Published:Updated:

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...
பிரீமியம் ஸ்டோரி
5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

பட்டணத்தில் ஒரு பசுமைப் பண்ணை!மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

பட்டணத்தில் ஒரு பசுமைப் பண்ணை!மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...
பிரீமியம் ஸ்டோரி
5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...
5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அதிகரிக்கும் இடுபொருள் செலவு, விளைபொருளுக்கு நிலையான விலையின்மை... எனப் பல காரணங்களால், விவசாய நிலங்களெல்லாம் வீட்டுமனைகளாகிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையிலும்கூட, விளைநிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்ற மன உறுதியுடன், நகர எல்லைப்பகுதிக்குள் விவசாயம் செய்து வருகிறார் கோயம்புத்தூர், உக்கடம் பகுதியைச் சேர்ந்த சொர்ணம் ராமசாமி.
 
அடுக்குமாடிக் குடியிருப்புகளும், ஆடம்பர அங்காடிகளும் நிறைந்த நகரச்சூழலில் பசுமை கட்டி நிற்கிறது, இவரது நிலம். வாழை, வெங்காயம், கத்திரி, மிளகாய், புடலை, தக்காளி, பீர்க்கன் என்று அணிவகுத்து நிற்கின்றன, பயிர்கள். தோட்டத்தில் பயிர்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த சொர்ணம் ராமசாமியைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் மகிழ்ச்சியாகப் பேசத்தொடங்கினார், சொர்ணம்.

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காணாமல் போன கால்வாய்கள்!

“இங்க 6 ஏக்கர் நெலம் இருக்கு. 30 வருஷமா இதுல விவசாயம் செஞ்சிட்டிருக்கோம். ஒரு காலத்துல நொய்யல் குளம்(நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் குளம்) பாசனத்துல நெல், கரும்புனு முப்போகம் வெளைஞ்ச பூமி. எங்க பூமிய ஓட்டி நூத்துக்கணக்கான ஏக்கர்ல நஞ்சை விவசாயம் நடந்திச்சு. ஆனா, காலப்போக்குல நகரம் விரிவடைஞ்சதுல, விளைநெலங்க எல்லாம் வீட்டுமனைகளாயிடுச்சு. முப்போகம் பாசனத்துக்கு நொய்யல் குளத்துல இருந்து தண்ணீர் கொண்டு வந்த வாய்க்கால்... இப்போ காணாமப் போயிடுச்சு.

அதுலதான், கட்டடங்கள், காம்பவுண்ட் சுவரெல்லாம் நிக்குது. ஆனாலும், நான் விவசாயத்தை விட்டு விடாம கிணத்தை நம்பி விடாப்பிடியா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். நானும் ஆரம்பத்துல ரசாயன உரங்களைத்தான் பயன்படுத் திட்டிருந்தேன். கோயம்புத்தூர்ல நடந்த சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் விவசாயப் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டதுக்கு அப்புறம்தான், நாட்டு மாடுகளை வாங்கி ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஆரம்பிச்சேன். படிப்படியா செஞ்சு இப்போ முழு ஜீரோபட்ஜெட் பண்ணையா மாத்திட்டேன். நான் வெற்றிகரமா விவசாயம் செய்றதுக்குக் காரணம், ஜீரோ பட்ஜெட் முறைதான். ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்றதால மண் ரொம்ப நல்லா மாறியிருக்கு. மண்ணுல எங்க கை வெச்சாலும் மண்புழுக்களை அள்ள முடியும்” என்ற சொர்ணம் தோட்டத்தில் உள்ள பயிர்களைக் காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

மாநகர எல்லைக்குள் சாகுபடி நிலம்!


“3 ஏக்கர்ல 150 தென்னை மரங்கள் இருக்கு. 15 வயசு கொண்ட இந்த மரங்கள, இளநீர் விற்பனைக்காக வளர்த்திட்டு இருக்கோம். இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல பலனுக்கு வர்ற மாதிரி 60 கன்னுகளும் இருக்கு. ஒரு ஏக்கர்ல 650 மொந்தன் வாழை மரங்கள் இருக்கு. அறுவடை முடிஞ்சு இப்போ மறுதாம்பு வளர்ந்துட்டு இருக்கு. அடுத்த ஒரு ஏக்கர்ல தீவனப்பயிர், காய்கறிகள், கீரை இருக்கு. மீதி ஒரு ஏக்கர் நெலத்துல விவசாயம் இல்லை. சுழற்சி முறையில சாகுபடி செய்றதுக்காக ஒரு ஏக்கர் சும்மா இருக்குற மாதிரி விட்டுடுவேன். தோட்டமும், வீடும் கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் இருக்குறதால காய்கறி, கீரை, இளநீர் விற்பனைக்கு எனக்குப் பிரச்னையேயில்லை. நேரடியா நானே விற்பனை செஞ்சிடுறேன்.

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

சுழற்சி முறையில் சாகுபடி!

சுழற்சி முறையில சாகுபடி செய்றதால வருஷம் முழுக்க, வெங்காயம், முள்ளங்கி, பீட்ரூட், தட்டை அவரை, கத்திரி, வெண்டை, செங்கீரை, பாலக் கீரை, சிறுகீரை, அரைக்கீரைனு வந்துட்டே இருக்கும். காய்கறிகளைப் பத்து சென்ட் அளவுல பிரிச்சு சாகுபடி செய்றேன். கீரைகளை தலா அஞ்சு சென்ட் அளவுல பிரிச்சு சாகுபடி செய்றேன். ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கன ஜீவாமிர்தம், நீம் அஸ்திரா, அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் எல்லாத்தையும் நானே தயாரிச்சுதான் பயிர்களுக்குக் கொடுக்கிறேன்” என்ற சொர்ணம் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆண்டுக்கு ரூ. 6 லட்சம்!

“அனைத்து வகையான கீரையிலும் சேர்த்து, தினமும் சராசரியா 50 கட்டுகள் கிடைக்குது. ஒரு கட்டு 8 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில வருஷத்துக்கு 18 ஆயிரம் கீரைக் கட்டுகள் மூலமா 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சிடும். காய்கறிகள் மூலமா மாசம் 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகும். அந்த வகையில வருஷத்துல 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. 650 வாழை மரங்கள் இருந்தாலும், 600 தார்கள்தான் கிடைக்கும். ஒரு தார் 150 ரூபாய்க்குக் குறையாம விற்பனையாகும். வாழை மூலமா வருஷத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தம் 150 தென்னை மரங்கள் காய்ப்புல இருக்கு.

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

பெரும்பாலும் இளநியாவே வெட்டி விற்பனை செஞ்சுடுவோம். மழைக் காலங்கள்ல இளநி வாங்க மாட்டாங்க. அந்தச் சமயங்கள்ல மட்டும் தேங்காயா முற்றவிட்டு வெட்டுவோம். இளநியா விற்பனை செஞ்சா ஒரு இளநிக்குச் சீஷனைப் பொறுத்து 13 ரூபாய்ல இருந்து 15 ரூபாய் வரை விலை கிடைக்கும். தேங்காயா விற்பனை செய்றப்போ ஒரு காய்க்கு, 8 ரூபாய்ல இருந்து 10 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும். எப்படி விற்பனை செய்தாலும் ஒரு காய்க்கு சராசரியா 10 ரூபாய் விலை கிடைச்சுடும். 150 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 25 ஆயிரம் காய்கள் கிடைக்கும். இதுமூலமா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தமா பார்க்கும்போது 5 ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 6 லட்ச ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைச்சிடும். வேலையாட்கள், சம்பளம், பராமரிப்பு, இடுபொருள் செலவு, போக்குவரத்து எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கு. அதுபோக, வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் லாபமா நிக்கும்” என்ற சொர்ணம் நிறைவாக,

“இந்தப்பகுதியில ஒரு ஏக்கர் நிலம் பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகுது. மாநகராட்சி எல்லைக்குள் பல தொல்லைகளைச் சமாளிச்சுதான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கு. ஆனா, வருமானம்னு பார்த்தா இது குறைவுதான்.

முழு இயற்கை முறையிலதான் விளைவிக்கிற காய்கறி, இளநியை வாங்கி சாப்பிடுறதுக்கு மக்களும் முன்வரணும். அப்பதான் எங்களைப் போன்ற இயற்கை விவசாயிகள் ஓரளவுக்காவது வளர முடியும். இப்போதைக்கு உழவர் சந்தை, மார்க்கெட்னுதான் விற்பனை செய்றேன். இந்த வருமானத்தை இன்னும் அதிகப்படுத்துற முயற்சிகள்ல இறங்கியிருக்கேன். இயற்கை விளைபொருட்களோட விலை அதிகம்னு நினைக்காம, நஞ்சில்லாத உணவுப் பொருளை சாப்பிடறோம்ங்கற உணர்வு மக்களுக்கு வர வேண்டும்” என்று நம்பிக்கையுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சொர்ணம் ராமசாமி, செல்போன்: 99944 44942

22 நாட்களில் அறுவடை!

கீரைச் சாகுபடி குறித்து சொர்ணம் சொன்ன விஷயங்கள் இங்கே...


“கீரை குறுகிய காலப் பயிர். 22 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். நிலத்தை நன்கு உழுது ஒரு ஏக்கருக்கு 7 டன் என்ற கணக்கில் தொழு உரத்தைக் கொட்டி ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 அடி அகலம், 12 அடி நீளம் இருக்குமாறு பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு வகைக் கீரை என விதைகளைத் தூவி, குச்சி மூலம் கிளறி விதைகள் மண்ணுக்குள் போகும்படி செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 6 நாட்களில் செடிகள் முளைத்து வரும். அந்தச் சமயத்தில் களைகளைக் கைகளால் அகற்ற வேண்டும். தொடர்ந்து பாத்திகள் காயாத அளவுக்குப் பாசனம் செய்து வர வேண்டும். விதைத்த 10-ம் நாள், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15-ம் நாள் வடிகட்டிய ஜீவாமிர்தத்தை இலைவழித் தெளிப்பாகக் கொடுக்க வேண்டும். இயற்கை முறை கீரைச் சாகுபடியில் நோய்கள் தாக்குவதில்லை. ஏதேனும் பூச்சிகள் தாக்கக்கூடிய வாய்ப்பு தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி அக்னி அஸ்திரம் கலந்து... கைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை வேளையில் பனிமூட்டம் போலத் தெளிக்க வேண்டும். கீரைகளை ஒரே நேரத்தில் நிலம் முழுவதும் விதைக்காமல் ஒரு பாத்தி, இரண்டு பாத்தி எனப் பிரித்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி விட்டு விதைத்து வந்தால் தொடர்ந்து மகசூல் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

காய்கறிகளுக்கு... 3 அடி இடைவெளியில் பார் வாய்க்கால் அமைத்து, பாரின் இரு புறங்களிலும் நாற்று நடவு செய்ய வேண்டும். செடிகளுக்கான இடைவெளி ஒன்றரை அடி இருக்க வேண்டும். மற்றபடி, அடியுரம் இடுவது, நிலத்தயாரிப்பு, பராமரிப்பு அனைத்தும் கீரைக்கு உள்ளது போலத்தான். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனத்தில் ஜீவாமிர்தம் கொடுத்து வந்தாலே போதுமானது. அக்னி அஸ்திரத்துக்குப் பூச்சிகள் கட்டுப்படவில்லையெனில் பிரம்மாஸ்திரம் தெளிக்கலாம்” என்றார்.

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?

5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம்  - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...

* பசுஞ்சாணம்-10 கிலோ

* பசுமாட்டுச் சிறுநீர்-10 லிட்டர்

*வெல்லம்-2 கிலோ

*பயறு மாவு-2 கிலோ
 
* நிலத்தின் மண்- கைப்பிடி அளவு

மேற்கண்ட ஐந்து பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு, 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து மூடி, நிழற்பாங்கான பகுதியில் 48 மணி நேரம் வைக்கவேண்டும். தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் கடிகாரச்சுற்றில் கலக்கிவிட வேண்டும். இதை வடிகட்டிப் பயிர்களுக்குக் கொடுக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism