Published:Updated:

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2016கண்காட்சி ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2016கண்காட்சி ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முதல்முறையாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. அதன் அமோக வெற்றியைத்தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றன, ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. தற்போது மூன்றாவது முறையாக, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மஞ்சள் மாநகர் ஈரோட்டில், வ.உ.சி திடலில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன. தினமும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய வல்லுநர்களின் உரை வீச்சுகள் இங்கே இடம்பெறுகின்றன.

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

கண்காட்சி துவங்கிய செப்டம்பர் 9-ம் தேதி, கருத்தரங்கின் மதிய அமர்வில் ‘பயிர் சாகுபடியில் நுண்ணுயிரிகளின் பங்கு’ என்கிற தலைப்பில் உரையாற்றினார், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நுண்ணுயிரிகள்தான் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை. நுண்ணுயிரிகள் மிகவேகமாக அழிந்து வருகின்றன. இவை மண்ணில் இல்லாதபட்சத்தில், ஒரு தாவரம்கூட வாழ முடியாது. தாவரங்கள் அழிந்தால், கால்நடைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களும் அழிய நேரிடும். அதனால், இயற்கையாகவே மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளைக் காப்பாற்றிப் பெருக்க வேண்டியது, அவசியம். வளமான எருவை மண்ணுக்குக் கொடுக்கும்போது மண்புழுக்கள் பெருகும். அதனால், நுண்ணியிரிகளும் பெருகும். ரசாயன உரங்களை இட்டால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்து மண் மலடாகும். ஏற்கெனவே மண்ணை மலடாக்கி விட்டோம். தற்போது அதை உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு போகத்துக்கும் ஏக்கருக்கு 5 டன் அளவு ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரத்தைக் கொடுக்க வேண்டும். நுண்ணியிரிகளுக்குக் குப்பை உரங்கள்தான் ஆகாரம். பூமி சூடாகாமல் இருக்க வேண்டுமானால், நிலத்தின் மண் தெரியாதபடி பசுமைப் போர்வையால் பூமியை மூடி வைக்க வேண்டும். விவசாய நிலங்களில் 30 அடி இடைவெளியில் ஏதாவது குறுகிய காலத்தில் பலன் கொடுக்கும் மரங்களை வளர்க்கலாம். பழ மரங்கள், சூபாபுல், அகத்தி போன்ற மரங்களை நடலாம்.

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

இயற்கை விவசாயத்தை விஞ்ஞான ரீதியாகச் செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களை விவசாயிகள் அவசியம் பயன்படுத்த வேண்டும். இவற்றைத் தொழுவுரத்தில் கலக்கும்போது, அந்த நுண்ணுயிரிகள், 1 மணி நேரத்தில், 2 ஆயிரம் மடங்காகப் பெருகி மண்ணைச் சத்துள்ளதாக்கும். அதேபோல நுண்ணுயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்தால் பங்கமில்லாத மகசூல் கிடைக்கும்.
 
அசோஸ் பைரில்லம் என்ற உயிர் உரம் 1929-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் உள்ள கூட்டுப் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பயன்பாடு இயற்கை விவசாயத்துக்கு முக்கியமானது.

நல்ல விளைச்சலுக்கு ஆதாரமான அசோஸ் பைரில்லத்தை, நம் நாட்டில் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சோவியத் ரஷ்யா உடைந்துபோனதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமல்ல, ரசாயன உரமும்தான்.

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

அசோஸ்பைரில்லம் கண்டு பிடித்திருந்தாலும், கூட்டுப்பண்ணைகளில் அளவுக்கு மிஞ்சிய ரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. இதனால் விளைச்சலில் சரிவு ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரம் கீழ் நோக்கிச் சென்றது. சோவியத் ரஷ்யா துண்டு துண்டானது.

இ.எம் என்று அழைக்கப்படும் திறன் நுண்ணுயிரி விவசாயத்துக்கு மட்டுமல்ல, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு எனப் பல வகையில் பயன்படுகிறது. நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி, ஒரு சென்ட் நிலத்தில் ஒரு மாதத்தில் 9 டன் மட்கிய உரத்தைத் தயாரிக்க முடியும்.  ஏராளமான இயற்கைத் தொழில்நுட்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன’’ என்றார்.

தொடர்ந்து ‘பாரம்பர்ய நெல் விவசாயமும் இயற்கை உரத் தயாரிப்பும்’ என்கிற தலைப்பில் பேச மேடையேறினார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘முன்னோடி ஜீரோ பட்ஜெட் விவசாயி’ தாந்தோணி.

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

“நான் 15 ஏக்கர்ல நெல் விவசாயம் செய்யறேன். 1970-ம் வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா காலத்துல ஏக்கருக்கு 50 மூட்டை நெல் எடுத்தோம். அப்புறமா எங்க வயலுக்கு வந்த கிராம சேவகர் இலவசமா கொடுத்த ‘மாதிரி ரசாயன உரத்தை’ வாங்கி ஒரு வயலுக்கு மட்டும் போட்டுப்பார்த்தோம். குறைஞ்ச உரத்துல நெறைஞ்ச மகசூல் கிடைச்சதுல மயங்கி, படிப்படியா ரசாயன உரத்துக்கு மாறினோம். எங்களப்போல ஊர் நாட்டில இருந்த பெரும்பாலான விவசாயிங்க அதுக்கு மாறினாங்க. இயற்கையா கிடைச்ச தொழுஉரத்தை மறந்தோம்.

ஏரி, புறம்போக்கு, வேலிகள்னு வளர்ந்து கிடந்த பசுந்தாள் உரங்களையும் புறக்கணிச்சோம். போகத்துக்குப் போகம் ரசாயன உரத்தின் அளவு கூடுச்சு. மண்ணு தன்னோட மகிமைய இழந்திடுச்சு. விளைவு என்னாச்சு? ஏக்கருக்கு 50 மூட்டையா இருந்த நெல் வெளைச்சல், 20 மூட்டைங்கிற அளவுல வந்திடுச்சு.

மறுபடியும் பாரம்பர்ய விவசாயத்துக்கு மாறணும்னு ஆசைப்பட்டு வழி தெரியாமல் இருந்தப்போதான், சுபாஷ் பாலேக்கர் தமிழ்நாட்டுக்கு வந்தார். ‘பசுமை விகடன்’ மூலமா தெரிஞ்சுக்கிட்டு ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்துகிட்டேன். ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்கிற தொழில்நுட்பம் என்னை மறுபடியும் 1970-ம் வருஷத்துக்கு முந்தைய பாரம்பர்ய விவசாயத்துக்கு அழைச்சுட்டுப் போனது.

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

இப்ப 7 வருஷமா என்னோட 15 ஏக்கர் நிலத்துலயும் செலவில்லா விவசாயமான ஜீரோ பட்ஜெட் முறையைத்தான் கடைப்பிடிக்கிறேன். என்னோட மண்ணுல ரசாயன உரம் போடுறதை சுத்தமா நிறுத்திட்டேன். ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம்னு கொடுக்கத் தொடங்கியதில், குறைஞ்சு போயிருந்த நெல் வெளைச்சல் படிப்படியா ஒசந்திடுச்சு.

இப்ப ஏக்கருக்கு 50 மூட்டை நெல் அறுவடை பண்றேன். 5 ஆயிரம் வருஷத்துக்கு முந்தி நம் நாட்டில 1 லட்சம் நெல் ரகங்கள் இருந்திச்சாம். தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரம் நெல் ரகங்கள் இருந்ததுனு சொல்றாங்க. ஆனா, இப்ப எங்கிட்ட 7 வகைப் பாரம்பர்ய நெல் ரகங்கள்தான் இருக்கு. அதுல கிச்சிலி சம்பா, குள்ளக்கார், திருநெல்வேலி கிச்சிலி சம்பா, மாப்பிள்ளைச் சம்பானு பயிர் செய்யுறேன்.

ஜீரோபட்ஜெட் விவசாயத்துல ஏக்கருக்கு 50 மூட்டை நெல் வெளைச்சல் காணுற நான், 100 மூட்டையா மகசூலை ஒசத்தணும்னு முயற்சி எடுத்திட்டுருக்கேன்.

சில வருஷத்துல எடுத்தும் காட்டுவேன். எதிர்வரும் சந்ததிகளுக்கு நாம் விட்டுப்போற சொத்து நல்ல மண்ணாகத்தான் இருக்கணும். அடுத்த தலைமுறை ஆரோக்கியமா வாழ அது ஒண்ணுதான் வழி” என்றார்.

மற்ற கருத்துரையாளர்களின் உரை வீச்சுகள் அடுத்த இதழில்...

விளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்!

‘‘சர்வதேசத் தரத்தில் கண்காட்சி!’’

சென்னையில் இருந்து வந்து கண்காட்சியில் கலந்துகொண்ட சாய்பிரகாஷ்-பிரவந்தி தம்பதி, “நாங்க ரெண்டுபேரும் இயற்கை ஆர்வலர்கள். எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் செய்யணும்னு இருக்கோம். அதுக்கான தகவல்களைத் தெரிஞ்சுக்கதான் குடும்பத்தோட வந்திருக்கோம். நாங்க எதிர்பார்த்து வந்ததுக்கு அதிகமாகவே பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டோம். குறிப்பா கண்காட்சி அரங்கு அத்தனையும், சர்வதேச தரத்துல இருந்திச்சு.

விவசாயம், கால்நடை வளர்ப்புச் சம்பந்தமாக நாங்க தேடி வந்த புத்தகங்கள் எல்லாம், விகடன் பிரசுரம் மூலமா ஒரே இடத்துல கிடைச்சது, சந்தோஷமான விஷயம். கருத்தரங்கும் ரொம்பப் பயனுள்ளதா இருந்திச்சு. இயற்கை விவசாயத்தை தெளிவா புரிய வெச்சிருக்கு இந்தக் கண்காட்சி. அடுத்து, எந்த ஊர்ல பசுமை விகடன் கண்காட்சி நடத்தினாலும் கண்டிப்பா வருவோம்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism