கிறோம். அதனால் கோழிகள் ஆரோக்கியமாக வளர்கின்றன. தற்போது முட்டைகள் அடையில் இருக்கின்றன. அடுத்த மாதம் முதல் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறோம். முன்பதிவு அடிப்படையில்தான் குஞ்சுகளை வழங்குகிறோம்.

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

அனைத்து முறைகளிலும் ஆடு வளர்ப்பு!

நவீன ரக ஆட்டுக் கொட்டகை, பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு முறை, சாதாரணக் கொட்டகையில் ஆடு வளர்க்கும் முறைகள் என எல்லா முறையிலும் இங்கு ஆடுகளை வளர்க்கிறோம். நவீன ரக ஆட்டுப்பண்ணைக்கான ஷெட் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் இருக்கிறது. செம்மறி ஆடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கிறோம். ஆட்டுக் குட்டிகளையும் முன்பதிவு அடிப்படையில் தேவைப் படுபவர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

சில கலப்பின மாடுகள், தார்பார்க்கர், சாஹிவால் ஆகிய மாடுகள் உள்ளன. தற்போது, நாட்டு மாடுகள் வளர்ப்பில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு அசல் சாஹிவால் மாடுகளை வாங்கி வந்து அதை இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சாஹிவால் மாடுகளில் கிடேரி கன்றுகளை விற்பனை செய்வதில்லை. காளைக் கன்றுகளை மட்டும் முன்பதிவு அடிப்படையில் விற்பனை செய்கிறோம். தார்பார்க்கர் மாடுகளில் கிடேரிக் கன்றுகளை விற்பனை செய்கிறோம். தவிர, வெண்பன்றிக் குட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. கால்நடைகள், தீவன விதைகள், விதைக்கரணைகள் ஆகியவற்றை அரசு நிர்ணயித்துள்ள விலைக்குதான் விற்பனை செய்கிறோம். கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் பண்ணைக்கு வந்தால் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் அனைத்தும் கிடைக்கும்” என்ற மாசிலாமணி, உதவி கால்நடை மருத்துவர் தேசிங்கு ராஜாவை அறிமுகப்படுத்தினார்.

புறக்கடையிலேயே வளர்க்கலாம்!

தொடர்ந்து பேசிய தேசிங்கு ராஜா, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துச் சொன்னார். “நாட்டுக் கோழிகளுக்கு இயற்கை யாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நாட்டுக்கோழிகளை வீடுகள், புறக்கடைகளில் வளர்க்கலாம். வெயில், மழைக்கு ஒதுங்கவும், இரவு நேரத்தில் அடையவும் ஒரு இடம் மட்டும் அமைத்துக் கொடுத்தால் போதுமானது. அதிகாலையில் கூண்டுகளில் இருந்து திறந்துவிட்டால், தானாக மேய்ந்துவிட்டு, மாலை நேரத்தில் கூண்டுக்கு வந்துவிடும். அப்போது கொஞ்சம் கம்பு போன்ற தானியங்களைப் போட்டால் போதும்.
 
வணிக ரீதியான வளர்ப்புக்கு ‘செமி இன்டென்சிவ்’ முறை!

வணிகரீதியாக வளர்க்க விரும்புபவர்கள் கூட அதிக செலவு செய்யத் தேவையில்லை. கோழிகளுக்குச் சாதாரணமான கீற்றுக் கொட்டகையே போதுமானது.

பாதி நேரம் கொட்ட கையிலும், பாதி நேரம் வெளியிலும் கோழிகள் சுற்றித் திரிவதுபோல் ‘செமி இன்டென்சிவ்’ முறையில் வளர்ப்பது நல்லதுஅதற்காக, கொட்டகை யைச் சுற்றி இடவசதிக்கு ஏற்ப, கோழிகள் மேய்ச்சலுக்காகக் கொஞ்சம் இடத்தை ஒதுக்கி நிழல்வலை அமைக்க வேண்டும். நிழல்வலைக்குள் உள்ள மேய்ச்சல் பகுதியில் கம்பு, சோளம், கீரை விதைகளை விதைத்துத் தண்ணீர் தெளித்து வந்தால் செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அவற்றைக் கோழிகள் கொத்தி தின்று கொல்ளும். இந்த முறையில் தீவனச்செலவை வெகுவாகக் குறைக்க முடியும்.

அலகு வெட்டத் தேவையில்லை!

கொட்டகையில் வளர்க்கும் நாட்டுக்கோழிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொத்திக்கொள்வதால் அலகை வெட்டி விடுவார்கள். அலகு வெட்டப்பட்ட கோழிகளுக்கு விலை கிடைக்காது. ஆனால், செமி இன்டென்சிவ் முறையில் அலகு வெட்டத் தேவையில்லை. வெளியே உலவ விடுவதால் கோழிகள் கொத்திக்கொள்வதில்லை” என்றார்.

தொடர்புக்கு, செட்டிநாடு கால்நடைப்பண்ணை,
தொலைபேசி : 04565 283275
மாசிலாமணி, செல்போன்: 94450 32534
தேசிங்குராஜா, செல்போன்: 94437 80530

கோழிக்குஞ்சுகள் பராமரிப்பு!


“நாட்டுக்கோழிகளில் ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளைத்தான் விற்பனை செய்வார்கள். இந்தக்

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

குஞ்சுகளை வாங்கி வந்தவுடன் ஒரு வாரம் வரை புரூடரில் வைத்து வெப்பமூட்ட வேண்டும். பிறகுதான் கொட்டகையில் விட வேண்டும். முதல் 3 வாரம் வரை கடைகளில் கிடைக்கும் குஞ்சு தீவனங்களைக் கொடுக்கலாம். அதற்குப்பிறகு, கம்பு, சோளம், அசோலா கலந்த தவிடு ஆகியவற்றைக் கொடுக்கலாம். கோழிகளுக்கு எப்போதும், குளிர்ந்த நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றாலும், பருவ காலங்களுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசிகளைப் போட வேண்டும். இதன் மூலம் நோய்த்தொற்றுகளைத் தடுத்து இழப்புகளைத் தவிர்க்கலாம்” என்கிறார், தேசிங்கு ராஜா.

தடுப்பூசி... கவனம்!


கால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு அதிகளவு தவிடு கொடுப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ஆடுகளைத் தாக்கும் நோய்களில், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை, ஆட்டுக்கொல்லி நோய், அடைப்பான், நீலநாக்கு நோய் போன்றவை முக்கியமானவை. ஆடுகளுக்கு ஜூன் மாதத்தில் ஆட்டுக்கொல்லி எனப்படும் பிபிஆர் நோய்க்கான தடுப்பூசியும்; ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசியும்; அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசியும் போட வேண்டும். நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசி செம்மறி ஆடுகளுக்கு மட்டும் போட்டால் போதும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆந்த்ராக்ஸ் எனப்படும் அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி, தேவைக்கு ஏற்ப ஆட்டு அம்மைக்கான தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், ஆடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுத்துவிடலாம். ஆட்டுக்குட்டிகளுக்குப் பிறந்த 1, 4, 7-ம் மாதங்களில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குட்டிகளுக்கு 4 சதுர அடியும், பெட்டை ஆடுகளுக்கு 10 முதல் 15 சதுர அடியும், கிடாக்களுக்கு 15 முதல் 20 சதுர அடி இடவசதி இருப்பது போல் கொட்டகை அமைக்க வேண்டியது அவசியம்.

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

வெண்பன்றிகளுக்கு ஆண்டுக்கொருமுறை பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். பன்றிக்குட்டிகளுக்கு 3 மற்றும் 13-ம் நாள் இரும்புச்சத்து ஊசி போட வேண்டும். இரும்புச்சத்து டானிக்கூட கொடுக்கலாம். பன்றிகளுக்குப் பல்வெட்டுவது முக்கியமானது. குட்டிகளுக்குப் பிறந்த 7 நாட்களுக்குள் பக்கவாட்டில் உள்ள கூர்மையான கோரை பற்களை வெட்டிவிட வேண்டும். கறிக்காக வளர்க்கப்படும் ஆண் பன்றிகளுக்கு நான்காவது வாரத்துக்குள் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

ஆலோசனை... பயிற்சி... தீவன விதைகள்... வளர்ப்புக் குட்டிகள்... - அசத்தும் அரசு கால்நடைப்பண்ணை!

100 குஞ்சுகள்...
14 வாரங்கள்...
14 ஆயிரத்து 450 ரூபாய்!
குறைந்த செலவில் நாட்டுக்கோழி வளர்க்கும் முறை தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார், மாசிலாமணி. இதுகுறித்துப் பேசியவர், “ஆய்வுக்காக, சாதாரணக் கொட்டகையில் சோளம், கம்பு ஆகியவற்றை மட்டும் கொடுத்து 100 நாட்டுக்கோழிகளை வளர்த்தோம். அதில் ஐந்து கோழிகள் இறந்துவிட்டன.

14 வாரங்கள் கழித்து அனைத்தும் சேர்த்து உயிர் எடைக்கு 117.8 கிலோ அளவுக்கு இருந்தன. உயிர் எடையாகக் கிலோ 250 ரூபாய் விலைக்கு விற்பனை செய்ததில், 29 ஆயிரத்து 450 ரூபாய் வருமானமாகக் கிடைத்தது. இதில் 15 ஆயிரம் செலவு,
14 ஆயிரத்து 450 ரூபாய் லாபமாகக் கிடைத்தது” என்றார்.

குட்டிகள் விற்பனைக்கு!

செட்டிநாடு கால்நடைப் பண்ணையில் முன்பதிவின் அடிப்படையில் கால்நடைகள், தீவன விதைகள், விதைக் கரணைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடு, கோழி, பன்றி ஆகியவை உயிர் எடை அடிப்படையில்தான் விற்பனை செய்யப்படும். அவற்றின் விலை விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய விலை நிலவரம். விலை மாறுதலுக்குட்பட்டது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism