Published:Updated:

‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’

‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’

#BanGmMustardதுரை.நாகராஜன் - படங்கள்: அ.அருணசுபா

‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’

#BanGmMustardதுரை.நாகராஜன் - படங்கள்: அ.அருணசுபா

Published:Updated:
‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’
‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’

டெல்லிப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியாக வெளியிட, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழ்நாட்டில் 45 இடங்களில் மரபணு மாற்று பயிர்களுக்கும், உணவு வகைகளுக்கும் எதிரான போராட்டங்களும், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாக, சென்னை, தி.நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளி வளாகத்தில்... ‘விதை சத்தியாகிரகம்’ என்ற பெயரில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’ என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் பேசிய ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில், “பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி பருத்தியால், விவசாயிகள் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். தமிழ்நாட்டில் பி.டி பருத்தி வளரவே இல்லை. தற்போது, அப்பருத்தியையும் பூச்சிகள் தாக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு வயலில் உபயோகப்படுத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பக்கத்து வயல்களில் உள்ள பயிருடன் மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடும்போது, பாரம்பர்ய ரகங்கள் அழிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனால், உயிர்ச்சூழல் பாதிக்கப்படும். கடுகின் விதை உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்தால் நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்” என்றார்.

தொடர்ந்து பேசிய திரைப்பட நடிகை ரோகிணி, “மரபணு மாற்றுக் கடுகு இந்தியாவில் நுழைந்தால், அடுத்து 50 வகையான மரபணு மாற்றுப் பயிர்களும் உள்ளே நுழைய வரிசையில் நிற்கின்றன. பி.டி கடுகை கொண்டு வருபவர்களுக்குப் பணம், பலம் ரெண்டுமே இருக்குது. ஆனால், நமக்கான ஒரே பலம் உண்மை. அது ஒன்றுதான் நமக்குத் துணை. எக்காரணம் கொண்டும் பி.டி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குள் வரவிட மாட்டோம். பி.டி-யை முழுமையாக ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், “விதை உரிமை கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குப் போனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதனால், பி.டி கடுகை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு, தனியாக நிபுணர் குழு அமைத்து முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். மத்திய அரசுதான் இவ்விஷயத்தில் அதிதீவிரம் காட்டி வருகிறது. மரபணுக் கடுகுக்கு ஒருமுறை அனுமதி கொடுத்துவிட்டால், வீட்டுக்குள் புலி வந்த கதைதான். தமிழ்நாட்டில் தொடர்ந்து பி.டி பருத்தி பயிர் சாகுபடியால் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறக்கக்  கூடாது” என்றார்.

திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “நம் எதிர்காலம் என்பது அடுத்த தலைமுறைதான்.

‘‘மரபணு மாற்றுக் கடுகை ரத்து செய்’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்களுக்கு ஊட்டும் விஷத்தை நிறுத்த வேண்டும். இன்னும் சில காலங்களில் காற்று, தண்ணீர் எதுவும் இயற்கையாக இருக்காது. அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுட்டுப் போகப் போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால். இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதைப் பார்க்கும்போதெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. சில வருஷங்களாகவே இயற்கை விவசாயத்தில் விளைந்த, சிறுதானிய உணவுகளைத்தான் சாப்பிட்டு வருகிறேன். அப்போதிருந்தே எனக்கு உடலில் வித்தியாசங்கள் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. உண்மையான சுதந்திரம், நம்முடைய உணவை நாமே உற்பத்தி செய்து சாப்பிடுவதில்தான் இருக்கிறது. மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு” என்றார்.

நிறைவாகப் பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “மத்திய அரசின் தேவையற்ற, பாதுகாப்பற்ற மரபணு மாற்று பயிர் முயற்சிகள் இந்திய மக்களின் மீது திணிக்கப் பட்டால்... விவசாயிகளும், நுகர்வோரும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். வெறும் 25% மகசூலை அதிகப் படுத்தத்தான் மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதைவிட அதிக மகசூல் தரும் பாரம்பர்ய விதைகள் நம்மிடம் உள்ளன. அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை” என்றார். இவர்களோடு இயற்கைத் தோட்ட வல்லுநர் அனூப்குமார் பேசினார்.

நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண் காட்சியில்... பாரம்பர்ய, சிறுதானிய  உணவு அரங்குகள், இயற்கை காய்கறிகள், மரக்கன்றுகள், மண் பாண்டங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. தெருக்கூத்து, தப்பாட்டம் என்று பாரம்பர்யத்தைப் போற்றும் வகையில் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism