Published:Updated:

பூமித்தாய்க்குப் பேரிழப்பு..!

பூமித்தாய்க்குப்  பேரிழப்பு..!
பிரீமியம் ஸ்டோரி
பூமித்தாய்க்குப் பேரிழப்பு..!

‘அறச்சலூர்’ ரா.செல்வம்

பூமித்தாய்க்குப் பேரிழப்பு..!

‘அறச்சலூர்’ ரா.செல்வம்

Published:Updated:
பூமித்தாய்க்குப்  பேரிழப்பு..!
பிரீமியம் ஸ்டோரி
பூமித்தாய்க்குப் பேரிழப்பு..!
பூமித்தாய்க்குப்  பேரிழப்பு..!

ஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் 1928-ம் ஆண்டில் பிறந்த பில் மோலிசன், சிறு வயதிலேயே இயற்கை மேல் கொண்ட ஆர்வத்தால், பள்ளிப்படிப்பை விட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார். மீன் பிடிக்கும் தொழிலுக்குச் சென்றவர், ஒரு கட்டத்தில், கானக உயிர்களின் இயல்புகளைக் கவனித்துப் பதிவு செய்யும் கணக்கெடுப்பாளர் பணியில் சேர்ந்து காடுகளுக்குள் பயணிக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகுதான், மனிதகுலம் தமது அப்பட்டமான சுயநலத்துக்காகப் பூமியைச் சிதைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

தொடர்ந்து, விலங்குகள் குறித்த ஆய்வுப்பணிகளோடு, மனோதத்துவம் மற்றும் சுற்றுச்சூழலியலையும் படித்த மோலிசன், ஹோபர்ட் பல்கலைக்கழகத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அங்கு, ‘சூழல் மனோதத்துவம்’ என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினார்.

ஒருகட்டத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர் வேலையின் மீது வெறுப்படைந்து மனித சஞ்சாரம் இல்லாத காட்டில், வீட்டை அமைத்துக் கொண்டு அஞ்ஞாத வாசமிருக்கத் தொடங்கினார். அப்போது அவரது வயது 50. அப்போதுதான் வனங்களில் வாழும் பழங்குடி மக்கள் குறைவான இடத்தில், தங்களின் தேவைக்கேற்ற உணவை உற்பத்தி செய்வதைக் கவனித்தார். இதிலிருந்து நிரந்தர வேளாண்மை குறித்த புதிய புரிதல் அவருக்குத் தோன்றியது. அதன் விளைவாக நிரந்தர வேளாண்மைக்கான ‘பெர்மாகல்ச்சர் ஏ டிசைனர்ஸ் மேனுவல்’ (Permaculture A Designer’s Manual) என்ற விரிவான புத்தகத்தை எழுதி, அதைப் பாடத்திட்டம் ஆக்கினார். அதுதான் இன்று உலகெங்கும் நிரந்தர வேளாண்மைக்கான பாடத்திட்டமாக உள்ளது.

இப்பாடத்தைச் சொல்லிக் கொடுக்கத் தனி ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தார் மோலிசன். அந்த மையத்தின் மூலம் இதுவரை, 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அவர் இதற்காக எந்தச் சமயத்திலும் அரசின் உதவியை நாடவில்லை. பாடப் புத்தகங்கள், பயிற்சிகள், கட்டுரைகள் போன்றவற்றின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டே நிரந்தர வேளாண்மை இயக்கத்தை வளர்த்தெடுத்தார். 

மண்வளம், தண்ணீர்வளம், உயிரினச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொண்டே உலக மக்கள் அனைவருக்குமான உணவு, உடை ஆகியவற்றை விளைவிக்க முடியும் என்று உலகெங்கும் சுற்றி நிரூபித்தவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் இவரைப் பற்றியும், இவரது பெர்மாகல்ச்சர் முறை குறித்தும் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இயற்கையை அந்தளவுக்கு நேசித்து வந்த பில் மோலிசன்(88), கடந்த செப்டம்பர் 24-ம் தேதி இயற்கையோடு கலந்துவிட்டார். இவரது மறைவு, பூமித் தாய்க்கே பேரிழப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism