Published:Updated:

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வு!

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத்  தொழில்நுட்பத் தீர்வு!
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வு!

#VikatanHackathon 2016 ஞா.சக்திவேல் முருகன், படங்கள்: தி.குமரகுருபரன்

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வு!

#VikatanHackathon 2016 ஞா.சக்திவேல் முருகன், படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத்  தொழில்நுட்பத் தீர்வு!
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வு!
விவசாயிகளின் பிரச்னைகளுக்குத்  தொழில்நுட்பத் தீர்வு!

விவசாயம், சுற்றுச்சூழல், சமுதாய மேம்பாடு போன்ற துறைகளில் உள்ள பிரச்னைகளைக் களைவதில், இளைஞர்களின் புதிய யோசனைகளை அறியும் விதமாக... விகடன் சார்பாக, சென்னை, தரமணியில் உள்ள ‘தாட்ஸ்வொர்க்ஸ்’ நிறுவனத்தில் ‘விகடன் ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி, செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, 380 குழுக்கள் தங்களுடைய திட்டங்களை அனுப்பி இருந்தன. அவற்றில் இருந்து 40 குழுக்களைத் தேர்ந்தெடுத்து, அக்குழுக்களின் திட்டங்களைச் செயல்படுத்திக்காட்ட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்கள், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய மேம்பாடு ஆகியவை குறித்த பிரச்னைகளுக்குப் புதிய கோணத்தில் பல யோசனைகளை முன்வைத்தனர்.

இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் விவசாயிகளே விளை பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான மொபைல் ஆப்ஸ், ஆட்கள் இல்லாமல் நீர்ப் பாசன முறை, மாடித்தோட்டத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முறை, நகரவாசிகளுக்கான விவசாயச் சுற்றுலா என விவசாயம் சார்ந்த பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. 

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத்  தொழில்நுட்பத் தீர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகில் உள்ள மலையன்பாளையத்தைச் சேர்ந்த பிரேம்குமாருக்கு முதல் பரிசான 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இவர், குறைந்த செலவில் ஸ்மார்ட் போன் மூலமாகத் தண்ணீர் பாய்ச்சும் ஆப்ஸை வடிவமைத்திருந்தார். இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய், வேலூரிலிருந்து கலந்துகொண்ட சிவக்குமார் குழுவினருக்கு வழங்கப்பட்டது. இவர்கள், தண்ணீர் சேமிப்புக்கான திட்டத்தை முன்வைத்திருந்தனர். சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களில் சந்தைப்படுத்தும் வகையில் ஆப்ஸ் வடிவமைத்திருந்த ‘கிராமணி’ குழுவினருக்கும், ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் வகையிலான தொழில்நுட்பத்தைத் தயாரித்திருந்த ‘ஸ்மார்ட் ஹெல்மெட்’ குழுவினருக்கும் மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

முதல் பரிசு பெற்ற பிரேம்குமார், “நான் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எங்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் 25 ஏக்கருக்கு மேல் தோட்டம் இருக்கிறது. வயல் முழுவதும் தண்ணீர் பாய்ச்சுவதில் பல பிரச்னைகள் இருந்தன. எப்போது கரண்ட் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதிலும் சிக்கல். வேலையாட்களை நம்பியேதான் இருக்க வேண்டிய சூழ்நிலை. அவர்களும் சரியாகச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். தண்ணீர் பாய்ச்ச ‘ஆட்டோமேட்டிக் சிஸ்டம்’ இருந்தாலும் அதன் விலை அதிகமாக இருந்தது. தவிர அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அதை மனதில் வைத்துதான் ஸ்மார்ட் போன் மூலமாகத் தண்ணீர் பாய்ச்சும் வசதியை ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கினேன். இதன் மூலம், நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, மண்ணின் ஈரப்பதம் அறிந்து தண்ணீர் பாய்ச்ச முடியும். குரல் கட்டளையின் மூலமே இயக்க முடியும். விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இதைப் பரவலாக்குவதுதான் எனது அடுத்த இலக்கு” என்றார்.

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத்  தொழில்நுட்பத் தீர்வு!

நிறைவாகப் பேசிய விகடன் நிறுவனத்தின் தலைவர் பா. சீனிவாசன், “ஒன்பது மாதம் கடந்து பத்தாவது மாதத்தில் சுகப்பிரசவம் என்பார்கள். அதுபோல் இந்த விழாவும் சுகப்பிரசவமாகி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் சமுதாயத்தின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் புதுமையான ஐடியாக்களைச் செயல் வடிவம் கொடுப்பவர்களிடம் விகடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும். இளைஞர்கள் சமூகப் பிரச்னைகளை அடையாளம் கண்டு அதனைத் தீர்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதற்கு வாழ்த்துகள்” என்றார்.

தேர்வு செய்த தேர்வுக் குழு!

விகடன் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 380 குழுக்கள் தங்களுடைய திட்டங்களை அனுப்பி இருந்தனர்.

கலந்துகொண்ட 40 குழுக்களில் 12 குழுக்கள் இறுதி நிலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடைய திட்டத்தைச் செயல்படுத்திக் காண்பிக்க 50 மணி நேரம் வழங்கப்பட்டது. இக்குழுக்களில் இருந்து சிறந்த குழுக்களை ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக், மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி முருகவேல் ஜானகிராமன், ஆரஞ்ச் ஸ்கேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுரேஷ் சம்பந்தம், மேத்தா மருத்துவமனையின் இயக்குநர் சமீர் மேத்தா, ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் மேலாண்மை ஆலோசகர் பத்மா சந்திரசேகரன் போன்றவர்கள் தேர்வு செய்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism