
காய்கறிச் சாகுபடி, தேனீ வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவை அடங்கிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு, கடந்த அக்டோபர் 2-ம் தேதி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆஃப் சத்தி மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கிய இந்தப் பயிற்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய ஆனைக்கொம்பு ஸ்ரீராம், ‘‘இது பவானி ஆறு பாயும் வளமான பகுதி. ஆனால், தற்போது பருவமழை சரியாகப் பெய்யாமல் விவசாயம் மோசமான நிலையில் இருக்கிறது. இப்படி விவசாயம் செய்ய இயலாத நிலையில் பண்ணைத் தொழில்கள்தான் கைகொடுக்கின்றன. அந்த வகையில், பயனுள்ள பயிற்சி வகுப்புக்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடித்தோட்ட வல்லுநர் கனகராஜ் பேசினார். அடுத்து தேனீ வளர்ப்பைப் பற்றிப் பேசிய முன்னோடிப் பண்ணையாளர் தண்டாயுதபாணி, ‘‘10 இந்திய தேன் பெட்டிகளை


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வைத்தால் ஒரு விவசாயி வருஷத்துக்கு குறைந்தபட்சம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம். 10 பெட்டியில இருந்து வருஷத்துக்கு 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேனோட விலை 500 ரூபாய். இதுமூலமா 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
வருஷத்துக்கு 10 கிலோ மகரந்தம் கிடைக்கும். ஒரு கிலோ மகரந்தத்தோட விலை 2,000 ரூபாய். அது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 10 கிலோ தேன் மெழுகு மூலமா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு கிலோ ராயல் ஜெல்லி 2 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகுது.
இதையெல்லாத்தையும்விட, ஒரு மடங்கு தேன் கிடைச்சா, பயிர்கள்ல 10 மடங்கு மகசூல் அதிகமாகும்’’ என்றார்.
நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துப் பேசிய காட்டுப்புத்தூர் பாலு, நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள் மற்றும் கோழிகளுக்கான கைவைத்திய முறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.